Rizz : இந்த ஆண்டுக்கான சொல்லை அறிவித்த Oxford University - ரிஸ்ஸுக்கான அர்த்தம் தெரியுமா?

Rizz என்பது சமூக வலைத்தளங்களில் வளர்ந்து வரும் சொல். சமூக வலைத்தளங்கள் எவ்வாறு மொழியில் மாற்றத்தை மிகவேகமாக ஏற்படுத்துகின்றன என்பதை இந்த ஆண்டின் தேர்வு காட்டுகிறது.
Rizz
Rizztimepassonline
Published on

Gen Z தலைமுறையால் அதிகம் பயன்படுத்தப்படும் வார்த்தைகளில் ஒன்றான Rizz என்ற சொல்தான் இந்த ஆண்டிற்கான வார்த்தையாக ஆக்ஸ்போர்டால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. 

Rizz என்றால் என்ன?

Gen Z ஸ்லாங்கில் "நடை, வசீகரம், கவர்ச்சி" அல்லது "காதல் அல்லது துணையை ஈர்க்கும் திறன்" என்பதாகப் பொருள்படும். அடிப்படையில் இது திறமை, வீரம், கவர்ச்சி மற்றும் ஈர்க்கும் திறன் என்ற பதத்தில் பயன்படும் 'game' என்பதின் நவீனப்பதமே ஆகும்.

இந்தாண்டில் மனநிலை, நெறிமுறைகள் மற்றும் ஆர்வத்தைக் குறிக்கும் எட்டு சொற்களிலிருந்து இந்த வார்த்தை தேர்ந்தெடுக்கப்பட்டது.

"பொது வாக்கெடுப்பின் அடிப்படையில் ஆக்ஸ்போர்டு அகராதியியலாளர்கள் இந்த இறுதி முடிவை எடுத்துள்ளனர்" என்று நியூயார்க் டைம்ஸ் அறிக்கை தெரிவித்துள்ளது‌. Swiftie, Beige flag, situationship, prompt மற்றும் de-influencing போன்ற சொற்களும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

ஆக்ஸ்போர்டின் கூற்றுப்படி, ரிஸ் என்ற சொல்  2022இல் தான் முதலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த சொல் பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் ஹோலண்ட், "I have no Rizz, whatsover I have limited Rizz" என்று Buzzfeed க்கு அளித்த பேட்டி அளித்தார். அதற்குப் பிறகே இச்சொல் வைரலாகி, இணையதளத்தில் சரமாரியாக மீம்ஸ்கள் குவியத்தொடங்கியது.

Rizz
Tamil Cinema : Vaarisu, Jailer, Vikram, PS 1 - கூட்டணி போட்டு வென்ற படங்களின் லிஸ்ட் !

ஆக்ஸ்போர்டின் மொழிகள் தலைவர் காஸ்பர் கிராத்வோல், "Rizz என்பது சமூக வலைத்தளங்களில் வளர்ந்து வரும் சொல். சமூக வலைத்தளங்கள் எவ்வாறு மொழியில் மாற்றத்தை மிகவேகமாக ஏற்படுத்துகின்றன என்பதை இந்த ஆண்டின் தேர்வு காட்டுகிறது. இணையத்தில் பயன்படுத்தப்படும் இது போன்ற சொற்கள் பெரும்பான்மையாகப் பயன்படுத்தப்படுவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று இவை கேளிக்கையாக இருப்பதுதான். இவற்றை நம் பேச்சில் பயன்படுத்தும்போது சிறு மகிழ்ச்சியும் கிடைக்கிறது என்பதுதான்" என்று தெரிவித்துள்ளார்.

போட்டியின் இறுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று வார்த்தைகளில் swiftie என்பது ஆங்கிலப் பாடகர் டெய்லர் ஸ்விஃப்ட் ரசிகர்களைக் குறிக்கும். Prompt என்பது AI தொழில்நுட்பத்தில் பயன்படுத்தப்படும் உள்ளீடுகளைக் குறிக்கும். De influencing, Parasocial, Beige flag, Heat dome போன்ற சொற்களும் பொது வாக்கெடுப்பில் இடம்பெற்றன. 

- ஆ.சு.ரிதன்யா சாருமதி.

Rizz
Tamil Cinema வின் சேடிஸ்ட் வில்லன்கள் - மிரள வைக்கும் ஒரு லிஸ்ட் !

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com