Plant Head : மண்டை மேலே வளரும் புல் - இணையத்தை கலக்கும் வினோத மனிதர் !

தாவர வளர்ச்சிக்கு தலை முடி சிறந்த உரம்னு ஆராய்ச்சிகள் காட்டுது.
Plant Head
Plant HeadPlant Head
Published on

பொதுவா நம்ம எல்லாருக்குமே செடி வளர்க்க புடிக்கும். செடிய வளர்க்கும்போது நமக்குள்ள அப்படி ஒரு அமைதி கிடைக்கும். இந்த செடிகள்ல நாம தோட்டத்துல வளர்ப்போம், மாடில வளர்ப்போம், வாசல்ல வெச்சி வளர்ப்போம், அவ்ளோ ஏன் சில செடிகள்ல பெட் ரூம்லயும், சமையல் அறைலயும்கூட வளர்ப்போம். ஆனா, மண்ட மேல வளர்த்து பாத்திருக்கிங்களா ??

ஆமா, மண்டையே தான் ! இன்டர்நெட்ட கலக்கிட்டு இருக்க இந்த வீடியோல ஒரு முதியவர் அவரோட தலைமேல புல் வளர்த்திருக்குற விஷயத்த பத்தி விவரிக்குறாரு.. இந்த முதியவர் அவரோட தலையில விதவிதமான விதைகள போடுவாராம். கிட்டத்தட்ட 4 வருஷமா இவரு தலையில புல் வளர்க்குறாராம். இந்த புல் மண்ணுல வளரக்கூடிய புல் மாதிரியே பசுமையா இருக்கு.

இந்த வினோதமான மனிதருடைய உச்சந்தலை நாள் முழுவதும் இந்த செடியுடய வேர்கள்ல ஈரப்பதத்துடன் வெச்சிக்க அதிகமான பங்கு வகிக்கிதாம்.. தாவரத்துடய வேர்கள் வளர்ச்சியடையும் போது சில நேரத்துல அந்த வேர்கள் அவருடைய உச்சந்தலைய கிழிக்குறதாவும் தெரிவிக்கிறாரு. இந்த வேர்களை உச்சந்தலையில இருந்து பிடுங்கும்போது, சில நேரங்கள்ல இரத்தத்துடன் வலியும் ஏற்பட்டுறதா சொல்லியிருக்காரு‌.

Plant Head
Barbie : பார்பி படத்தை காண பத்து காரணங்கள் !

இந்த வினோதமான விஷயத்தை பத்தி அறிவியல் ரீதியாக பார்த்தா, "தாவர வளர்ச்சிக்கு தலை முடி சிறந்த உரம்னு ஆராய்ச்சிகள் காட்டுது. தண்ணீர் மற்றும் சூரிய ஒளியைத் தவிர, தாவரங்களுக்கு மண்ணிலிருந்து கிடைக்குற நைட்ரஜனும் ரொம்ப முக்கியம். பல தாவரங்களால மண்ணுல இருக்க நைட்ரஜனைப் பிரித்தெடுக்கமுடியும். இருந்தாலும் சில தாவரங்களால நைட்ரஜன பிரித்தெடுக்கமுடியல.

இப்படி மண்ணுல இருக்க ஊட்டச்சத்துக்கள்ல பிரித்தெடுக்க முடியாததால தான் உரங்கள்ல நாம தேர்ந்தெடுக்குறோம். அந்த வகையில தலைமுடியும் தாவரங்களுக்கு உரமா அமையுது" என்று சொல்லியிருக்கார்.

இந்த மாதிரியான விஷயங்கள் இயற்கைக்கு மாறா நடக்குதா ?? இல்ல இயற்கையே நடத்தி வெக்குதானு தெரியல !!

Plant Head
Oppenheimer : ஓப்பன்ஹைமர் படத்தை காண பத்து காரணங்கள் !

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com