Barbie : பார்பி படத்தை காண பத்து காரணங்கள் !

பார்பின்னு சொன்னாலே நமக்கு எப்பவும் ஞாபகம் வர கூடிய "பார்பி கேர்ள்" பாடல் இந்த படத்துல இடம் பெறாது. ஆனா இந்த பாடலை ரீப்ளேஸ் பண்ற மாதிரி "பார்பி வேர்ல்ட்"னு ஒரு பாடல் வந்திருக்கு.
Barbie
BarbieBarbie

அமெரிக்காவ சேர்ந்த பன்னாட்டு பொம்மை தயாரிப்பு நிறுவனமான மெட்டல் (Mattel) 'பார்பி'ன்ற பொம்மைய உருவாக்குனாங்க. இந்த பொம்மை பெண் குழந்தைகளால அதிகமா விரும்பப்பட்டுச்சு. இந்த பொம்மைய மையமா வெச்சி பார்பி கேரக்டர்ர டெவலப் பண்ணி பலவிதமான பேன்டசி (Fantasy) கதைகள் உருவாச்சி. இந்த பேண்டசி கதைகள் எல்லாமே அனிமேஷன் திரைப்படங்களாதான் இருந்துச்சு. அந்த வகையில கிரிஸ்டோபர் நோலன் இயக்கி இருக்க "ஓப்பன்ஹைமர்" திரைப்படம் வெளியான ஜூலை 21ஆம் தேதியே இந்த படமும் வெளியாகப்போகுது.

இந்த பார்பி திரைப்படத்த பார்ப்பதற்கான 10 காரணங்கள தான் இந்த கட்டுரையில நாம பாக்கபோறோம்.

இந்த பேன்டசி திரைப்படமான பார்பிய கிரெட்டா கெர்விக் இயக்கியிருக்காங்க. பார்பி படத்த எப்பவுமே அனிமேஷன்ல பார்த்த நமக்கு, பார்பியின் முதல் லைவ் திரைப்படம் நல்ல எக்ஸ்பீரியன்ஸ்ஸா இருக்கும்.

பார்பி கதைகள்ல இருக்க முக்கியமான கதாபாத்திரங்களான பார்பி மற்றும் கென் கதாபாத்திரத்த, மார்கோட் ராபி மற்றும் ரியான் கோஸ்லிங் நடிச்சிருக்காங்க. இந்த இரண்டு முக்கிய கதாபாத்திரங்கள்ல இந்த இரண்டு பேரும் நடிச்சிருக்கிறது படத்துக்கு பலமா இருக்கு.

Barbie
பெண் வேடமிட்டு ‘சொதப்பிய’ நடிகர்கள் - ஒரு லிஸ்ட் !

எப்பவுமே கிரிஸ்டோபர் நோலன் படங்கள விநியோகிக்ற வாரன் ப்ரோஸ் நிறுவனம் இந்த முறை பார்பி படத்த கைல எடுத்திருக்காங்க.

கிட்டத்தட்ட 14 வருஷத்துக்கு முன்னாடி இந்த படத்துக்கான அறிவிப்பு 2009ல வெளியாச்சு. அதுக்கப்புறம் நாட்கள் தள்ளி தள்ளி ஜூலை 21 2023ல படம் வெளியாக போறதா சொல்லியிருக்காங்க.

கற்பனையான பார்பி லேண்ட்ல இருந்து பார்பியும் கென்னும் சரியான பொம்மைகள் இல்லனு வெளியேற்றப்படுறாங்க. இந்த இரண்டு பேரும் நிஜ உலகத்துக்கு வந்து தன்னை தானே தெரிஞ்சிக்ற கதைதான் இந்த பார்பி திரைப்படம்.

ஒரு பார்பி, ஒரு கென் இருந்தாலே இந்த படத்த அப்டி பாப்போம்.. ஆனா இந்த படத்துல நிறைய பார்பிகள் நிறைய கென்கள் இருக்காங்க. இந்த படத்துல குழந்தைகளுக்கு கிடைக்கிற பலவிதமான பார்பி பொம்மைகள பிரதிபலிச்சுருக்காங்க. ‌பார்பிய மட்டும் காட்டுனா எப்படின்னு கென்னையும் நிறைய விதங்கள்ல காட்டியிருக்காங்க.

உதாரணத்துக்கு ஜர்னலிஸ்ட் பார்பி ( ரிது ஆர்யா ), இயற்பியல் பார்பி ( எம்மா மேக்கி ) மற்றும் ஜனாதிபதி பார்பி ( இசா ரே) கூட உள்ளனர்.) வெவ்வேறு விதமான மக்கள் தங்கள சார்ந்த ஒருத்தர பாக்கிற மாதிரி தான் இந்த பார்பிகள்ல பாக்கும்போது நினைப்பாங்க. இப்படி கூட்டமான பார்பிகளையும் கூட்டமான கென்களையும் பாக்குறதுக்கு நாம மிஸ் பண்ணுவோமா என்ன ??

Barbie
போலீஸ் சினிமா செய்வது எப்படி?

இந்த முதல் லைவ் ஆக்சன் பார்பி திரைப்படத்துலயும் இசை மிகப்பெரிய பங்கு வகிக்குது. இந்த படத்துல பெரும்பாலான இசை கலைஞர்கள் பெண்களாதான் இருக்காங்க. பார்பின்னு சொன்னாலே நமக்கு எப்பவும் ஞாபகம் வர கூடிய "பார்பி கேர்ள்" பாடல் இந்த படத்துல இடம் பெறாது. ஆனா இந்த பாடலை ரீப்ளேஸ் பண்ற மாதிரி "பார்பி வேர்ல்ட்"னு ஒரு பாடல் வந்திருக்கு. இந்த பாடலுக்கான எதிர்பார்ப்பும் பார்பி திரைப்பட ரசிகர்கள் மத்தியில அதிகமா இருக்கு. பார்பி ரசிகர்கள்ல இசை ரசிகர்கள் இருந்தாங்கன்னா கண்டிப்பா இந்த படத்த மிஸ் பண்ணக்கூடாது.

பார்பின்னு சொன்னாலே நமக்கு பிங்க் கலர் தான் ஞாபகம் வரும். அதே மாதிரி இந்த படத்தில் இருக்க ஒவ்வொரு காட்சிகளும் இடம் பெற்றிருக்கக் கூடிய செட் எல்லாமே பிங்க் நிறத்துலதான் அமைக்கப்பட்டிருக்கு. பேன்டசி திரைப்படம், அதுவும் முதல் லைவ் ஆக்சன் திரைப்படம், பார்பியின் ஃபேவரட் பிங்க் கலர் செட்ல எடுத்திருக்காங்கனா இந்த படத்த பாக்கவேண்டியது அவசியம்தான்.

ஆக மொத்தத்துல முதல் லைவ் ஆக்ஷன் திரைப்படம்.‌ அதுவும் கிரிஸ்டோபர் நோலன்னுடைய ஓப்பன்ஹைமர்க்கு சவால் விட்ற மாதிரி அதே தேதியில வெளியாகப்போற இந்த திரைப்படத்திற்கு உலக மக்கள் மத்தியில வரவேற்பும் அதற்கு அதிகமா எதிர்பார்ப்பும் இருக்கு.

Barbie
Serialகளுக்கு ஏன் சினிமா பெயர்கள் வைக்கிறாங்க? - சிறிய இடைவேளைக்குப் பிறகு | Epi 8

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com