பாண்டிச்சேரி போலீஸ் தொப்பியின் வரலாறு - பழைய பேப்பர் கடை | Epi-8

'ஒரே நாடு...ஒரே மொழி' வரிசையில் சமீபத்தில் பேசிய மோடி 'இந்தியா முழுவதும் ஒரே போலீஸ் யூனிஃபார்ம்!' என்ற விஷயத்தை முன்னிறுத்தி இருக்கிறார். பாண்டிச்சேரி போலீஸ் ஞாபகம்தான் அனிச்சையாக நினைவில் வந்தது.
Pondicherry
PondicherryTimepassonline

'ஒரே நாடு...ஒரே மொழி' வரிசையில் சமீபத்தில் பேசிய மோடி 'இந்தியா முழுவதும் ஒரே போலீஸ் யூனிஃபார்ம்!' என்ற விஷயத்தை முன்னிறுத்தி இருக்கிறார். இது நடைமுறைக்கு வருமா வராதா என்ற கேள்விக்கு முன்னால்,  பாண்டிச்சேரி போலீஸ் ஞாபகம் தான் எனக்கு அனிச்சையாக நினைவில் வந்தது.

கல்லூரி காலத்தில் நான் கடலூரில் படித்தபோது முதன்முதலாக பாண்டிச்சேரி போலீஸ்காரர் ஒருவரை பார்த்தேன். அவர் அணிந்திருந்த ஓங்கி வளர்ந்ததோர் கம்பம் என்பது போல் சற்றே நீளமான சிவப்பு தொப்பி, அத்தனை வினோதமாக இருந்தது. பேக்கரியில் செஃப் மாட்டியதுபோல் இருக்கிறதே என்றும் நினைத்திருக்கிறேன். அப்போது அதனாலேயே அதைப் பார்த்தால் எனக்கு சிரிப்பாகவும் இருந்தது.

இந்த வினோத சிவப்புத் தொப்பிக்குப் பின்னால் என்ன வரலாறு இருக்கிறது என சுருக்கமாக பார்க்கலாமா?

பிரெஞ்சு காலனியாதிக்கத்தின் கீழ் பாண்டிச்சேரி இருந்தபோது, இந்த பளீர் சிவப்பு நிற தொப்பிக்கு 'கெபி' என்று பெயர். 1830-களில் வட மற்றும் தென் ஆப்பிரிக்காவில் பிரெஞ்சு குடியேற்றங்களை பிரெஞ்சு அரசு அமைத்துக் கொண்டிருந்தபோது இந்தத் தொப்பியை தங்கள் வீரர்களுக்காக கண்டுபிடித்தனர். உயரமான ஆப்பிரிக்கர்களுக்கு மத்தியில் தங்கள் வீரர்கள் பளிச்சென தெரிய வேண்டும் என்றுதான். சற்றே நீளமான தொப்பியை அறிமுகப்படுத்தினார்கள். அதற்கு இன்ஸ்பிரேஷன் ஈரானில் இதேபோல ஒரு தொப்பி அங்கு ஆடவரின் கண்ணியத்துக்கு அடையாளமாக பாப்புலர்.

'சாக்கோ' என்ற தொப்பிதான் 'கெபி'க்கு முன்னோடி. கிட்டத்தட்ட கெபி போல இருந்தாலும் எடை அதிகமானது சாக்கோ! நல்ல கருப்பு வண்ணத்தில் தலையில் உயரமாக அணிந்து கொள்ளும் இந்த வட்டத் தொப்பி கௌரவத்தின் அடையாளமாக ராணுவ உயர் பதவியில் இருப்பவர்களுக்கு மட்டும் கொடுக்கப்பட்டு தனித்த அடையாளமாக அது இருந்தது.

Pondicherry
'எம்.ஜி.ஆர் தந்த தங்கச் சங்கிலி!' - பழைய பேப்பர் கடை | Epi 7

கிரீமியப் போரானது ரஷ்யாவுக்கும் ஒருங்கிணைந்த பிரெஞ்சு மற்றும் பிரிட்டன் படையினருக்கும் இடையே நடந்தது என்பதை நம்மில் பலர் அறிவர். 1870-ல் மூன்றாம் நெப்போலியன் தான் இந்த சாக்கோவை பல வண்ணங்களில் வீரர்களுக்கு அணிவித்து அழகு பார்த்தார். அதை காப்பியடித்த அமெரிக்க ராணுவம் அதை தங்கள் அடையாளமாக மாற்றிக் கொண்டது. அங்கு இதை அறிமுகப்படுத்தியவரின் பெயரில் 'மெக்கல்லன் கேப்' என்று அழைக்கப்பட்டது.

கருப்பிலிருந்து தாங்கள் தனித்து தெரிய வேண்டும் என்பதால்தான் சிவப்பு நிற கெபி தொப்பிக்கு பிரெஞ்சு படை மாறியது. பிரான்ஸ் நாட்டின் ராணுவ தளபதியாக இருந்த சார்லஸ் டி காலே தான் கெபி என பெயரிட்டு எடை குறைந்த தொப்பியை அறிமுகப்படுத்தினார்.

கிட்டத்தட்ட தோற்றத்தில் தற்போது பாண்டிச்சேரி போலீஸ் அணிந்திருக்கும் அதே தொப்பியை முதன்முதலில் அணிந்தவர் இவர். மிகப்பெரிய போர்வீரரான அவர் பல வெற்றிகளை பிரெஞ்சுப் படைக்கு தலைமை தாங்கிக் குவித்தவர். மக்களின் செல்வாக்கு பெற்ற தலைவரும் கூட!
அவர் அணிந்த ஆடையும், இந்த கெபி தொப்பியும் அவராலேயே பாப்புலரானது. 20-ம் நூற்றாண்டில் அவரைக் கொண்டாடிய பிரெஞ்சு ராணுவம், அந்த கெபியைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டது.

இனி பாண்டிச்சேரி போகும்போது கெபி என்ற சிவப்புத் தொப்பியைப் பார்த்தால் சிரிக்காமல் மனசுக்குள் சல்யூட் வையுங்கள்!

(தூசு தட்டுவோம்..!)

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com