என்னது 8 மணிக்கு மேல குழந்தை பெற முயற்சிக்க கூடாதா!
ஆமாங்க, பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப், செய்தியாளர்களை சந்தித்த போது, "பாகிஸ்தானில் மக்கள் தொகை அதிகம். அதனால், தம்பதிகள் 8 மணிக்கு மேல் குழந்தை பெற முயற்சிக்க கூடாது"னு சொல்லி இருக்காரு.
கடைகள் எட்டு மணிக்கு மூடப்படுற நாடுல இது மாதிரியான அதிக மக்கள் தொகை இல்ல. அதனால நம்ம நாட்டுலயும் பத்து மணி வரை செயல்படுற கடைகள் எல்லாத்தையும் எட்டரை மணிக்கே மூடணும். அப்பதான் நம்ம நாட்டு மக்கள் தொகையும் கட்டுக்குள் இருக்கும். இந்தத் திட்டம் தேசத்தின் முழு வாழ்க்கை முறை பழக்கவழக்கங்களை மாற்றி ரூ.60 பில்லியன் வரை சேமிக்கும் அப்படின்னு சொல்லி இருக்காரு.
பாகிஸ்தான் பொருளாதார ரீதியாக நிறைய அடிவாங்கி இருக்கும் இந்த நிலையில பாகிஸ்தானுடைய பாதுகாப்பு அமைச்சரே இந்த மாதிரி சொன்னது பெரிய சர்ச்சையையும் கேளிக்கையையும் ஏற்படுத்தி இருக்கு. அது மட்டும் இல்லாம கமெண்ட்ஸ் பிரியர்கள் எல்லாம் ட்விட்டரில் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
கமென்ட்ஸில் பலர் “இது பாகிஸ்தான் அரசின் ஆராய்ச்சியின் அற்புதமான கண்டுபிடிப்பு. இது மனிதகுலத்திற்கு ஒரு மேதையின் பங்களிப்பு. உலகின் அறிவியல் ஆராய்ச்சித் துறையின் உயரிய விருதை தங்களுக்கு வழங்க வேண்டும் என்று கலாய்த்து பதிவிடுகிறார்கள்.