'ஆல்தோட்ட பூபதி அஷ்வின்' - கலாய் கிரிக்கெட்டர்கள் - Epi 7

சஞ்சய் மஞ்ச்ரேக்கர், "ஆல்டைம் கிரேட்னு அஷ்வின ஒத்துக்க மாட்டேன்"னு சொல்ல, அதுக்கு அஷ்வின், அந்நியன் பட டெம்ப்ளேட் போட்டு, "அப்படி சொல்லாதடா ஷாரி, மனசு வலிக்குது"னு அவரையே கலாய்ச்சுருந்தாரு.
அஷ்வின்
அஷ்வின்டைம்பாஸ்

கலாய்த்தலுக்கும் காமெடிக்கும் முனைவர் பட்டம் தரணும்னா அத டபுள் டாக்ட்ரேட்ட நம்ம ஆல்தோட்ட பூபதி அஷ்வினுக்குதான் தரணும்.

ஆன் ஃபீல்ட், யூ ட்யூப், இண்டர்வ்யூ, சமூக வலைதளங்கள் என கேப்பே இல்லாமல் கலகலப்புக்கு கேரண்டி தருவார். ஐசிசி ரூல்ஸைக் கரைத்துக் குடித்து தகுந்த இடத்தில் பயன்படுத்துவது, சகலகலா சைன்டிஸ்டாக புதுப்புது பரிசோதனைகளில் இறங்குவது மட்டுமில்லாமல் சொல்ல வரும் விஷயத்தை காமெடி ஃப்ளேவர் தூக்கலாகப் போட்டு கிச்சுக்கிச்சு மூட்டாமலேயே நம்மைச் சிரிக்க வைப்பதில் கில்லாடி.

அஷ்வின்
'Gavaskar-ம் Friends சீரியஸும்' - கலாய் கிரிக்கெட்டர்கள் | Epi 1

சமீபத்தில முடிந்த வங்கதேசத்துடனான இரண்டாவது டெஸ்ட்டில் இந்தியாவை அஷ்வின் - ஸ்ரேயாஸ் பார்ட்னர்ஷிப்தான் ஜெயிக்க வச்சது. அதுக்கு, நிப்ராஸ் ரம்ஜான், "மேன் ஆஃப் தி மேட்ச் விருத அஷ்வினுக்கு இல்ல, மோமினுல்லுக்குதான் கொடுத்துருக்கனும், அவரு கேட்ச் விடாட்டி, இந்தியா 89-க்கு ஆல்அவுட் ஆகியிருக்கும்"னு சொல்லியிருந்தாரு.

அதுக்கு அஷ்வின், "நான் உங்கள ப்ளாக் பண்லியா, ஓ அது டேனியல் அலெக்ஸாண்டரா? இந்தியா கிரிக்கெட் ஆடலைனா உங்க ரெண்டு பேர் நிலைமைய யோசிச்சுப் பாருங்க"னு இந்தியாவ மட்டம் தட்டியே பாப்புலாரிட்டி தேடுற ரெண்டு பேரையும் வச்சு செஞ்சுட்டாரு.

ஒருதடவ, சஞ்சய் மஞ்ச்ரேக்கர், "ஆல்டைம் கிரேட்னு அஷ்வின ஒத்துக்க மாட்டேன்"னு சொல்ல, அதுக்கு அஷ்வின், அந்நியன் பட டெம்ப்ளேட் போட்டு, "அப்படி சொல்லாதடா ஷாரி, மனசு வலிக்குது"னு அவரையே கலாய்ச்சுருந்தாரு. ஆஸ்திரேலியால நடந்த டெஸ்ட்ல அஷ்வின் பேட்டிங் பண்ணிட்ருக்கப்ப, பெய்ன் வேணும்னே, "Gabbaல உன்னை கவனிக்க காத்துட்ருக்கேன்"னு சொல்ல அதுக்கு அஷ்வின், "இந்தியாவுக்கு நீ வந்தேனா அதுதான் உன்னோட கடைசி டெஸ்ட் தொடரா இருக்கும்"னு பதில் சொன்னாரு.

அஷ்வின்
'சேட்டைக்கார சச்சினின் அலப்பறைகள்' - கலாய் கிரிக்கெட்டர்கள் | Epi 2

கிப்ஸ் ஒருதடவ, ஒரு பிராண்டட் ஷு விளம்பரத்துல அஷ்வின் வர்றத பார்த்துட்டு, "இனிமேலாச்சும் இதபோட்டுட்டு நீ வேகமா ஓடுவேன்னு நினைக்கறேன்"னு கமெண்ட் போட, "அட்லீஸ்ட் மேட்ச் ஃபிக்ஸிங் பண்ணி நான் என் சாப்பாட்டு தட்ட நிரப்ப நினைக்கலியே"னு கலாய்ச்சுட்டாரு. இப்படி பாரபட்சமே பார்க்காம பதிலுக்கு கலாய்ச்சு அப்பப்போ பரிசல் பண்றதுதான் அஷ்வினோட ஸ்டைல். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில `Aish' ஆடமாட்டார்னு ரசிகர் ஸ்பெல்லிங் மிஸ்டேக்கோட ஒருத்தர் அவரோட வீடியோல கமெண்ட் போட, அய்ஸ் ஆடமாட்டார், ஆனா நான் ஆடுவேன்னு கவுன்டர் கொடுத்துருந்தாரு.

கெய்லோட ஷுவை அஷ்வின் ஒரு போட்டியப்போ கட்டி விட்டாரு. அந்த மேட்ச்ல எப்பவும் போல கெய்ல் பட்டயக் கிளப்ப, அத வச்சு ஷேர் பண்ண ஃபோட்டோல, நான் ரெண்டு காலையும் சேர்த்து கட்டி விட்ருக்கனும் போல" அப்படினு கிண்டலடிச்சுருந்தாரு. இதுதான் அஷ்வின்!!!!

சமீபத்துல நடந்த உலகக்கோப்பைல பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில லெக் சைட் நகர்ந்த பந்த சந்திக்காமலே விட்டு அணிய ஜெயிக்க வச்சாரே அந்த சமயோசிதமும், அடிசனலா இந்த சென்ஸ் ஆஃப் ஹியூமரும்தான் அஷ்வினோட வெற்றி ஃபார்முலா.

மேன்கேடிங் பிரச்சினை வந்தப்போ, ரிட்டயர்ட் அவுட்-ஐ அவரு ஃபாலோ பண்ணப்போ, வித்தியாசமான ஸ்டான்ஸோட அவரு டெல்லிக்கு எதிரா ஆடினப்போனு பல சந்தர்ப்பங்கள்ல அவரப் பாராட்டி கலாய்ச்சு விமர்சிச்சு கமெண்ட்கள் வந்திருக்கு. ஆனா எல்லாத்தையும் அந்த ஃபார்முலாவ யூஸ் பண்ணி அவரு டீல் பண்ற விதம்தான் அவருக்கு நிறைய ரசிகர்கள சம்பாதிச்சுக் கொடுத்துருக்கு. இனிமேலும் கொடுக்கும்.....

அஷ்வின்
'கெட்ட பையன் சார் இந்த கெய்ல்' - கலாய் கிரிக்கெட்டர்கள் | Epi 5

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com