ஒரு பிரியாணிய நிம்மதியா சாப்பிட விடுறானுகளா பாரு..!

லெக் பீஸ் தவிர பிரியாணில போடுற கோழிக் கறிக்கு ருசி கொஞ்சம் கம்மி தான்! இனி எவ்வளவு நேரம் ஆனாலும் பந்திலதான் போய் சாப்பிடணும்னு அன்னிக்கு எடுத்திக்கிட்டேன் உறுதிமொழி!
biriyani
biriyanitimepass
Published on

பிரியாணி எல்லா இடத்துலயும் நல்லா இருக்காதுங்க. அதனால நமக்குப் புடிச்ச கடைக்குத் தேடிப் போய் சாப்பிடலாம்னு போனா அப்போதான் அந்த பிரியாணி மாஸ்டர் அவசர லீவ்ல ஊருக்குப் போயிருப்பாரு... பிரியாணிக்குப் பதிலா தக்காளிச்சோறு மாதிரி ஒண்ணைக் கண்ணுல காட்டுவாங்க. என்னத்தச் சொல்ல! சரி பார்சல் வாங்கிட்டு போகலாம்னு போனா,  கடைக்காரர் சிடு சிடுனு இருப்பார்.

 நாம லெக் பீஸ் போடச் சொல்லலாம்னு முடிவெடுத்தா, 'ஏன்பா கோழிக்கு இருக்குறதே  ரெண்டு காலு!'ன்ற பழைய காலத்து ஜோக்கை சொல்லிடுவாரோனு பயந்து, "லெக் பீஸ் ஒன்னுணே'' னு கேக்கலாமா வேணாமானு யோசிச்சுட்டு இருக்கப்பவே நம்ம பார்சல் வந்துடும். 

பிறகு என்ன வீட்டுக்குப் போயி பார்சலைத் திறந்தா லெக் பீஸ் இருக்கணும் கடவுளே. புளியன் பிரியாணியா இருக்குறதும் லெக்பீஸ் இல்லா குழம்பு சோறா இருக்குறதும் அவனவன் செய்த வினை!

சில பேரோடலாம் பிரியாணி சாப்பிடப் போகவே கூடாதுங்க. நமக்கு சீரக சம்பா பிரியாணி புடிச்சா, அவிய்ங்க பாசுமதில செஞ்சதுதான் வேணும்னு நம்மள‌ வேற கடைக்கு கூட்டிட்டுப் போயிடுவாய்ங்க... சரி நமக்கு பாசுமதி புடிச்சா அவன் தக்காளி சோறு மாதிரி இருக்க பிரியாணிய வாங்கிக் குடுத்து நல்லா இருக்குனு சொல்லச் சொல்லுவாய்ங்கே.

அவன் சொன்னது மட்டும் இல்லாம நம்மளையும் சொல்ல வச்சு தர்மசங்கட படுத்துவான். ஆகவே மக்களே பிரியாணி சாப்பிடணும்னு முடிவெடுத்துட்டா உங்க மனசு என்ன சொல்லுதோ அதை மட்டும் செய்யுங்க. ஃப்ரெண்டு சொன்னான்...அவன் சொன்னான்னு போயி மொக்கை வாங்கிடாதீங்க!  ஆனா ரம்ஜான் நேரத்துல மட்டும் நம்ம நண்பர்கள் குடுக்குற பிரியாணிக்குனு தனி இடம் இருக்குங்க. அவ்ளோ ருசியா இருக்குங்க. 

முக்கியமா ஆபீஸ்ல பக்கெட் பிரியாணி வாங்குறப்ப வெட்கம் மானம்லாம் மூட்டை கட்டி வெச்சுட்டு, பார்த்துட்டு இருக்க வேலையும் ஒரு பக்கமா மூட்டை கட்டி வச்சுட்டு வேகமா கேண்டீன் போயிடணும். பிரியாணிக்கு முன்னாடி கடமைலாம் கொஞ்சம் காத்திருக்கலாம்னு போயிடணும். இல்லைனா கடைசில குஸ்காகூட மிஞ்சாது மக்களே! (நான் எல்லாம் அப்படிதாப்பா.. நமக்கு சோறு முக்கியம் அமைச்சரே...)

சில பக்கிங்க நம்மகிட்ட வந்து என்ன சாப்பிட்டனு கேப்பாங்க. நாம வேற வெள்ளந்தித்தனமா "பிரியாணி" னு சொல்லிட்டா போதும்... ப்ளூ கிராஸ் மெம்பர் மாதிரி நினைச்சுட்டு  ப்ளூ சட்ட மாறன் சினிமா ரிவ்யூ சொல்லுறது கணக்கா நம்ம சாப்பாட்டைத் தாக்கிப் பேசி ஏதோ நாம நாட்டுக்கு தேச துரோகம் பண்ணிட்ட மாதிரி அடுத்த நாப்பத்திஅஞ்சு நிமிஷத்துக்கு பேசுவாங்க. அப்பறம் தான் ஞாபகம் வரும்.

அவய்ங்க ஒரு வெஜிட்டேரியன்னு. சிம்பிளா சாம்பார் சாதம்னு சொல்லிட்டுப் போயிருந்தா இந்த நிலைமைக்கு நீ தள்ளப்பட்டுருக்க மாட்டியேபானு நம்ம உள்‌ மனசு‌ நம்மள கேக்கும் பாருங்க... அய்யோ அய்யோ..!

பிரியாணி சாப்பிட முடிவெடுத்தா கூச்சமே பார்க்கக்கூடாது. இப்படித்தாங்க ஒரு குட்டி ஃபங்ஷனுக்கு ஒரு வீட்டுக்கு போயிருந்தேன்..அது குட்டி ஃபங்ஷன்ங்கிறதால வீட்டிலயே பிரியாணி போட்டாங்க. மாடியில தான் சாப்பாடு. நேரா மாடிக்குப் போய் பார்த்தா பந்தில இடம் இல்ல. சரி 'காத்திருப்போம்'னு கீழ வந்தா,  'இங்கயே சாப்பாடு போடுறோம்... சாப்பிடு!'னு அன்பா உட்கார வச்சுட்டாங்க. ஆனா அதுல என்ன பிரச்னைனு பார்த்தீங்கனா பிரியாணிய ஒரு குட்டி பாத்திரத்துல எடுத்துட்டு வந்ததால நிறைய பீஸும் குஸ்கா கொஞ்சமாவும் ஆகிடுச்சு.

லெக் பீஸ் தவிர பிரியாணில போடுற கோழிக் கறிக்கு ருசி கொஞ்சம் கம்மி தான்னு தெரிந்து கொண்ட தினம் அன்று!  இனி எவ்வளவு நேரம் ஆனாலும் பந்திலதான் போய் சாப்பிடணும்னு அன்னிக்கு எடுத்திக்கிட்டேன் உறுதிமொழி! 

biriyani
'சொல்லுங்க ரமேஷ்... அங்க புயல் எப்டி இருக்கு?' - நியூஸ் ரீடர் பரிதாபங்கள்

இந்த பாடத்த நீங்களும் கத்துக்கோங்க. தெரிஞ்ச வீடுதானேனு ஸ்பெஷல் கவனிப்புக்கு ஆசைப்பட்டு பந்தியை மிஸ் பண்ணீங்கன்னா அப்புறம் வருத்தப்படுவீங்க! ஆகவே மக்களே 'பரவாயில்லைங்க...நான் பந்தில போய் சாப்பிட்டுக்குறேன்'னு சொல்லிப் பழகுங்க. 

இது கூட பரவாயில்லைங்க... பிரியாணி பந்தி கூட்டமா இருக்கு வெஜ்ல உட்கார்ந்திடலாமானு மனசாட்சி இல்லாம நம்மகிட்ட கேட்ப்பாய்ங்க. கேக்குறவங்க பெரும்பாலும் சொந்தக்காரங்களாவோ இல்ல பெரியவங்களாவோ இருப்பாங்க. அவய்ங்க நெஞ்சரிச்சல் கேஸு...எப்பவும் ஈனோவை பாக்கெட்ல வெச்சுட்டு சுத்துற அப்பாவிங்க. அவங்க வலைவிரிப்புல சிக்கிக்காதீங்க. பிரியாணியை 90S கிட்ஸோட காதலி மாதிரி நேசிக்கக் கத்துக்கங்க!

'ஏன்பா நா பிரிஞ்சி சாதத்தையும் கத்திரிக்காயும் சாப்பிடவாப்பா இங்க வந்தேன்... முடியாதுப்பா!'னு சொல்லிப் பழகுங்க. ''இல்ல பெரியப்பா... வந்தது வந்துட்டோம். நம்ம நான்வெஜ் பந்திக்கே போயிடலாம்''னு கட்-அண்ட்-ரைட்டா சொல்லிடுங்க. ஒருவேளை வயசுக்கு மரியாதைனு வெஜ் பக்கம் போயிட்டீங்கன்னா பீஸை மிஸ் பண்ணிடுவீங்க பாஸ். பீஸை மிஸ் பண்ணினா வாழ்க்கைல நோ பீஸ் ஆஃப் மைண்ட்! எவ்வளவு மன உளைச்சல்!

இத்தனை தடைகளைத் தாண்டி ஒரு வழியா பந்தில உட்கார்ந்து சாப்பிட ஆரம்பிக்கும்போது நம்ம பக்கத்துல முணுமுணுப்பு கேட்கும்.

"பிரியாணி வெயிட்டு போட்டுடும்பா. ஆல்ரெடி நீ வெயிட் போட்டுட்ட!'னு சொந்தக்காரனுக சொல்லுவானுக. கலோரி கிலோரினு வாய்க்கு வந்ததைச் சொல்லி பயமுறுத்துவானுக. ``ஏன்பா இதெல்லாம் பேசுற இடமா இது... போயி நீயா நானா நிகழ்ச்சில உட்கார்ந்து பேசு போ...''னு சொல்லிடுங்க. பந்தில உட்கார்ந்து தொந்தியை நிரப்பாம இப்படி அட்வைஸ் பண்ணுறவங்களுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்..? நீங்களே சொல்லுங்க! 

எல்லாரையும் சமாளிச்சு பீஸும் பிரியாணி ரைஸும்  நல்லாயிருக்குனு இலையில உட்கார்ந்து ஒரு புடி புடிச்சுட்டு கைகழுவ வந்தா...இன்னொரு சித்தியோ அத்தையோ வந்து, ''ஏன்மா பொம்பளைப் புள்ளை இம்புட்டு சாப்பிட்டா நல்லாவா இருக்கும்?''னு கேட்கும். முடிஞ்சா அந்த அம்மணியைப் பக்கத்துல வர வச்சு,  தலையில நங்குனு குட்டு வச்சுருங்க!

நமக்கு பிரியாணி முக்கியம் மன்னா! 

- ஹன்னா டேனியல்

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com