* சோஷியல் மீடியால இவங்க போடுற போஸ்ட், ஸ்டேட்டஸ்லாம் புல்லட்டை மையமா வெச்சுதான் இருக்கும். 'my life...my bike... my rules', 'This is my grand pa's road' 'னு கொடூர ஸ்டேட்டஸ் தட்டுவார்கள். ஸ்பீடாமீட்டர்ல ஆரம்பிச்சு டயர் வரைக்கும் புல்லட்களை க்ளோஸ்-அப் ஸ்டில்ஸ் எடுத்து டி.பி, கவர் போட்டோக்களில் தெறிக்க விடுவார்கள்.
* புல்லட் வெச்சிருக்குறவங்களை ஈஸியா நீங்க கண்டுபிடிக்க ஒரு டிப்ஸ் இருக்கு. புல்லட் வெச்சிருக்குறவங்க பைக் சாவியை நார்மலா வைக்கிறதே இல்லை. கைவிரல்ல மாட்டிக்கிட்டு சுத்துறது, எல்லோர் கண்ணு முன்னாடியும் எடுத்து சுத்துறது, நகத்துக்கு அழுக்கெடுக்குறது, பல்லு குத்துறதுனு 'பாரு பாரு நல்லா பாரு... புல்லட் வெச்சிருக்குறேன் பாரு!'னு பயாஸ்கோப் படம் காட்டுவாங்கப்பா!
* திடீர் சமூகசேவகர்களா மாறி வம்படியா யாரையாச்சும் டிராப் பண்ணுவாங்க. பின்னாடி உட்கார வெச்சு 'டப டப'னு சிட்டி டிராஃபிக்ல 80ல விரட்டிட்டுப் போறதுல ஒரு அல்ப சந்தோஷம் இந்த புல்லட் பாண்டிகளுக்கு!
* ஊர்சுத்துறதுதான் இவங்களோட ஹாபியா இருக்கும். தெருமுக்கு கடையில இருக்குற கடைக்கு கடுகு உளுத்தம்பருப்பு வாங்கிட்டுவர அம்மா அனுப்பினாலும், 'Travel to unknown destination'னு சொல்லிட்டு பிள்ளையார் கோவிலை மூணு சுத்துசுத்திட்டு கடுகை மட்டும் வாங்கிட்டு வந்து அம்மா கையால அடிவாங்குவானுக.
* 'டுப்பு...டுப்பு...டுப்பு..!' -புல்லட் வாங்குறதே இந்த சத்தத்துக்காகத்தான். அதனால கூட்டம் நிறைய வர்ற இடங்களுக்கு வான்டடா போய் ரவுண்ட் அடிப்பாங்க. வேணும்னே பைக் ரிப்பேர் ஆன மாதிரி நிறுத்தி ஆக்ஸிலேட்டரை முறுக்கி முறுக்கி தெறிக்க விடுவானுக!
* பேச ஆரம்பிச்சாலே 350 சிசி, 500 சிசினுதான் வாய்ல தாண்டவமாடும். அது பரவாயில்லை. டிவிஎஸ் 50 வெச்சிருக்குறவங்ககிட்டக்கூட 'உங்க வண்டி எத்தனை சிசி?'னு கேட்குறதுலாம் வன்கொடுமை மக்களே.
* ஃபேஸ்புக் அட்ராசிட்டியை தனிப்புத்தகம் போடலாம். 'wander lust', 'travel diearies', 'Royal ride'னு எதையாவது ஹேஸ்டேக் போட்டு தன்னை ஒரு பைக் பைத்தியம், புல்லட் வெறியனா இந்த உலகுக்குக் காட்ட மெனக்கெடுவார்கள்.
* அடிக்கடி டூருக்குப் போறதா சீன் போடுறதும், பைக்குக்காக நிறைய செலவு பண்ணுறதையும் வாண்டடா யார்கிட்டயாச்சும் சொல்லுவாங்க. `உனக்கென்னப்பா ராயல் என்ஃபீல்டு வெச்சிருக்குற... நினைச்சா எங்கேயாவது பைக்லயே போயிட்டு வந்துடுறே?', 'புல்லட் செம கெத்துப்பா!', 'உன் தோற்றத்துக்கு செமையா மேட்ச் ஆகுது!'னு நாலு பேரு நாலுவிதமா பாராட்டுறதை ரொம்பவே ரசிப்பாங்க. ஆனா, நிஜத்தில் `சென்னை-28' ஜெய்போல பாத்ரூமுக்குள் உட்கார்ந்து பெட்ரோல் காசை நினைச்சு அழுவாங்க.
- ஆர்.சரண்