திருவண்ணாமலை மாவட்டத்தில் அகில பாரத இந்து மகாசபை மாவட்ட நிர்வாகியாக இருப்பவர் வாசுதேவன். இவர் மதுபோதையில் டூவீலரை ஓட்டிவந்து, பேரிகார்டை மோதி தள்ளியுள்ளார்.
அப்போது, தலைகுப்புற கீழே விழுந்துள்ள வாசுதேவன், மீண்டும் எழுந்துவந்து பேரிகார்டை பிடித்து ஆட்டி அலப்பறை செய்துள்ளார். இதை சம்பவ இடத்தில் இருந்த ஒருவர் வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
வாசுதேவனின் செயலைக் கடுமையாக விமர்சித்துள்ள நெட்டிசன்கள், இதற்கு காவல்துறை தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியுள்ளனர். மேலும், இதுபோன்று மேலும் சம்பவங்கள் நடக்காத வண்ணம், மக்களுக்கு போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் வழியுறுத்தியுள்ளனர்.