Twitter : காதலிக்கு Breakup Letter எழுதி ட்ரெண்ட் ஆன இளைஞன் !

ஒரு பையன் தன்னோட காதலி கிட்ட அவனுடைய பிரேக்கப்ப லெட்டர் மூலமா சொல்லி இருக்கான். அதுவும் பிரிண்ட் எடுத்து லெட்டரா கொடுக்கல, வாட்ஸ் அப்ல லெட்டர்ர pdf-ஆ அனுப்பி இருக்கான்.
Twitter
TwitterTwitter
Published on

"ப்ரேக்கப் கடிதம் தீட்டவே மேகம் எல்லாம் காகிதம் ! வானின் நிலம் கொண்டு வா பேனா மையோ தீர்ந்திடும் !"

காதலன் காதலிக்கு கடிதம் எழுதி தன்னுடைய பிரேக்கப்ப வெளிப்படுத்தி இருக்காரு. இந்த கடிதம் ட்விட்டர்ல லெனின் அப்படின்ற ஐடில போஸ்ட் பண்ணியிருக்காங்க, அந்த ட்விட்டர் போஸ்ட் வைரலா ஷேர் ஆகிட்டு இருக்கு !!

ஒரு பொண்ணு கிட்ட தன்னோட காதல்ல சொல்றதுக்காக லெட்டர் எழுதுவான்; காதலிக்கும் போது சில விஷயங்களை ஷேர் பண்றதுக்காகக்கூட லெட்டர் எழுதுவான்; காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்ட அப்புறமா கூட லெட்டர் எழுதுவான், ஆனா காதலிச்சிட்டு இருக்குற பொண்ணு கிட்ட பிரேக்கப் காக லெட்டர் எழுதி பாத்திருக்கோமா?? அந்த மாதிரி ஒரு சம்பவம் தான் நடந்திருக்கு !!

ஒரு பையன் தன்னோட காதலி கிட்ட அவனுடைய பிரேக்கப்ப லெட்டர் மூலமா சொல்லி இருக்கான். அதுவும் பிரிண்ட் எடுத்து லெட்டரா கொடுக்கல, வாட்ஸ் அப்ல லெட்டர்ர pdf-ஆ அனுப்பி இருக்கான்.

லெட்டர் அனுப்புனது மட்டும் இல்லாம, அந்த லெட்டருக்கு அவருடைய எக்ஸ் காதலி ரிப்ளை பண்ணத ஸ்கிரீன்ஷாட் எடுத்து, அதை ட்விட்டர்ல போஸ்ட்டாவும் போட்டு இருக்காரு. வெலின் அப்படின்ற ஐடில தான் இந்த ட்விட்டர் போஸ்ட் பண்ணப்பட்டிருக்கு. இந்த போஸ்ட் இன்னைக்கு செம்ம வைரலா இருக்கு.

அந்த பிரேக்கப் கடிதத்தில் என்ன எழுதி இருக்காரு அப்படின்னு பார்க்கலாம் : "இந்த லெட்டர் உன்னை வந்து சேரும்போது நீ நல்ல ஆரோக்கியத்தோடு இருப்பனு நம்புறேன். என்னை ரொம்ப நாளா குழப்பத்துல வைச்சிருக்க ஒரு விஷயத்தை பத்தி இந்த நொடியில சொல்லணும்னு நினைக்கிறேன். ரொம்ப அண்மையில என்ன ஒரு விஷயம் அச்சுறுத்திட்டு இருந்துச்சு. நம்மளுடைய ரிலேஷன்ஷிப்ப பத்தி மறுபரிசலனை செய்யலாமா அப்படின்னு என்னை யோசிச்சேன். நம்ம ரெண்டு பேருக்குள்ள இருக்கக்கூடிய ரிலேஷன்ஷிப்பை இதுக்கு மேல தொடர வேண்டாம்னு வருத்தத்தோட நான் உன்கிட்ட சொல்லிக்க விரும்புறேன். நான் எடுத்திருக்க இந்த முடிவால உன்ன நீயே பர்சனலா அஃபெக்ட் பண்ணிக்க வேண்டாம். நீ நிஜமாவே நல்ல பொண்ணு தான்."

"இருந்தாலும் நான் உன்னை பத்தி கேள்விப்பட்ட சில விஷயங்கள் என்ன ரொம்பவே காயப்படுத்தியிருக்கு. நம்மளுடைய ரிலேஷன்ஷிப்ல பேஸ்மெண்ட் ஸ்ட்ராங்கா இல்லையோனு தோணுது. அது மட்டும் இல்லாம இந்த மாதிரி ஒரு முடிவை என்னாலயும் ஈஸியா எடுத்துற முடியும்னு நினைச்சுக்க வேண்டாம். இந்த முடிவையும் நான் ரொம்ப யோசிச்சு கஷ்டப்பட்டு தான் எடுத்து இருக்கேன். இருந்தாலும் எனக்கு நான் உண்மையா இருக்கணும், எனக்குன்னு சில கொள்கை இருக்கு. உன்னுடைய எதிர்கால வாழ்க்கைக்கு வாழ்த்துக்கள் என்னுடைய முடிவுக்கு நீ மரியாதை தருவனு நம்புறேன் " அப்படின்னு எழுதி இருந்தாரு.

கூடவே இந்த லெட்டர அவருடைய எக்ஸ் காதலியோட வாட்ஸ்ஸப்க்கும் அனுப்பி அவங்களுடைய ரிப்ளையும் ஸ்க்ரீன்ஷாட் எடுத்து ட்விட்டரில் பதிவிட்டு இருக்காரு. இந்த போஸ்ட்டுக்கு வந்திருக்க கமெண்ட்ஸ் தான் வேற லெல். " இந்த பிடிஎஃப் அனுப்புங்க , நானும் என் லவ்வர்க்கு அனுப்பணும் ; இப்படி கூட ப்ரேக்கப் பண்ணலாமா ? " அப்படி இப்படின்னு தக்லைப்ஃ கமெண்ட்ஸ தான் கொடுத்துட்டு இருக்காங்க நெட்டிசன்ஸ் !!

- நெ.ராதிகா

Twitter
Tamil Serials : இந்த ஹீரோ, ஹீரோயினுக்கு ரொம்ப பிகுதான் - சிறிய இடைவேளைக்குப் பிறகு | Epi 2

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com