
லைபா என்கிற ட்விட்டர் பயனர் அவங்களுடைய உறவினரான ஆறு வயது சிறுவன் உருவாக்குன கால அட்டவணைய பகிர்ந்து எல்லாருடைய கவனத்தையும் ஈர்த்திருக்கார்.
படிக்கிற காலகட்டத்துல ஒவ்வொரு பாடத்துக்கும் இவ்ளோ நேரம், ஹோம் வொர்க்குக்கு தனி நேரம், தேர்வுக்கு படிக்க நேரம்னு தனித்தனியா நேரத்த பிரிச்சி கால அட்டவணைய உருவாக்குவோம். அந்த அட்டவணைய படிக்குற இடத்துல ஒட்டியும் வெப்போம். இந்த அழகான நினைவுகள்ல நம்ம யாராலயுமே மறக்க முடியாது.
அந்த வகையில, ட்விட்டர் பயனரான லைபா தன்னுடைய உறவினரான ஆறு வயது சிறுவன் மோஹித் உருவாக்கியிருக்க கால அட்டவணையை ட்விட்டர்ல போட்டு இருக்காங்க. இது நார்மல்லான டைம் டேபிள் இல்ல ! இது அல்ட்ரா லெஜண்ட் அம்சம் கொண்ட டைம் டேபிள் !
இந்த ஆறு வயது சிறுவனுடைய பேரு மோஹித். இந்த பையனோட கால அட்டவணைதான் இப்போ வைரல். மோஹித்தோட நாள் காலைல 9 மணிக்கு தொடங்குது. அப்புறம் 9-9:30 மணிவர வாஷ் ரூம் டைம். வாஷ் ரூம் வேலை முடிஞ்சதும் 10 மணி வரை டிபன் டைமிங் ஆம் !
10-10:30 வரைக்கும் மோஹித்துக்கு டிவி பாக்றதுக்கான நேரம். இதுல விசித்திரமான விஷயமே படிக்கிறதுக்கு வெறும் கால் மணி நேரம்தான் பிக்ஸ் பண்ணியிருக்காரு மோஹித். ஆனா சண்டை போடறதுக்கு முழுசா மூணு மணி நேரம் ஒதுக்கி இருக்காரு. தம்பி பயங்கரமான ஆளு போல !!
காலையில 11 மணியிலிருந்து மதியம் 2:30 மணி வரைக்கும் முழுசா "ஃபைட்டிங் டைம்" அப்படின்னு ஃபிக்ஸ் பண்ணியிருக்காரு. இவ்வளவு வேலைக்கு நடுவுல கொஞ்சமா படிக்கலாம்னு 2-2:45 வரைக்கும் "ஸ்டடி டைம்" பிக்ஸ் பண்ணியிருக்காரு மோஹித்.
மோஹித்துக்கு காலையில குளிக்கிற பழக்கம் இல்ல. ஆனா வாஷ்ரூம் டைமிங்னு ஒரு அரை மணி நேரத்தை கடத்திடுவாரு. சுத்தமா குளிக்கணும்ன்றதுக்காக 2:45 - 3:15 வரைக்கும் குளிக்கறதுக்காக செலவிடுவாரு நம்ம மோஹித். "கைப்புள்ள இன்னும் என் முழிச்சிட்டு இருக்க" அப்படின்ற மாதிரி தூங்குறதுக்கும் நேரத்த ஒதுக்கியிருக்காரு. 3:15-5 மணி வரைக்கும் மோஹித் தூங்குற நேரம்.
அப்புறம் 5-5:15 மணி வரைக்கும் ஸ்னாக்ஸ் சாப்பிடுவாராம். மோஹித் வச்சிருக்க ரெட் கார் கூட விளையாடுறதுக்கு கொஞ்ச நேரம். ஃபேமிலி கூட நேரம் செலவிட்றதுக்கு கொஞ்ச நேரம்னு டைம் டேபிள்ல பக்கவா ரெடி பண்ணி இருக்கான் மோஹித்.
மோஹித்க்கு மாம்பழம்னா ரொம்ப இஷ்டம் போல, ஒரு நாள்ல அரை மணி நேரத்தை மாம்பழம் சாப்பிடுறதுக்காகவே ஒதுக்கியிகருக்காரு. இரவு 8- 8:30 மணி வரைக்கும் மாம்பழத்தை ருசிச்சு சாப்பிட்றதுக்கான நேரம்.
"அதுக்கப்புறம் என்ன தூங்கிட வேண்டியது தான்!" காலைல இருந்து பல வேலைகள பம்பரம் மாதிரி பண்ணிட்டு இருந்த மோஹித் இரவு 9 மணிக்கு டாஆஆன்னு தூங்கிடுவாரு !!
நாம எல்லாம் படிக்கிறதுக்காக மத்த வேலைகள குறைச்சிகிட்டு.. படிக்கிறதுக்கான நேரத்தை அதிகம் பண்ணுவோம்... ஆனா மோஹித் மத்த வேலைகளுக்குலாம் தாராளமா நேரம் செலவிட்டு, படிக்கிறதுக்கு வெறும் 15 நிமிஷம் தான் கொடுத்திருக்கிறாரு.. எப்படி இருந்த காலம்... இப்படி ஆயிடுச்சு பாத்தீங்களா !!
இது நார்மலான டைம் டேபிள் இல்ல ... அல்ட்ரா லெஜன்ட் டைம் டேபிள் தான் !