Innovative Inventions | இருக்குனு சொல்லல...இருந்தா நல்லா இருக்கும்னு சொல்றோம்!

கிரியேட்டிவான கண்டுபிடிப்புகளை இணையத்தில் தேடினால், சுவாரஸ்யமான பல கண்டுபிடிப்புகள் வந்துவிழுகின்றன.
Innovative inventions
Innovative inventionsTimepass

ற்கனவே எக்கச்சக்க கண்டுபிடிப்புகள் இந்த உலகில் வந்திருந்தாலும், நம் மனதில் நிற்கும் கண்டுபிடிப்புகள் சில மட்டும்தான். அப்படி கிரியேட்டிவான கண்டுபிடிப்புகளை இணையத்தில் தேடினால், சுவாரஸ்யமான பல கண்டுபிடிப்புகள் வந்துவிழுகின்றன. இவற்றில் பாதி விஷயங்கள் பிராக்டிக்கலாக இன்னும் வரவில்லை என்றாலும் கூட, வந்தால் நல்லா இருக்குமே என்கிற ரகம்..! 

கன்ட்ரோல் ஆல்ட் டெலிட் சுவிட்ச்:

கணினி பயன்படுத்தும் எல்லாருக்குமே, இந்த ஷார்ட்கட் கீ தெரிஞ்சிருக்கும். டாஸ்க் மேனேஜரை தட்டி எழுப்பவதற்கான இந்த கீயை குறைந்தது ஒரு நாளைக்கு ஒரு முறையாவது பயன்படுத்தியிருப்போம். இந்த மூன்று கீ களும் ஒவ்வொரு மூலையில் இருப்பதால், ஒரே கையில் அமிழ்த்த முடியாது. இது ஒரு கை மட்டுமே உடைய மாற்றுத் திறனாளிகளுக்கு கடினமாக இருக்கும். இதற்காக வடிவமைக்கப்பட்டதுதான் இந்த சுவிட்ச். பார்த்தததுமே 'அட' போட வைக்கும் ஐடியா இது!

இன்ச் மீட்டர் பெல்ட்:

டிவி டெலிஷாப்பிங்கில் ஸ்லிம்பெல்ட் வாங்கி, அதனை அரை மணிநேரம் மாட்டி விட்டு, உங்கள் தொப்பை குறைந்திருக்கிறதா என அளக்கும் நபரா நீங்கள்? உங்களுக்கு பக்காவாக பொருந்தும்  ஐடியாதான் இந்த இன்ச் மீட்டர் பெல்ட். ட்ரெட் மில்லில், ஏறி இறங்கி விட்டு, ஒவ்வொரு முறையும் டேப் வைத்து இடுப்பளவை அளக்க வேண்டாம். உங்கள் பேண்ட்டுக்கு பெல்ட் போடும்போதே, உங்கள் இடுப்பளவு என்ன என காட்டி விடுகிறது இந்த இலியானா பெல்ட்.

துப்பாக்கி அம்ப்ரல்லா:

மழைக்கு பிடிக்கும் குடையின், கைப்பிடியில் துப்பாக்கியை இணைத்தால் இந்த குடை ரெடி. குடைக்குள் கத்தியை ஒளிச்சு வச்சிருக்கும் நம்ம ஜமீன்தார் காலத்து ஐடியாவின் புது வெர்ஷன்தான் இது. மழையில் இந்த குடை பிடித்துக் கொண்டு போய், பொசுக்கென ஜேம்ஸ் பாண்ட் போல, வில்லன்களை போட்டுத்தள்ளும் சீன்கள் வருங்கால சினிமாவில் வர, இந்த குடையும் ஒரு காரணமாக இருக்கலாம்.

மழலை மாப்:

குழந்தைகள் தவழ்ந்து செல்லும் போதே, நம் வீட்டையும் சேர்த்து கிளீன் செய்து விட்டால் எப்படி இருக்கும்? அதுதான் இந்த கான்செப்ட். பாப்பாவின் ட்ரெஸ்ஸின் முன் பகுதியில், மாப் பஞ்சு போன்ற பகுதி இணைக்கப்பட்டு இருக்கும். இதை மாட்டிவிட்டு, பாப்பாவை வீடு முழுக்க தவழ விட்டால், தரை சுத்தமாகிவிடும். பட் ட்ரெஸ் நாறிடுமே பேபி?

பீசா வெட்டி:

கத்தி வைத்து பீசாவை, வெட்டி சாப்பிடும் நம்ம பயல்களுக்கு உதவியாக இருக்கும் புது சிசர் இது. முக்கோண வடிவில், சிந்தாமல், சிதறாமல் பீசாவை நைஸாக வெட்டி சாப்பிடலாம். பீசா வாங்கி பங்கு போடும் போது, பங்காளி சண்டை வராம தடுக்க இந்த நவீன மெஷின் உதவும். 

நாய்க்குடை:

காலை, மாலை, திடீர் மழை என எப்ப பார்த்தாலும், உங்க செல்லப் பிராணியை கூட்டிட்டு வாக்கிங் போறீங்களே? ஆனால் எப்பவாச்சும் அதுக்கு வெயில் மழைக்கு ஒரு குடை செஞ்சு குடுக்கனும்னு உங்களுக்கு தோணுச்சா? அதுதான் இந்த ஐடியா. நீங்கள் குடை பிடிச்சு ஜாலியா வாக்கிங் போகும்போது, பெல்ட்டில் உங்கள் டாமி, ஜிம்மியை எல்லாம் கட்டியிருப்பீங்கல்ல? அந்த பெல்ட்  செயின் மேலேயே குடை செஞ்சு மாட்டிவிட்டா இந்த நாய்க்குடை ரெடி.

டேபிள் மேட்டை தாண்டி எம்புட்டு புதுப்புது விஷயம் இருக்கு பாத்தீங்களா!

- நெட்டிசன்

Innovative inventions
'விஜய் ஆலுக்காஸ், அஜித் சன்ரைஸ், ரஜினி கோலா' - விளம்பரத்தில் நடித்த நடிகர்கள்

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com