Kerala : கேரளாவைக் கலக்கிய சாப்பாட்டு ராமன் Theetta Rappai !

தினசரி உணவு காலையில் 75 இட்லி, மதியம் ஒரு அண்டா சோறு, குழம்பு, ராத்திரி 60 சப்பாத்தி 2 லிட்டர் டீ. இதுவே போட்டினு வந்துட்டா ஒரே நேரத்துல 250 இட்லி வரைக்கும் சாப்பிட்டு சாதனை படைப்பாராம்.
Theetta Rappai
Theetta Rappaitimepass

1939-இல் கேரளா திருச்சூரில் தீட்டா ரப்பாயி பிறந்தவர். சாப்பாட்டு போட்டிகள்ல கலந்துக்கிறதையே ஒரு தொழிலா வெச்சிருந்தவர்தான் இந்த ரப்பாயி. இவருடைய தினசரி உணவு காலையில் 75 இட்லி, மதியம் ஒரு அண்டா சோறு, குழம்பு, ராத்திரி 60 சப்பாத்தி 2 லிட்டர் டீ. இதுவே போட்டினு வந்துட்டா ஒரே நேரத்துல 250 இட்லி வரைக்கும் சாப்பிட்டு சாதனை படைப்பாராம். இதுக்காக லிம்கா புக் ஆஃப் ரெக்கார்ஸ்ல  இவர் பெயர் இடம்பிடிச்சிருக்கு.

சின்ன வயசுல இவரும் நம்மள மாதிரி அளவாதான் சாப்பிடுவாராம். சரியா 6 வயசு ஆகும்போதுதான் இவருக்கு இப்படி பயங்கரமா பசிக்க ஆரம்பிச்சிருக்கு. அதுல இருந்து கிடைச்சதை எல்லாம் இப்படி திண்ணு தீர்க்க ஆரம்பிச்சிருக்கார். ஒருமுறை திருச்சூர் ஹோட்டல்ல சாப்பாடு போட்டி நடக்க அதுல கலந்துக்க முதல்முறையா ரப்பாயி அங்கே போயிருக்கார் . 

எல்லாரும் இவரை சாதாரணமா நினைக்க, இவர் ப்ரோட்டா சூரி மாதிரி "நீ சால்னா எடுத்துட்டு வர்ற வரைக்கும் வெச்சிட்டு இருப்பாய்ங்களா?"னு சப்ளையரே ஷாக் ஆகுற அளவு சாப்பிட்டிருக்கார். கடைசில ஹோட்டல்காரங்களே அவரை துரத்தி விடுற அளவுக்கு போயிருக்கு நிலைமை. அடுத்தடுத்து பல போட்டிகள்ல கலந்து ஜெயிச்சவர் அந்தப் பணத்தை வெச்சு தன்னோட மகள்களுக்கு கல்யாணமும் பண்ணி வெச்சிருக்கார்.

ஒருகட்டத்துல "ரப்பாயி விரும்பி உண்ணும் உணவு"னு ஹோட்டல்காரங்களே அவங்க கடைக்கு விளம்பரம் பண்ற அளவுக்கு பிரபலமா மாறினார் ரப்பாயி. இந்தியா மட்டுமில்லாம வெளிநாடுகள்லயும் நிறைய போட்டிகள்ல சாப்பிட்டு சாதனை படைச்சவர், 2006-ஆம் வருஷம் இறந்துட்டார். இவருடைய வாழ்க்கையை 'தீட்டா ரப்பாயி'னு டைட்டில் வெச்சு ஒரு படமாவே மலையாளத்தில் எடுத்திருக்காங்கனா பார்த்துக்கோங்க.  

Theetta Rappai
Woman eating Mattress : 20 ஆண்டுகளாக மெத்தை பஞ்சை உண்ணும் பெண் !

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com