
ஹெல்மேட் அணிவது சாலை விபத்துகளிருந்து தற்காத்து கொள்வதற்காகத்தான். அதிலும் வித்தியாசமாக யோசித்து பொம்மை ஹெல்மேட் ஒன்றை அணிந்துள்ளார் ஒரு மாணவர்.
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் கல்லூரி மாணவர் ஒருவர் பொம்மை ஹெல்மேட் அணிந்து இருசக்கர வாகனத்தில் வலம் வந்து சாலையில் செல்பவர்களை பயமுறுத்தியுள்ளார். இதனை அறிந்த காவல்துறை அந்த மாணவரை குற்றாலம் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.
மேலும், "இனிமேல் இதுபோல் செய்யமாட்டேன்" என அவர் மன்னிப்பு கேட்டு விட்டு பத்தாயிரம் ரூபாய் அபராதத்தையும் கட்டிவிட்டு சென்றுள்ளார். வித்தியாசமாக செய்வதாக நினைத்து வில்லங்கத்தில் சிக்கிய மாணவரை நெட்டிசன்கள் 'இதெல்லாம் நமக்கு தேவைதான கோபி?' என்று சமூகவலைத்தளங்களில் அவர் மன்னிப்பு கேட்கும் வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.
- மு.இந்துமதி.