RN Ravi : இந்த 10 மசோதாக்களுக்கு 'நோ' சொல்லமாட்டார் ஆளுநர்! - ஒரு கலக்கல் லிஸ்ட்

சேரி போன்ற வார்த்தைகளுக்கு அர்த்தங்கள் தெரிந்துக் கொள்ள பிரெஞ்சு மொழி பயிலலாம். காணாமல் போன இன்னொரு வாழைப்பழத்தை கண்டுபிடிக்க தனிக்குழு அமைப்பு.
rn ravi
rn ravitimepass

"ஆளுநர் தலையிடாத அளவுக்கு மாநில அரசு சட்டங்களை நிறைவேற்ற வேண்டும். அதற்கு துணையாக நிச்சயமாக ஆளுநர்கள் நிற்போம்" என்று சேலத்தில் ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் நேற்று முன்தினம் கூறியுள்ளார்.

பாம்பும் கீரியும் போல, எலியும் பூனையும் போல, கோலியும் கம்பீரும் போல பாஜக ஆளாத மாநில முதல்வர்களுக்கும், அதன் ஆளுநர்களுக்கும் முட்டல்களும் மோதல்களும் இருந்துகொண்டே தான் இருக்கின்றன.

என்னதான் உச்ச நீதிமன்றம், "தாங்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அல்ல என்பதை ஆளுநர்கள் மறக்கக் கூடாது. நீங்கள் நெருப்புடன் விளையாடுகிறீர்கள்", "மாநிலத்தின் ஆளுநராக அரசியலமைப்பில் சில அதிகாரங்கள் இருந்தாலும், அவற்றைக் கொண்டு சட்டமன்றத்தின் அதிகாரத்தை முறியடிக்க முடியாது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளுக்கே உண்மையான அதிகாரம் இருக்கிறது" போன்ற வார்த்தைகள் மூலம் ஆளுநர்களுக்கு அடிக்கடி குட்டு வைத்தாலும், தங்களுக்கு கொடுத்த புராஜெக்டுகளில் இருந்து சற்றும் விலகுவதில்லை ஆளுநர்கள்.

தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றபட்ட 10 மசோதாக்களை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, கடந்த 13-ம் தேதி திருப்பி அனுப்பி வைத்ததே இதற்கு நல்ல உதாரணம். தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் ஆளுநர் வேந்தராக இருப்பதை மாற்றி, முதலமைச்சரே வேந்தராக இருப்பதற்கேற்ப ஒவ்வொரு பல்கலைக்கழகத்தின் சட்டத்தை திருத்துவதுதான் அந்த 10 மசோதாக்கள்.

“I withhold assent” என்று ஆளுநர் ரவி இந்த மசோதாக்களை திருப்பி அனுப்பினாலும் கடந்த 18-ம் தேதி சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி, அதே தீர்மானங்களை நிறைவேற்றி மீண்டும் ஆளுநருக்கே அனுப்பப்பட்டது தனிக்கதை. இந்த மசோதாக்கள் போக, இன்னும் 12 மசோதாக்கள் ஆளுநரிடம் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

rn ravi
திருக்குறள்: ஆளுநர் ‘ரவி’மேலழகர் உரை!

இந்த நிலையில்தான் ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன், "ஆளுநர் தலையிடாத அளவுக்கு மாநில அரசு சட்டங்களை நிறைவேற்ற வேண்டும். அதற்குத் துணையாக நிச்சயமாக ஆளுநர்கள் நிற்போம்" என்று கூறியுள்ளார்.

இந்த கூற்றை வைத்து, மூளையை நன்றாகக் கசக்கி, ஆழ்ந்து யோசித்தால் இப்படி 10 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டால் கண்டிப்பாக ஆளுநர்கள் தலையிடமாட்டார்கள், நிச்சயம் ஆளுநர்கள் துணை நிற்பார்கள் என்று நமக்குத் தோன்றுகிறது. இந்த மசோதாக்களை மாநில அரசுகளுக்கு நாம் பரிந்துரைக்கிறோம்...

1. யாரும், யாருடைய வாட்ச் பில்லையும் கேட்கக்கூடாது.

2. அனைவரும் எக்சல் ஷீட்(Excel sheet) கற்றுக்கொள்வது கட்டாயம். இதற்காக தனியாக அண்ணாமலை எக்சல் கோச்சிங் சென்டர் உருவாக்கப்படும்.

3. நடைப்பயணம் என்றால் வெறும் நடைபயணம் மட்டும் அல்ல; வேன் பயணங்களில் சென்றாலும் அது நடைபயணமாகவே கருதப்படும்.

4. எக்காரணம் கொண்டும் எந்த வாட்சப், போன் கால் லீக் ஆடியோக்கள் வெளியே கசியக்கூடாது.

5. ஆன்லைன் ரம்மி தேசிய விளையாட்டு ஆக்கப்படுகிறது.

6. காணாமல் போன இன்னொரு வாழைப்பழத்தை கண்டுபிடிக்க தனிக்குழு அமைப்பு.

7. பிரதமர் மோடியைப் போல அனைவரும் 2 மணி நேரம் மட்டும் உறங்குங்கள்.

8. ஒன்பது கிரகங்களில் உச்சம்பெற்ற யார் வேண்டுமானாலும் 20,000 புத்தகங்கள் படிக்கலாம்.

9. சேரி போன்ற வார்த்தைகளுக்கு அர்த்தங்கள் தெரிந்துக் கொள்ள பிரெஞ்சு மொழி பயிலலாம்.

10. இந்திதான் நமது தேசிய மொழி.

rn ravi
'தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி' - அது ஒரு டவுசர் காலம் | Epi 9

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com