அடிக்கிற வெயிலுக்கு ஆட்டோல போகணும்னு நினைச்சாலே ஐயையோ வேணாண்டா சாமினு தான் நாம எல்லாருமே நினைப்போம். ஆனா இந்த ஆட்டோல போனா கண்டிப்பா நம்ம அப்படி ஃபீல் பண்ணவே மாட்டோம். ஏன்னா இது ஒரு குளு குளு ஆட்டோ !!
பொதுவா ஆட்டோ எல்லாமே ஒரே மாதிரி தான் வடிவமைப்பாங்க. ஆனா அதை ஓட்டுற டிரைவர்ஸ் அதுல சில பல அம்சங்களை போட்டு ஆச்சரியப்படுற மாதிரி மாத்துவாங்க.. உதாரணத்துக்கு, 2019 மும்பையில சத்யவான் கீட், வாஷ்பேசின், மொபைல் போன் சார்ஜிங் பாயின்ட்கள், செடிகள் மற்றும் தொலைக்காட்சித் திரை போன்ற வசதிகளோடு கூடிய 'ஹோம் சிஸ்டம் ஆட்டோ ரிக்ஷா'வ உருவாக்கி செய்தி வெளியிட்டு இருந்தாரு..
அதேபோல், போன வருஷம் டெல்லிய சார்ந்த மகேந்திர குமார்ன்ற ஆட்டோ டிரைவர் தோட்ட ஆட்டோவ உருவாக்குனாரு... வண்டியுடய கூரையில தக்காளி, கருவேப்பிலை, பாக்கு, கீரைனு 25 வகையான செடிகளோட ஒரு சின்ன சமையலறை தோட்டத்தை வளர்த்திருந்தாரு. தோட்டம், அவரையும் பயணிகளையும் நேரடி சூரிய ஒளியிலருந்து பாதுகாத்து ஆட்டோவுடைய ஹீட்டையும் குறைச்சிருக்கு..
அந்த மாதிரி தான் சீசனுக்கு தகுந்த மாதிரி ஒரு சூப்பரான அம்சத்தை கொண்டு வந்திருக்காரு இந்த டிரைவர். இன்ஸ்டாகிராமில் இந்த ஆட்டோவோட வீடியோ ரொம்ப வைரலா போயிட்டிருக்கு.. நெடிசன்ஸ் வேற லெவல்ல கமெண்ட் பண்ணிட்டிருக்காங்க... ஆட்டோவோட ரெஜிஸ்ட்ரேஷன் நம்பர் படி அந்த ஆட்டோ பஞ்சாப்ப சேர்ந்த ஆட்டோவா தான் இருக்கும். அடிக்கிற வெயிலுல குளுகுளுன்னு இருக்கணும்னு ஏர்கூலர ஃபிட் பண்ணி இருக்காரு.
இந்த வீடியோ கிட்டத்தட்ட மூன்றறை லட்சம் லைக்ஸ் வாங்கியிருக்கு... இந்த மாதிரி குளு குளுனு ஆட்டோ ரைட் பண்றதுக்கு நம்ம ஊர்லயும் இந்த மாதிரி நாலு அஞ்சு ஆட்டோ இருந்தா நல்லாதான் இருக்கும்ல ??