Hotel Atrocities : உயர்தர சைவ பவன்கள்ல நடக்கும் அட்ராசிட்டிஸ் !

நாம என்ன டிபன் ஆர்டர் பண்ணாலும் கூடவே வடையும் வரும். "ஏய்... இந்தாப்பா இந்த வடையை திரும்ப எடுத்துட்டு போ"ன்னு எதிர்நீச்சல் குணசேகரன் மாதிரி கத்தத் தோணும். ஆனா நம்ம கௌரவம் அத தடுத்துடும்.
Hotel
HotelHotel

உயர்தர சைவ பவன்கள் சில தவிர்க்க முடியா அடையாளங்கள்...

கல்லாவுக்கு பின்னாடி பெருசா பெருசா சாமிப்படங்கள் மாட்டப்பட்டிருக்கும். அந்த சாமிம்படங்களுக்கு நடுவுல செத்துப்போன ஹோட்டல் ஓனரோட போட்டாவும் பெருசா மாட்டப்பட்டிருக்கும்.

கண்டிப்பா கல்லா டேபிள்ல கண்ணாடி தமளர்க்குள்ள எழுமிச்சம் பழம் மெதந்திட்டிருக்கும். அதே டேபிள்ல ரெண்டொரு அனாதை இல்ல டிரான்ஸ்பரண்ட் உண்டியல்களும் இருக்கும்.

ஹோட்டல் வாசல் நிலைல நிலை உயரப் பூமாலை தினமும் புதுசு புதுசா தொங்கும். ஆனால் உள்ளே வாசஸ்பேசின் சரியா கழுவாம நாறிக்கிடக்கும்.

வாஷ் பேசின்ல குழாய் இருக்கும். ஆனா பெரும்பாலும் தண்ணி வராது. ஒரு அலுமினிய வாளில தண்ணி வச்சிருப்பாங்க. அத மொண்டுதான் கையை கழுவனும்.

பெருமைக்கு ஹேண்ட் டிரையர் வச்சிருப்பாங்க. ஆனால் அது என்னைக்குமே வேலை செய்யாது.

டிஸ்யூ பேப்பர் டிஸ்பென்சர் இருக்கும். ஆனா அதுல டிஸ்யூ பேப்பரே இருக்காது.

ரெஸ்ட் ரூம் இருக்கும். ஆனா அதுல எப்போதுமே பூட்டு தொங்கிட்டிருக்கும் தப்பித்தவறி தெறந்திருந்தா ஏன்டா போனோம்னு இருக்கும். விக்ரவாண்டி மோட்டல்ல உச்சா போனதெல்லாம் ஞாபகத்துக்கு வரும்.

Hotel
Tamil Heroகளை காப்பாற்றும் மிருகங்கள் - ஒரு லிஸ்ட் !

கல்லால 'எதைக் கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு'ன்னு கீதை வாசகமெல்லாம் எழுதியிருக்கும். ஆனா ஒரு எக்ஸ்ட்ரா அப்பளம் கேட்டா பத்துரூபா எக்ஸ்ட்ரா பில் வரும்.

நாம டைனிங்ல ஒக்காந்து கல்லால உக்காந்திருக்கிறவர ஒரு பார்வை பார்க்கணும். அப்பத்தான் அவர் நம்ம தலைக்குமேல இருக்கிற ஃபேன் ஸ்விட்ச போடுவார்.

டைனிங்ல ஒக்காந்து பத்து நிமிஷம் கழிச்சி தான் ஏற்கனவே சாப்ட்ட இலையை எடுக்க வருவாங்க. அதுக்கப்புறம் ஒரு பத்து நிமிஷம் கழிச்சித்தான் சப்பளையரே வருவாரு.

வந்த சப்பளையர்ட்ட இட்லி தோசை வடை பூரி பொங்கலை தவிர வேற எத கேட்டாலும் "இல்லை லேட்டாகும் அது ஈவினிங்க்குத்தான் மார்னிங்குக்கு கிடையாது"ன்னு பதில் வரும்.

நாம என்ன டிபன் ஆர்டர் பண்ணாலும் கூடவே வடையும் வரும். "ஏய்... இந்தாப்பா இந்த வடையை திரும்ப எடுத்துட்டு போ"ன்னு எதிர்நீச்சல் குணசேகரன் மாதிரி கத்தத் தோணும். ஆனா நம்ம கௌரவம் அத தடுத்துடும்.

Hotel
கடவுள் வேஷம்போட்டு கடுப்பேத்தின நடிகர்கள் - ஒரு லிஸ்ட் !

வந்த டிபன்ல ஒன்னு சட்னில உப்பு இருக்காது, இல்ல லேசா ஊசி போயிருக்கும். இந்த ரெண்டுல ஒன்னு கண்டிப்பா நடக்கும்.

சப்ளையர் சப்ளை பண்ணிட்டு காணாம போயிடுவாரு. சாம்பார் சட்னி பத்தலைன்னா அவர் வர்ற வரைக்கும் தேவுடு காத்துட்டு ஒக்காந்திருக்கணும்.

சாப்பிடும் போதுதான் சப்ளையர் காணாம போயிடுவாரு சாப்பிட்டதுக்கு பில்லை கொண்டுவந்து வச்சிட்டாருன்னா நாம பணத்தை எண்ணி வைக்கிற வரை இங்கேயே தான் சுத்திகிட்டிருப்பாரு.

நாம அவருக்கு டிப்ஸ் வைக்கிறதுக்கு வசதியா பில் போக மீதி சில்லறையில் 5 ரூபா 10 ரூபா காயின் இருக்கிற மாதிரி பாத்துப்பாரு.

கடேசியா சாப்ட்டு முடிச்சி வெளியே வந்தா, இத சாப்பிடத்தான் இங்கே வந்தோமா பேசாம பொண்டாட்டி செஞ்ச உப்புமாவை சாப்பிட்டிருப்கலாமேன்னு தோணும்.

- பொம்மையா முருகன்.

Hotel
பெண் வேடமிட்டு ‘சொதப்பிய’ நடிகர்கள் - ஒரு லிஸ்ட் !

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com