பிரிட்டிஷ் ஜூவல்லரி பிராண்டான கிராஃப் கூட இணைந்துதான் இந்த விலை உயர்ந்த iPhone வடிவமைக்கப்பட்டிருக்கு. வெறும் மூணே மூணு ஸ்டாக் தான் வடிவமைச்சியிருக்காங்க.
இந்த ப்ரத்யேக iphone 14 ப்ரோ மேக்ஸ் ஃபோனோட விலை இந்திய ரூபாய் மதிப்புல கிட்டத்தட்ட 5 கோடி. இந்த iphone டயமண்ட் ஸ்னோஃப்ளேக்னு (Diamond snowflake) அழைக்கப்படுது. விலையுயர்ந்த இந்த iphone-ஐ கேவியர் வடிவமைச்சிருக்காங்க.
இந்த ஐபோனை விட லம்போர்கினி ஹுராகன் ஈவோ விலை கம்மி.. இந்தியால இந்த கார் ரூபாய் 3.7 கோடிக்கு கிடைக்குது. இப்படி ஐந்து கோடி மதிப்பான iphoneஅ பத்தி கேள்விப்பட்டதும், சிங்கம் படத்துல மனோரமா சொல்ற டயலாக் தான் ஞாபகம் வந்தது..
"நாலு ஏக்கர் தென்னந்தோப்பயா நடுக்கழுத்துல போட்டுருந்த"
iPhone 14 ப்ரோ மேக்ஸ்ஸின் விலை ₹1,27,999 தான். ஆனா 5 கோடிக்கு இந்த போனை விக்கிற அளவுக்கு இந்த போன்ல என்ன ஸ்பெஷல் அப்டின்னா இந்த ஐபோனுக்கு பின்னாடி இருக்கக்கூடிய பிளேட்ல இருக்க பென்டன்ட் விலை உயர்ந்த பிளாட்டினம் மற்றும் வெள்ளை தங்கத்தால உருவாக்கப்பட்டிருக்கு.
அது மட்டும் இல்லாம ரூபாய் 62 லட்சம் மதிப்புள்ள வைர கற்களையும் இந்த பிளேட்ல பதிச்சு இருக்காங்க. தங்கம், வெள்ளை தங்கம், பிளாட்டினம், வைரம்னு விலை உயர்ந்த பொருட்களால தயாரிக்கப்பட்டு இருக்கிறதனால இந்த போன் 5 கோடி வரைக்கும் விற்கப்படுது.
லம்போர்கினி காரைவிடவும் விலை உயர்ந்த இந்த போன வாங்கணும்னா கேவியருடைய அதிகாரப்பூர்வ தளத்துல வாங்கிக்க முடியும். இந்த ஃபோனுக்கு ஒரு வருட வாரண்டியும் கொடுக்குறாங்க.
இந்த போன EMIல வாங்குனா எத்தன வருஷத்துக்கு EMI கட்ட வேண்டி இருக்கும் !! நினைச்சாலே தலை சுத்துது !