விழுப்புரம் மாவட்டத்தில் எமன் வேடமிட்டு தலைக்கவசம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்திய காவல்துறை.
தலைகவசத்தின் தேவை குறித்து, தொடர்ந்து பல்வேறு வழிகளில் காவல்துறை விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. இதன் அடுத்தக்கட்டமாக, எமன் வேடமிட்டவர்களை இந்த விழிப்புணர்வு பணியில் ஈடுபட்டுத்தி, பொது மக்களைக் கதி கலங்க வைத்துள்ளது விழுப்புரம் மாவட்ட போக்குவரத்து காவல்துறை.
இதுதொடர்பான பதாகைகளை காவல்துறையினர் ஏந்தியுள்ளனர். அதில், "பொதுமக்கள் நலன் கருதி, தலைக்கவசம் அணியுங்கள் என்று கலை நிகழ்ச்சி மூலமாக, அன்போடு எடுத்துக் கூறினாலும், காலம் என்ற எமன் காத்திருக்க மாட்டான், தலைக்கவசம் அணிவோம்! உயிர் இழப்பை தவிர்ப்போம்!!" என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது.