vilupuram
vilupuramtimepassonline

'வெயிலுக்கு இரக்கம் இல்லப்பா' - தண்ணீரில் உறங்கிய சுட்டி; செல்லமாக எழுப்பிய தந்தை!

'நீர் கோழியாடா நீ, தண்ணியிலியே தூங்குற... ராஜா.., சாமி..., அப்புக்குட்டி எழுந்திரிடா..." என்று செல்லமாக பேசி எழுப்பியுள்ளார்.
Published on

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளர் குமரன். இவருக்கு மூன்று வயதில் ஒரு குழந்தை உள்ளது. கோடை வெயிலின் தாக்கத்தை தாங்க முடியாத குழந்தை பாத்திரத்தில் வைக்கப்பட்டிருந்த தண்ணீரில் படுத்து ஆழ்ந்து உறங்கியிருக்கிறது.

அதனை கண்ட குமரன் குழந்தையை எழுப்ப முயன்றுள்ளார். "எவ்வளவு வெயில் இருந்தா இந்த புள்ள இப்படி தூங்கும். இந்த வெயிலுக்கு ஈவு இறக்கமே இல்லப்பா... ராஜா.., சாமி..., அப்புக்குட்டி எழுந்திரிடா... நீர் கோழியாடா நீ, தண்ணியிலியே தூங்குற..." என்று செல்லமாக பேசி எழுப்பியுள்ளார்.

எதற்கும் மசியாத குழந்தை தன் தூக்கத்தை தொடர்ந்தது. ஒரு தந்தை தன் குழந்தையை அன்பாக எழுப்பும் வீடியோ, அனைவராலும் ரசிக்கப்பட்டு சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

- அ.கண்ணதாசன்.

vilupuram
Pakistan Population: 8 மணிக்கு மேல குழந்தை பெற முயற்சிக்க கூடாதா!
Timepass Online
timepassonline.vikatan.com