பெண்கள் பிரிமியர் லீக் (WPL) முதல் சீசன் நடைபெற்று வருகிறது. இதற்கான ஏலத்தில் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து 448 வீரர்கள் பங்கேற்கின்றனர்.
டெல்லி கேபிடல்ஸ், குஜராத் ஜெயண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், உபி வாரியர்ஸ் ஆகிய ஐந்து அணிகள் விளையாடுகின்றன.
மும்பை இந்தியன்ஸ்
ஹர்மன்ப்ரீத் கவுர் – ரூ. 1.8 கோடி
நாட் ஸ்கிவர்-பிரண்ட் (UK) - ரூ. 3.2 கோடி
அமெலியா கெர் (NZ) – ரூ. 1 கோடி
பூஜா வஸ்த்ரகர் - ரூ 1.9 கோடி
யாஸ்திகா பாட்டியா - ரூ 1.5 கோடி
ஹீதர் கிரஹாம் (AUS) – ரூ. 30லட்சம்
இஸ்ஸி வோங் - ரூ. 30லட்சம்
அமன்ஜோத் கவுர் – ரூ. 50லட்சம்
தாரா குஜ்ஜர் - ரூ. 10லட்சம்
சைகா இஷாக் – ரூ. 10லட்சம்
ஹேலி மேத்யூஸ் (WI) – ரூ. 40லட்சம்
க்ளோ ட்ரையான் - ரூ. 30லட்சம்
ஹுமைரா காசி – ரூ. 10லட்சம்
பிரியனகா பாலா – ரூ. 20லட்சம்
ஹர்மன்ப்ரீத் கவுர்- மும்பை இந்தியன்ஸ்
ஹர்மன்பிரீத் கவுர் தற்போது பெண்கள் கிரிக்கெட்டில் சிறந்த பேட்ஸ்வுமேன் ஆவார். 147 டி20 போட்டிகளில் விளையாடி 2965 ரன்களும், 32 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார்.
பல ஆட்டங்களில் இந்தியாவை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றுள்ளார். தனித்துவமான பேட்டிங்காலும் தலைமைத்துவ திறன்களால் ஹர்மன்பிரீத் கவுரை மும்பை இந்தியன்ஸ் 1.8 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது.
2017 ஆம் ஆண்டில் மத்திய இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகம் ஹர்மன்பிரீத் கவுருக்கு அருச்சுனா விருது வழங்கியது.
2009 ஆம் ஆண்டில் போவ்ரால், பிராட்மன் ஓவல் கிரிக்கெட் அரங்கத்தில் நடைபெற்ற பெண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பைக்கான தொடரில் பாகிஸ்தான் பெண்கள் கிரிக்கெட் அணிக்கு எதிரான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அறிமுகமானார்.
2012 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஆசிய பெண்கள் T20 தொடரில் அணித் தலைவராக நியமிக்கப்பட்டார். பாகிஸ்தான் பெண்கள் கிரிக்கெட் அணிக்கு எதிரான இந்தப் போட்டியில் 82 ஓட்டங்கள் எடுத்து ஆசிய கோப்பையை வென்றார்.