Brazil
BrazilBrazil

Brazil : Mobile-ஐ களவாடியவரை காதல் கணவனாக்கிய பிரேசில் பெண் !

அந்த பெண்ணின் போனில் இருந்த புகைப்படத்தை பார்த்தவுடன் அந்த பெண்ணின் மீது காதல் வந்துவிட்டதாகவும் பிறகு போனில் கிடைத்த விவரங்களைப் பயன்படுத்தி அவளைத் தொடர்பு கொண்டு போனை ஒப்படைத்துள்ளார்.
Published on

பெண் ஒருவர் தன்னுடைய மொபைல் போனை திருடிய நபருடனே காதலில் விழுந்த விவகாரம் இணையத்தில் வைரலாகியுள்ளது.

பிரேசில் நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் தன்னிடமிருந்து செல்போனை கொள்ளையடித்த நபரையே காதலிக்கிறார். இந்த ஜோடியின் களவானி காதலை பற்றி ட்விட்டரில் ஒரு நேர்காணல் வீடியோ வெளியாகியுள்ளது.

இம்மானுவேல் என்ற பெண் தான் அந்த களவானி காதலி. இதுபற்றி அவரிடம் கேட்டபோது "நான் அவர் வசிக்கும் தெருவில் நடந்து போய் கொண்டிருந்தேன். துரதிர்ஷ்டவசமாக, என் செல்போன் திருடப்பட்டுவிட்டது. அங்கிருந்து தான் எங்களுடைய காதல் பயணம் தொடங்கியது" என்று இமானுவேல் விவரிக்கிறார்.

தற்போது அவரது கணவனாக இருக்கும் அந்த திருடர், அந்த பெண்ணின் போனில் இருந்த புகைப்படத்தை பார்த்தவுடன் அந்த பெண்ணின் மீது காதல் வந்துவிட்டதாகவும் பிறகு போனில் கிடைத்த விவரங்களைப் பயன்படுத்தி அவளைத் தொடர்பு கொண்டு போனை ஒப்படைத்துள்ளார்.

"எனக்கு ஒரு பெண் துணை இல்லாததால் நான் மிகவும் மோசமான நிலையில் இருந்தேன், உங்களுக்குத் தெரியுமா?  நான் தொலைபேசியில் அவரது புகைப்படத்தைப் பார்த்தபோது, என்ன ஒரு அழகி,  தினமும் அப்படி ஒரு அழகியைப் பார்க்க முடியாது என நினைத்தேன். நான் போனை திருடியதற்காக வருத்தப்படுகிறேன்" என்று அவர் கூறினார்.

இந்த காதல் கதை ட்விட்டரில் பரவியுள்ளது. வினோதமான இந்தக் காதல் கதையில் ஆயிரக்கணக்கானோர் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துள்ளனர். மேலும் இந்த வீடியோவை இதுவரை 2,35000 பார்வைகளை பெற்றுள்ளது.

Brazil
Thunivu: Ajith Kumar-ஐ ஃபாலோ செய்யும் மலையாள சினிமா ! | Malayalam Cinema
Timepass Online
timepassonline.vikatan.com