அமெரிக்காவின் மேற்கு நியூயார்க்கில் செஸ்ட் நட் ரிட்ஜ் நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. இந்த நீர்வீழ்ச்சியானது நித்திய சுடர் நீர்வீழ்ச்சி என அழைக்கப்படுகிறது. இது 35அடி உயரத்தில் அமைந்துள்ளது. இதன் அடியில் நீண்ட காலமாக எரியும் சுடர் ஒன்று இருக்கிறது. இது பல ஆண்டுகாலமாக அணையாமல் எப்போதும் அப்படியே எரிவது எல்லாரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அருவியின் மேல இருந்து கீழே விழும் நீர்வீழ்ச்சிக்கு அடியில் நெருப்பு எரிந்து கொண்டே இருக்கிறது.
இந்த நீர்வீழ்ச்சி பற்றி பல்வேறு ஆய்வுகள் உள்ளன. புவியின் உட்புற அடுக்கிலிருந்து மீத்தேன் வாயுவானது சிறு துவாரம் வழியாக வெளிப்பட்டுக் கொண்டே இருக்கிறது. இதனால்தான் இந்த நெருப்பு உண்டாகிறது என்று சொல்லப்படுகிறது. கடினமான பாறையில் உள்ள விரிசல்களிலிருந்து வெளியேறும் வாயுக்களின் மூலம் இந்த தீ எரிவதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். இந்த நெருப்பானது பூர்வீக அமெரிக்கர்களால் ஏற்படுத்தப்பட்டதாகவும் நம்பப்படுகிறது.
இப்படி உண்டாகும் இந்த நெருப்பு எப்போதுமே அணையாமல் எரிந்து கொண்டு இருப்பது தான் கூடுதல் சிறப்பு. இந்த அணையா சுடரானது அருவியின் வலதுபுறத்தில் பிரகாசமாக எரிந்து காண்போரை கவரும் தன்மையில் இருக்கிறது. இயற்கையாக அமைந்துள்ளன நீர்வீழ்ச்சி உலகின் மிக முக்கியமான நீர்வீழ்ச்சியாக அறியப்படுகிறது.
- மு.இந்துமதி.