உலகின் விலையுயர்ந்த கைப்பை - இதன் விலை எவ்வளவு தெரியுமா?

பத்து திறமை மிக்க கைவினை கலைஞர்களால் 8,800 மணிநேரம் உழைப்பிற்குப் பிறகு இதய வடிவிலான கைப்பை வடிவமைக்கப்பட்டது.
diamond
diamondtimepassonline
Published on

பொதுவாக கைப்பையின் விலை 100 ரூபாயிலிருந்து 500 ரூபாய் வரை இருக்கும். விலை உயர்ந்த கைப்பையாக வாங்க வேண்டும் என்றால் 1000 ரூபாய் முதல் 5000 ரூபாய் வரை கூட இருக்கிறது. ஆனால், 31.55 கோடியில் ஒரு கைப்பை உள்ளது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

லெபனான் நாட்டைச் சேர்ந்த ராபர்ட் மௌவாத் என்பவரால் 2010 ஆம் ஆண்டு மௌவாத் 1001 நைட்ஸ் டைமண்ட் கைப்பையை , ஹவுஸ் ஆஃப் மௌவாத் வடிவமைக்கப்பட்டு வெளியிட்டது. இந்தக் கைப்பை ஆனது பத்து திறமை மிக்க கைவினை கலைஞர்களால் 8,800 மணிநேரம் உழைப்பிற்குப் பிறகு இதய வடிவிலான கைப்பை வடிவமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தக் கைப்பையின் விலை 2011 இல் 3.8 மில்லியன் டாலர் கிட்டத்தட்ட இந்திய மதிப்பில் 31.55 கோடியாகும். 3.8 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடைய மௌவாத் 1001 நைட்ஸ் டைமண்ட் கைப்பையானது 2011 இல் கின்னஸ் உலக சாதனைகளில் உலகின் மிகவும் விலையுயர்ந்த கைப்பை என சான்றளிக்கப்பட்டது.

diamond
Singapore : அதிபராகும் இந்திய வம்சாவளியை சேர்ந்த Tharman Shanmugaratnam - சுவாரஸ்ய பின்னணி !

இந்தக் கைப்பையின் விலைக்கு இரண்டு காரணங்கள் உள்ளது. முதலாவதாக, மத்திய கிழக்கு நாட்டின் ஷெஹெராசாடே மற்றும் அவரது மன்னரின் கதையை மையப்படுத்தி கைப்பை வடிவமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மர்மம் மற்றும் காதல் பற்றிய இந்த காவியக் கதையை தொடர்புபடுத்தி இந்த விலையுயர்ந்த கைப்பை உருவாக்கப்பட்டது.

மேலும், இந்தக் கைப்பையில் விலைக்கு முக்கிய காரணமாக இந்த கைப்பையின் மீது பொருத்தப்பட்டுள்ள வைரங்கள் தான். மொத்தம் 381.92 காரட் எடை கொண்டுள்ளது. மேலும், அவற்றில் 105 மஞ்சள், 56 இளஞ்சிவப்பு மற்றும் 4,356 நிறமற்ற வைரங்கள் என்று மொத்தமாக 4,517 வைரங்கள் பொருத்தப்பட்டுள்ளன . இந்த கைப்பையானது இதய வடிவிலும் மையத்தில் வான வேடிக்கை காட்சியை போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனுடைய தற்போதைய விலை இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட 40.95 கோடி ஆகும்.

தற்போது உங்களிடம் 40.95 கோடி இருந்தால் நீங்கள் அந்த உலகின் மிக விலை உயர்ந்த கைப்பையில் சொந்தக்காரராக ஆக விரும்புவீர்களா?

- அ. சரண்.

diamond
Engineers Day : 'விஜய், சூர்யா, சிம்பு, எம்ஜிஆர்' - தமிழ் சினிமாவின் 'மாஸ்' இஞ்சினியர்கள் !

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com