The Intrepid : Guinness சாதனை படைத்த உலகின் மிகப்பெரிய மது பாட்டில் - எங்கு இருக்கிறது தெரியுமா?

ஏலத்தில் 32 வருடம் பழமையான Macallan single malt வகையைச் சேர்ந்த விஸ்கி நிரப்பப்பட்ட 311 லிட்டர் பாட்டிலை 1.1மில்லியன் யூரோக்கு (இந்திய மதிப்பில் சுமார் 9.87 கோடி) வாங்கினார்.
The Intrepid
The Intrepidtimepass
Published on

கடந்த ஆண்டு, 5 அடி மற்றும் 11 இன்ச் உயரம் கொண்ட உலகின் மிகப்பெரிய ஸ்காட்ச் மது பாட்டிலை ஏலத்தில் எடுத்த வியட்நாமைச் சேர்ந்த தொழிலதிபர் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார்.

வியட்நாமின் பிரபல தொழிலதிபரான Viet Nguyen Dinh Tuan கடந்த ஆண்டு எடின்பர்க்கில் நடந்த ஏலத்தில் 32 வருடம் பழமையான Macallan single malt வகையைச் சேர்ந்த விஸ்கி நிரப்பப்பட்ட 311 லிட்டர் பாட்டிலை 1.1மில்லியன் யூரோக்கு (இந்திய மதிப்பில் சுமார் 9.87 கோடி) வாங்கினார்.

இந்நிலையில் கடந்த வியாழன் அன்று 'உலகின் மிகப்பெரிய மது பாட்டிலுக்காக' கின்னஸ் உலக சாதனையைச் செய்துள்ளது. இவர் இது மட்டுமின்றி பல்வேறு விலை உயர்ந்த மற்றும் பழமையான மதுபாட்டில்களைச் சேகரித்து வருகிறார். குறிப்பாக பிரான்ஸ் நாட்டின் 150 வருடம் பழமையான விஸ்கி (Cognac), உலகம் முழுவதும் 40 பாட்டில்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்ட Macallan 1926 விஸ்கி இவையும் இவரது சேகரிப்பில் அடங்கும். இந்த Macallan 1926னுடைய ஒரு பாட்டில் விலையே சுமார் 1.5 மில்லியன் யூரோ என்கிறார்கள்.

இது பற்றி அவர் கூறியதாவது, "நான் பல ஆண்டுகளாக இந்த பழைமையான மதுக்களைச் சேகரிப்பதில் எனது பெருமளவு நேரத்தைச் செலவிட்டு வருகிறேன். இந்த Macallan மது பாட்டிலை நான் வாங்கக் காரணம் என்ன வென்றால், இது உலகின் மிகப்பெரிய மற்றும் பழமையான Macallan நிரம்பிய பாட்டில். இவை அனைத்திற்கும் மேலாகப் பாட்டிலின் லேபிளில் சித்தரிக்கப்பட்டுள்ள 11 ஆய்வாளர்களின் சாதனைகளே என்னை வாங்க தூண்டியது." என்று தெரிவித்துள்ளார்.

தந்தை பாசத்தில் அனைவரையும் மிஞ்சும் வண்ணம்,"எனது தந்தை ஒரு கேப்டன். அவர் வாழ்ந்த சமயத்தில் பல்வேறு சாதனைகளைச் செய்துள்ளார். அவருடைய வாழ்க்கையைக் கொண்டாடுவதற்காக இதனைச் செய்துள்ளேன்" எனவும் கூறியுள்ளார்.

- மு.இசக்கிமுத்து.

The Intrepid
தொடர்: அது ஒரு டவுசர் காலம் - 'தாய்மையைப் போற்றும் தாடிக்காரன்' யஷ்

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com