பெண்கள் பிரிமியர் லீக் (WPL) முதல் சீசன் நடைபெற்று வருகிறது. இதற்கான ஏலத்தில் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து 448 வீரர்கள் பங்கேற்கின்றனர்.
டெல்லி கேபிடல்ஸ், குஜராத் ஜெயண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், உபி வாரியர்ஸ் ஆகிய ஐந்து அணிகள் விளையாடுகின்றன.
உபி வாரியர்ஸ்
சோஃபி எக்லெஸ்டோன் (ENG) - ரூ. 1.8 கோடி
தீப்தி சர்மா – ரூ. 2.6 கோடி
தஹ்லியா மெக்ராத் (AUS) – ரூ. 1.4 கோடி
ஷப்னிம் இஸ்மாயில் (SA) – ரூ. 1 கோடி
அலிசா ஹீலி (AUS) - ரூ 70லட்சம்
அஞ்சலி சர்வானி - ரூ 55 லட்சம்
ராஜேஸ்வரி கயக்வாட் - ரூ 40லட்சம்
ஸ்வேதா செஹ்ராவத் - ரூ 40லட்சம்
பார்ஷவி சோப்ரா - ரூ 10 லட்சம்
எஸ் யாசஸ்ரீ - ரூ 10லட்சம்
கிரண் நவ்கிரே - ரூ. 30லட்சம்
கிரேஸ் ஹாரிஸ் (AUS) – ரூ. 75லட்சம்
தேவிகா வைத்யா – ரூ. 1.4 கோடி
லாரன் பெல் - ரூ. 30லட்சம்
லக்ஷ்மி யாதவ் - ரூ. 10லட்சம்
சிம்ரன் ஷேக் - ரூ. 10லட்சம்
தீப்தி சர்மா - உபி வாரியர்ஸ்
தீப்தி சர்மா உபி வாரியர்ஸ் அணியினரால் ரூ. 2.6 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார்.
உத்திரபிரதேசத்தில் உள்ள ஸகாரன்பூர் என்ற இடத்தில் பிறந்த தீப்தி சர்மா இந்திய மகளிா் அணியின் கிரிக்கெட் வீரர் ஆவாா். இவா் தென் ஆப்பிாிக்காவில் 2014 ஆம் ஆண்டு நவம்பா் 28 ஆம் தேதி நடைபெற்ற மகளிருக்கான ஒரு நாள் உலக அளவிலான கிாிக்கெட் போட்டியில் கலந்து கொண்டாா். இவா் இடது கை மட்டையாளராகவும், வலது கை ஆஃப் ஸ்பின் பந்து வீச்சாளராகவும் உள்ளாா்.
2017 மே 15 இல் அயா்லாந்துக்கு எதிராக நடந்த அகில நாடுகளுக்கு இடையே மகளிருக்கான ஒரு நாள் போட்டியில் சா்மா - புனம் ரட் உடன் தொடங்கிய பாா்ட்னா்சிப் ஆட்டத்தில் 320 ரன்களில், இவர் மட்டும் 188 ரன்கள் குவித்து ஒரு புதிய உலக சாதனையைப் படைத்தாா். இந்த சாதனை ஏற்கெனவே இங்கிலாந்தைச் சாா்ந்த சாரா டெய்லா் - கரோலின் அட்கின்ஸ் ஆகியவா்களின் உலக சாதனையை முறியடித்தது.
மேலும் ஏற்கெனவே அகில உலக அளவில் ஒரு நாள் போட்டியில் இருந்த ஆண்களின் சாதனையான 286 (இலங்கை அணியின் உபுல் தரங்கா - சன்னத் ஜெய சூா்யா ) ஆகியவர்களின் சாதனையையும் முறியடித்ததுள்ளார்.