Kerala : பெண் கெட்டப்பில் கோயிலுக்கு வரும் ஆண்கள்

ஆண்கள் அசப்பில் அப்படியே பெண்கள் மாதிரியே இருக்கிறதால புதுசா கோயிலுக்கு போறவங்க ஒரு நிமிஷம் குழம்பித்தான் போவாங்க
பெண் கெட்டப்பில் கோயிலுக்கு வரும் ஆண்கள்
பெண் கெட்டப்பில் கோயிலுக்கு வரும் ஆண்கள்Timepass
Published on

கேரள மாநிலம் கோட்டம் குளகராவில் உள்ளது ஸ்ரீ தேவி கோயில். இந்த கோயில்ல அப்படி என்ன ஸ்பெஷல்னா இங்கே ஆண்கள் பெண் வேஷத்துல வந்து வேண்டிக்கிறதுதான் ஆச்சர்யம். இதை சமயவிளக்கு திருவிழானு சொல்றாங்க ஒவ்வொரு வருசமும் ரெண்டு நாள் நடக்கும் இந்த விழாவில் ஆண்கள் எல்லாம் ஆணழகன் பிரஷாந்த் மாதிரி லேடி கெட்டப்ல வந்து விளக்கு ஏத்தி அவங்களுக்கு தேவையானதை வேண்டிக்கிட்டு இந்த பண்டிகையை சிறப்பா கொண்டாடுறாங்க.

இதுல கலந்துக்கிற பெரும்பாலான ஆண்கள் அசப்பில் அப்படியே பெண்கள் மாதிரியே இருக்கிறதால புதுசா கோயிலுக்கு வர்றவங்க ஒரு நிமிஷம் குழம்பித்தான் போவாங்க. இதுக்காக மேக்கப் ஆர்ட்டிஸ்களை இவங்க கையோட கோயிலுக்கே கூட்டிட்டு வந்திடுறாங்க. கேரள பாரம்பரிய இசையோடு பெண் கெட்டப்ல இவங்க கோயிலை சுத்தி வர்ற அழகை பார்க்க வெளியூர்ல இருந்தெல்லாம் ஆட்கள் வராங்கனா பார்த்துக்கோங்க

திருவிழா முடிவில் சிறந்த பெண் கெட்டப்புக்கு பரிசும் கொடுக்குறாங்க. இந்த வருஷம் அந்த பரிசை வாங்கினவங்க இவங்கதான் 👇

-ஜுல்பிஹார் அலி

பெண் கெட்டப்பில் கோயிலுக்கு வரும் ஆண்கள்
Kerala : கேரளாவைக் கலக்கிய சாப்பாட்டு ராமன் Theetta Rappai !
Timepass Online
timepassonline.vikatan.com