பொதுவாகவே பத்திரிகையாளர் சந்திப்புலயும் சரி மத்த மீட்டிங்ளயும் சரி, பேசுறவங்கள தவிர மத்தவங்களுக்கு தூக்கம் வரும்.. அந்த மாதிரி மேடையில இருக்குறவங்க தூங்கி விழுந்த நிறைய காட்சிகள நாம பார்த்திருப்போம். அதெல்லாம் அவங்களுடய அலட்சிய போக்காதான் நாம விமர்சிப்போம்.
பிரதமர் மோடியுடைய ஒன்பது ஆண்டுகால வெற்றிய குறிக்கிற விதமா நிறைய இடத்துல நிறைய நிகழ்ச்சிகள் நடந்துட்டு இருக்கு. அப்படித்தான் டெல்லியில இருக்க முத்தம்மா ஹால்ல வெளியுறவு துறை அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில நேத்து ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பு நடந்துச்சு.
இந்த பத்திரிக்கையாளர் சந்திப்புல வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயக்குமார், மீனாட்சி லேக்கி உள்ளிட்ட ஐந்து பேர் கலந்துக்கிட்டாங்க . இந்த சந்திப்புல பிரதமருடைய வெளிநாட்டு கொள்கைகள பத்தி ஜெயசங்கர் தெரிவிச்சிட்டிருந்தாரு... பத்திரிக்கையாளர்களும் விறுவிறுப்பா கேள்விகள கேட்க அமைச்சர் ஜெயசங்கர் அதுக்கு பதில்கள கொடுத்துட்டு இருந்தாரு.
பிரதமர் மோடியுடைய வெளிநாட்டு கொள்கைகள், 9 ஆண்டு கால பயணம், இந்திய மக்களுக்கான நன்மைகள் போன்ற விஷயங்கள்ல அறிவிச்சுட்டிருந்தாரு. கூடவே வருங்கால திட்டங்கள் பத்தியும் அமைச்சர் ஜெயக்குமார் சொல்லிட்டிருந்தாரு..
இந்த பத்திரிக்கையாளர் சந்திப்புடைய வீடியோ வெளியாகியிருக்கு. அதுல அமைச்சர் ஜெயசங்கருக்கு பக்கத்துல இருந்த துணை வெளியுறவு துறை அமைச்சரான மீனாட்சி லேக்கி, தூங்குற காட்சி எல்லாரையுமே அதிர்ச்சியான மனநிலைக்கு தள்ளியிருக்கு.. பக்கத்துல இருந்த துணை அமைச்சரே, அமைச்சர் சொல்றத கேட்கலைன்னா.. மக்களாகிய நாம எப்படி கேட்போம் ??
அப்டின்ற கேள்வியதான் மக்கள் எழுப்பிட்டு இருக்காங்க..
ஒன்பது ஆண்டு கால வெற்றிய குறிக்கக்கூடிய விதத்திலதான் இந்த நிகழ்ச்சிகள் நடக்கப்பட்டிருக்கு. அப்படி இருக்கும் பொழுது இந்த வெற்றி நிகழ்ச்சியிலேயே துணை அமைச்சர் இப்படி தூங்கி இருக்கிறது அவங்களுடய அலட்சிய போக்கா தான் தெரியுது..
இந்த மாதிரியான பத்திரிகையாளர் சந்திப்புகள் ஆட்சியில இருக்க ஆட்சியாளர்களுடைய மக்கள் மீதான அக்கறைய தெரிவிக்கிற விதமா தான் இருக்கு. இந்த மாதிரியான சந்திப்புகள்லயே அமைச்சர்களும் அதிகாரிகளும் இப்படி அலட்சியமா இருக்கிறது, மக்களுக்கு அவ நம்பிக்கையைதா கொடுக்குது.