ADMK : Teddy Bear, ஆடு, மாடு, கோழி, 50 வகை சீர் - எடப்பாடிக்கு கொடுத்த விஜயபாஸ்கர் !

அந்தச் சீர்வரிசையில் கன்றுக்குட்டி, ஆட்டுக்குட்டி, 50 கோழிகள் உள்ளிட்டவைகளும் அடங்கும். குறிப்பாக, டெடி பியர் பொம்மைகளும் இந்த சீர்வரிசையில் இடம்பெற்றிருந்தது.
ADMK
ADMKADMK

அதிமுக பொதுச்செயலாளராக பொறுப்பேற்றிருக்கும் எடப்பாடி பழனிசாமிக்கு தொண்டர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதிமுக முன்னாள் அமைச்சர்களும் வரிசையாக அவரைச் சந்தித்து வருகின்றனர். இந்நிலையில், இன்று சுகாதாரத்துறை முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில், அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்றதை கொண்டாடும் விதமாக, 50 வகையான சீர்வரிசைகளுடன் மங்கள இசை வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக வந்து வாழ்த்து தெரிவித்தனர்.

அப்போது, 100 கார்களில் புதுக்கோட்டையில் இருந்து கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என திரண்டு சேலத்திற்கு வருகை தந்தனர். எடப்பாடி பழனிசாமியின் இல்லத்திற்கு, ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு முன்பிருந்தே ஊர்வலமாக நடந்து வந்து சீர்வரிசைகளை வழங்கினர்.

அந்தச் சீர்வரிசையில் கன்றுக்குட்டி, ஆட்டுக்குட்டி, 50 கோழிகள் உள்ளிட்டவைகளும் அடங்கும். குறிப்பாக, டெடி பியர் பொம்மைகளும் இந்த சீர்வரிசையில் இடம்பெற்றிருந்தது. இளம்பச்சை நிறத்திலான அந்த டெடி பியர் அனைவரையும் கவர்ந்தது.

ADMK
Happy Teddy Day 2023 : இந்த கரடி பொம்மைக்கு பின்னாடி ஒரு வரலாறா? | Valentine's Week

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com