DMK : குடுகுடுப்பை அடித்து இந்தியா கூட்டணிக்கு பிரச்சாரம் செய்த திமுக பேச்சாளர்! | INDIA

விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட உள்ள நிலையில் திமுக தலைமைக் கழக பேச்சாளர்களின் ஒருவரான சேலம் கோவிந்தன் என்பவர் குடுகுடுப்பை வாசித்தவாறு பிரச்சாரம் ஈடுபட்டது வைரலாகியுள்ளது.
DMK
DMKtimepass
Published on

விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட உள்ள நிலையில் திமுக தலைமைக் கழக பேச்சாளர்களின் ஒருவரான சேலம் கோவிந்தன் என்பவர் குடுகுடுப்பை வாசித்தவாறு பிரச்சாரம் ஈடுபட்டது வைரலாகியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்து தெக்காலூர் குப்பச்சிபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் திமுக தலைமைக் கழக பேச்சாளர்களின் ஒருவரான சேலம் கோவிந்தன் என்பவர் இந்தியா கூட்டணிக்கு வாக்களிக்க கோரி வீதிகள் தோறும் சென்று தனது தேர்தல் பிரச்சாரத்தை துவங்கியுள்ளார்.

தாராபுரம் தெக்கலூர் குப்பிச்சிபாளையம் சுற்றுவட்டார கிராமங்களுக்கு நேரடியாக வீதிகளில் சென்ற அவர் இந்தியா கூட்டணிக்கு வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்க கோரி குடுகுடுப்பை வாசித்தவாறு பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

இந்நிகழ்வு அப்பகுதியில் உள்ள கிராம மக்களை வெகுவாக கவர்ந்தது.

- இளையபதி.

படம்: ரமேஷ் கந்தசாமி.

DMK
Tamil Cinema : மாறுவேடப் போட்டி நடிகர்கள் - ஒரு கலக்கல் லிஸ்ட்
Timepass Online
timepassonline.vikatan.com