Russia Ukraine war : நான் ஒரேநாளில் போரை நிறுத்துவேன் - Donald Trump

ரஷ்ய அதிபர் புதின் நான் என்ன சொன்னாலும் கேட்பார். போரை நிறுத்த எனக்கு 1 நாளுக்கு மேல் ஆகாது. மூன்றாம் உலகப் போரைத் தடுக்கும் சக்தி எனக்கு மட்டும் தான் உண்டு.
Donald Trump
Donald TrumpDonald Trump

ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் ஓராண்டிற்கும் மேலாக போர் நடைபெற்று வருகிறது. இந்தப் போரானது சர்வதேச பொருளாதாரத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில், அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் ரஷியா - உக்ரைன் போர் குறித்து ஒரு காணொளி வழியாக பேசியுள்ளார். அக்காணொளியில், "நான் அமெரிக்க அதிபராக இருந்திருந்தால் ரஷ்யாவிற்கு உக்ரைனுக்கும் இடையே இதுபோன்று ஒரு போர் ஏற்பட்டிருக்காது. நான் அதிபராக இருந்திருந்தால் ரஷ்ய அதிபர் புதின் போரை தொடங்கியிருக்க மாட்டார்" என்று கூறியுள்ளார்.

"இன்னும் லட்சக்கணக்கான ஆண்டுகள் ஆனாலும் இதுபோல போரை நடக்க விட்டிருக்கமாட்டேன். போர் சூழல் ஏற்படுவது போல் தெரிந்திருந்தால், நான் பேச்சுவார்த்தை நடத்தி 24 மணிநேரத்தில் அந்தப் போரை முடிவுக்கு கொண்டு வந்திருப்பேன்

இப்போது அமெரிக்கா டாங்கிகளைக் கொடுக்கிறது. அடுத்து என்ன அணு ஆயுதங்களை தரப்போகிறத? இந்த முட்டாள்தனமான போரை உடனடியாக முடிவுக்கு கொண்டு வர வேண்டும். ரஷ்ய அதிபர் புதின் நான் என்ன சொன்னாலும் கேட்பார். போரை நிறுத்த எனக்கு 1 நாளுக்கு மேல் ஆகாது. மூன்றாம் உலகப் போரைத் தடுக்கும் சக்தி எனக்கு மட்டும் தான் உண்டு. இந்த போரை நிறுத்தி காட்ட என்னால் மட்டுமே முடியும்" என்று தெரிவித்துள்ளார்.

Donald Trump
'அலிபாபா குகை பாஸ்வேர்டு, சிட்டிசன் தல' - தமிழ் சினிமாவின் உலக சாதனைகள்

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com