1994 ஆம் ஆண்டு மதிமுக-வில் செந்தில் பாலாஜி அரசியல் பயணத்தை தொடங்கினார். பிறகு செந்தில் பாலாஜி 1996யில் திமுகவில் இணைந்து அந்த ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு முதன்முறையாக கவுன்சிலராக தனது தீவிர அரசியல் பயணத்தை தொடங்கினார்.
பிறகு திமுகவில் ஏற்பட்ட பிரச்சனையால் 4 ஆண்டுகளுக்கு பின் 2000 ஆம் ஆண்டு திமுகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். அதிமுகவில் சேர்ந்த சிறிது நாட்களிலையே செந்தில் பாலாஜிக்கு கரூர் மாவட்ட மாணவர் அணி இணைச் செயலாளர் பொறுப்பு, கரூர் மாவட்ட மாணவர் அணிச் செயலாளர், மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலாளர், கரூர் மாவட்ட அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர் என பொறுப்புகள் அதிகரித்து தனது அரசியல் வாழ்க்கையில் முன்னேறினார்.
இதனையடுத்து 2006, 2011, 2016ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல்களில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2011-2015 வரை அதிமுக அமைச்சரவையில் போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்த செந்தில் பாலாஜி கரூர் மாவட்ட அதிமுக செயலாளர் உள்ளிட்ட பல முக்கிய கட்சிப் பொறுப்புகள் கிடைத்தது.
பணியில் இருக்கும்போது செய்த ஊழலால் 2015ஆம் ஆண்டு முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவால் அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்டார். 2017ஆம் ஆண்டு சபாநாயகரால் தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களில் இவரும் ஒருவர்.
2018ல் திமுகவில் இணைந்த செந்தில் பாலாஜி அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் வெற்றிபெற்று எம்.எல்.ஏவாக இருந்து 2021 சட்டப்பேரவை தேர்தலில் கரூர் தொகுதியில் வெற்றி பெற்று மின்சாரத் துறை அமைச்சராக பதவியேற்றார். இதனையடுத்து திமுகவில் முக்கிய நபராக மாறிய செந்தில் பாலாஜிக்கு கரூர் மாவட்ட செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது.
கடந்த 2015ல் அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது நடந்த முறைகேடுகள் தொடர்பான அமலாக்கத்துறை விசாரணையில் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார்.
இதற்கிடையில், 2018ஆம் ஆண்டு டிடிவி தினகரன் தொடங்கிய அம்மா மக்கள் முன்னேற்ற கட்சியில் சிறிது காலம் இருந்தார்.
1994 - மதிமுகவில் அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார்.
1996 - திமுகவில் இணைந்து, கரூர் மாவட்டத்தில் கவுன்சிலராக அரசியலில் பதவியேற்றார்.
2000 - அதிமுகவில் இணைந்தார்.
2011-2015 - அதிமுகவின் போக்குவரத்துதுறை அமைச்சராக இருந்தார்.
2018 - திமுகவில் இணைந்த செந்தில் பாலாஜி அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் வெற்றிபெற்று எம்.எல்.ஏவாக இருந்தார்.
2021 - 2021 முதல் மின்சாரத்துறை அமைச்சராக பதவியில் இருக்கிறார்.