மத்தியில் பாஜக அரசு பதவியேற்றதில் இருந்து 'ஒரே நாடு ஒரே தேர்தல்' என்ற கோஷத்தை முன்னெடுத்து கொண்டிருக்கிறது. அது கடந்த சில நாட்களாகவே தீவிரமடைந்திருப்பதை நம்மால் பார்க்க இயலுகிறது. இந்தியாவில் 'ஒரே நாடு ஒரே தேர்தல்' முறை தான் இனி பின்பற்றப்படும் என்று ஆளும் பாஜக அரசு சமிக்ஞையை தெரிவித்து இருக்கிறது.
எதிர்வரும் செப்டம்பர் 18 முதல் செப்டம்பர் 28 ஆம் தேதி வரை நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது. இந்த சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் ’ஒரே நாடு ஒரே தேர்தல்’ சட்ட மசோதா தாக்கல் செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
'ஒரே நாடு ஒரே தேர்தல்’ விவகாரத்தை ஆய்வு செய்வதற்காக முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் ஆய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
இந்த 'ஒரே நாடு ஒரே தேர்தல்' முறையை பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளும் குறிப்பாக தமிழ்நாட்டில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் உள்ளிட்டோரும் ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள்.
'ஒரே நாடு, ஒரே தேர்தல் முறை' அமல்படுத்தப்பட்டால் மாநிலக் கட்சிகளின் உரிமை பறிக்கப்படும் என்றும், மாநில அரசின் கொள்கைகள் மதிப்பளிக்கப்படாது என்றும், தேசிய பிரச்னைகளுக்கான முக்கியத்துவம்தான் அதிகரிக்கும், அத்தோடு மாநில அரசின் கோரிக்கைகள் கண்டுகொள்ளாமல் இருக்கவும் வாய்ப்பிருக்கிறது என காங்கிரஸ், கம்யூனிஸ்ட், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்க்கின்றன.
இந்நிலையில் இந்தியாவில் உள்ள மாநிலங்களில் எப்போது தேர்தல் நடைபெறும் என்பதை கீழே காண்போம்.
மிசோரம்:- டிசம்பர் 2023
சத்தீஸ்கர்:- ஜனவரி 2024
மத்திய பிரதேசம்:- ஜனவரி 2024
ராஜஸ்தான்:- ஜனவரி 2024
தெலுங்கானா:- ஜனவரி 2024
அருணாச்சல பிரதேசம்:- ஏப்ரல் 2024
சிக்கிம்:- ஏப்ரல் 2024
ஆந்திரா:- மே 2024
ஒடிசா:- ஜூன் 2024
ஹரியானா:- அக்டோபர் 2024
மகாராஷ்டிரா:- அக்டோபர் 2024
ஜார்கண்ட்:- டிசம்பர் 2024
புதுடெல்லி:- பிப்ரவரி 2025
பீகார்:- நவம்பர் 2024
அசாம்:- மே 2026
கேரளா:- மே 2026
தமிழ்நாடு:- மே 2026
மேற்கு வங்காளம்:- மே 2026
புதுச்சேரி:- மே 2026
கோவா:- மார்ச் 2027
மணிப்பூர்:- மார்ச் 2027
பஞ்சாப்:- மார்ச் 2027
உத்தரகாண்ட்:- மார்ச் 2027
உத்தர பிரதேசம்:- மே 2027
குஜராத்:- டிசம்பர் 2027
ஹிமாச்சலப் பிரதேசம்:- டிசம்பர் 2027
மேகாலயா:- மார்ச் 2028
நாகாலாந்து:- மார்ச் 2028
திரிபுரா:- மார்ச் 2028
கர்நாடகா:- மே 2028
- மோ.நாக அர்ஜுன்.