'Mom's little prince ராகுல் காந்தி' - அது ஒரு டவுசர் காலம் | Epi 3

'ராகுல் காந்திதான் க்ளாஸ் லீடராக வர வேண்டும்' என்று க்ளாஸில் உள்ள எல்லா பெஞ்ச் மாணவர்களும் தீர்மானம் நிறைவேற்றும் வரை காத்திருப்பார்.
ராகுல் காந்தி
ராகுல் காந்திடைம்பாஸ்

'ஐம்பதில் வளையாதது ஐந்தில் மட்டும் எப்படி வளைந்திருக்கும்?' என்ற கிரேக்க பழமொழியை மையமாக (அல்லது மய்யமாக) வைத்து, ஒவ்வொரு பிரபலங்களின் பள்ளிக் காலமும் எப்படி இருக்கும் என்று கற்பனைக்குதிரையைக் கண்டபடி தெறிக்க ஓட விடுவதுதான் 'அது ஒரு டவுசர் காலம் தொடர்.

இந்த வாரம் Mom's Little Prince ஆக மட்டுமில்லாமல், மொத்த காங்கிரஸ் கட்சியின் Little Prince-ஆக உள்ள ராகுல் காந்தியின் பள்ளிக் காலத்தைப் பார்ப்போம்.

ஹெட் மாஸ்டரின் மகன் என்பதால், அவரின் க்ளாஸ் டீச்சர் மட்டும் இன்றி, எல்லா க்ளாஸ் டீச்சர்களின் செல்லப் பிள்ளையாக இருந்திருப்பார்.

க்ளாஸ் லீட்டர் பதவியே தன்னை தேடி வந்தாலும், அதை ஏற்க மாட்டேன் என்று அடம்பிடித்திருப்பார்.

ராகுல் காந்தி
தொடர்: அது ஒரு டவுசர் காலம் - 'தாய்மையைப் போற்றும் தாடிக்காரன்' யஷ்

'ராகுல் காந்திதான் க்ளாஸ் லீடராக வர வேண்டும்' என்று க்ளாஸில் உள்ள எல்லா பெஞ்ச் மாணவர்களும் தீர்மானம் நிறைவேற்றும் வரை காத்திருப்பார்.

அதையும் மீறி வற்புறுத்தினால், 'ஸ்கூல் டாடா யாத்திரை' என்ற பெயரில் மொத்த பள்ளியையும் சுற்றக் கிளம்பியிருப்பார்.

டெல்லியில் இருக்கும்போது வெள்ளை ஜிப்பாவிலும், டெல்லி எல்லையைக் கடந்துவிட்டால், ஆஃப் ஹேண்ட் டீ-சர்ட், ஜீன்ஸுடனும் வலம் வந்திருப்பார்.

கட்டிப்பிடி வைத்தியத்தில் ஆர்வம் உள்ளவராக இருந்திருப்பார். முக்கியமாக, பேரண்ட்ஸ் டீச்சர் மீட்டிங்கிள், தனக்கு பிடிக்காத 'நரேந்திரன்' என்கிற கணக்கு வாத்தியாரையும் கட்டிப்பிடித்து 'கூல்' செய்திருப்பார்.

எக்ஸாம், ஹோம் ஒர்க், க்ளாஸ் ஒர்க் என எல்லாவற்றையும் தனது ட்விட்டர் அக்கவுண்டில் இருந்தே ட்வீட்டாக எழுதி, டீச்சரிடம் ரிவீட் வாங்கி இருப்பார்.

ராகுல் காந்தி
தொடர்: அது ஒரு டவுசர் காலம் - 'ஆட்டுக்கார அண்ணாமலை'

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com