உணவகங்களில் ஓட்டுனர்கள் - நடத்துனர்கள் சாப்பிட தனி அறை கூடாது - போக்குவரத்து கழகம்

அரசு போக்குவரத்து கழக பஸ்களில் பயணம் செய்யும் பயணிகளுக்கு உணவு பரிமாறப்படும் பொது அறையிலேயே பஸ் டிரைவர்-கண்டக்டர்களுக்கு உணவு வழங்கும் படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.
timepass
timepasstimepass

வெளியூர்களுக்கு செல்லும் அரசு போக்குவரத்து கழக பேருந்துகளின் ஓட்டுனர்கள், நடத்துனர்கள் மற்றும் பயணிகள் சாப்பிட வசதியாக, பயண வழியில் ஏதாவது ஒரு உணவகத்தில் பேருந்தை நிறுத்துவார்கள். அந்த வகையான உணவகங்களில் ஓட்டுனர்கள், நடத்துனர்கள் சாப்பிடுவதற்கு தனியாக ஒரு இடம் இருக்கும்.

அந்த இடத்தில் அவர்களுக்கு ஸ்பெஷல் சாப்பாடு கிடைக்கும். அவர்கள் சாப்பிட்டதற்கு சில உணவகங்களில் பணம் வாங்கமாட்டார்கள். ஆனால், பயணிகளுக்கு வழங்கும் உணவின் விலை சற்று அதிகமாக இருக்கும் என பல்வேறு புகார்கள் போக்குவரத்து கழகத்துக்கு சென்றது.

இதைத் தொடர்ந்து அரசு விரைவு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் அனைத்து பயண வழி உணவக உரிமையாளர்களுக்கும் உத்தரவு ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில், "அரசு போக்குவரத்து கழக பஸ்களில் பயணம் செய்யும் பயணிகளுக்கு உணவு பரிமாறப்படும் பொது அறையிலேயே பஸ் டிரைவர்-கண்டக்டர்களுக்கு உணவு வழங்கும் படி கேட்டுக்கொள்ளப்படுகிறது. டிரைவர்- கண்டக்டர்களுக்கு உணவருந்த தனி அறை ஏதும் ஒதுக்கக்கூடாது." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

timepass
மதுரை : வரிச்சியூர் செல்வத்தின் நவரசங்கள் - ஒரு சின்ன ரீவைண்ட்!

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com