jayam  Timepass
சினிமா

20 Years Of Jayam : கவிதையே தெரியுமா என் கனவு நீதானடி! - Jayam Ravi இன் 20 ஆண்டு திரை வாழ்க்கை!

இப்படி ஒரு மாப்பிள்ளை கிடைக்க மாட்டாரான்னு !! எல்லாரும் நினைக்கிற அளவுக்கு இருந்துச்சு ஜெயம் ரவியுடைய கேரக்டர் இந்த படத்துல.

ராதிகா நெடுஞ்செழியன்

ஜெயம் ரவி நடிச்ச முதல் படம் ஜெயம்... இந்தப் படத்துடைய இயக்குநர் ஜெயம் ரவியுடைய அண்ணன் மோகன் ராஜா... இந்தப் படம் வெளியாகி 20 வருஷம் ஆயிடுச்சு. இந்த 20 வருடத்தை நினைவுக்கூறும் விதமா மோகன் ராஜா அவருடைய ட்விட்டர் பக்கத்துல, "#20yearsofJayam", "#20yearsofJayamRavi", "#Jayam'' என்று போட்டு It’s 20 years of your love on Us அப்படின்னு நன்றி சொல்லி வெளியிட்டிருக்காரு!

Jayam

ரவி, 2003ல வெளியான ஜெயம் திரைப்படம் மக்கள் மத்தியில பேராதரவையும், வெற்றியும் பெற்றதனால இந்த படத்தோட பெயரை தன் பெயர்கூட

இணச்சி "ஜெயம் ரவி" அப்படின்னு அவருடைய பெயரை மாத்திக்கிட்டாரு..

அனைத்து வயது ரசிகர்களுக்கும் ஜெயம் ரவிய ரொம்பவே பிடிக்கும். இவரு படத்துக்கான கதைய தேர்ந்தெடுக்கிற விதமே தனித்துவமா இருக்கும். 20 வருஷத்துல கிட்டத்தட்ட 30க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் நடிச்சிருக்காரு.. 2024 வரைக்கும் நம்ம ஜெயம் ரவியுடைய கால்ஷீட் ரொம்பவே டைட்.. அந்த அளவுக்கு பிஸியா இருக்காரு ஜெயம் ரவி... அடுத்தடுத்து படங்கள் வெளியாகும்னு எதிர்பார்க்கப்படுது..

ஜெயம் ரவியுடைய திரைப்பட பயணத்தை பார்க்கலாம் !!  

2003ல வெளியான ஜெயம் படம் ஹிட் அடிச்சத தொடர்ந்து, 2004 ல அம்மா சென்டிமென்ட் மூவி, எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி நடிச்சு அந்த படமும் ரசிகர்கள் மத்தியில செம ஹிட் ஆச்சு.. இந்த படத்துல அம்மா சென்டிமென்ட்ட அழகா காட்டி இருப்பாங்க. பாசம், காதல்,கோபம்னு எல்லா எமோஷனும் இந்த படத்துல இருக்கும். இந்த படம் பக்கா குடும்ப படமா அமஞ்சது. இந்த படத்துக்கு அப்புறம் குடும்பங்கள் கொண்டாடுகிற ஹீரோவா ஜெயம் ரவி ஆனாரு !

2005ல ஒரு Football பிளேயரா "தாஸ்" படத்துல நடிச்சாரு. அதே வருஷம் ஸ்ரேயா கூட ஜோடி சேர்ந்து "மழை" படத்துல நடிச்சாரு. இந்தப் படங்களுடைய பாடல்கள் செம்ம ஹிட். அடுத்ததா 2006ல வெளியான "இதயத்திருடன்" படம் என்னதான் ரசிகர்கள் மத்தியில பெருசா இடம் பிடிக்கலனாலுமே, கேடிவில அடிக்கடி போடப்படுற படங்கள்ல இந்த படமும் ஒன்னு. இதுலயுமே சில பல செண்டிமென்ட் காட்சிகள் வரும். காதல விட்டுக் கொடுக்காத Rugged boyஆ ஜெயம் ரவி கலக்கியிருப்பாரு.

த்ரிஷா கூட சேர்ந்து நடிச்ச "உனக்கும் எனக்கும்" திரைப்படம் தமிழக மக்கள் மத்தியில ஜெயம் ரவிக்குனு ஒரு தனி இடத்த பிடிச்சிக்கொடுத்தது. வசதியான பையனா இருந்தாலும் காதலுக்காக விவசாயம் செய்ய தயாரா இருந்த ஜெயம் ரவிய பிரபுக்கு மட்டும் இல்லாம படத்தப் பார்த்த மக்கள் எல்லாருக்குமே பிடிச்சது.. இப்படி ஒரு மாப்பிள்ளை கிடைக்க மாட்டாரான்னு !! எல்லாரும் நினைக்கிற அளவுக்கு இருந்துச்சு ஜெயம் ரவியுடைய கேரக்டர் இந்த படத்துல..

2007ல வெளியான "தீபாவளி" படத்துல பாவனா கூட சேர்ந்து நடிச்சிருப்பாரு ஜெயம் ரவி.. One side love பண்ற சிங்கிள்ஸும், commitedஆ சுத்திட்டு இருக்க couples-ம் என்ஜாய் பண்ற மாதிரி தான் இந்த படம் அமைஞ்சிருக்கும். இந்த படத்துல வர பாடல்கள் எல்லாம் வேற லெவல் ஹிட்.

2008ல வெளியான "சந்தோஷ் சுப்ரமணியன்" திரைப்படமும் குடும்பங்கள் கொண்டாடுற படமா தான் அமஞ்சது. ஸ்ட்ரிக்டான அப்பா, அமைதியான அம்மா, கலகலப்பான குடும்பம், குழந்தைத்தனமான காதலினு படம் ரொம்ப அழகா போகும்.. இந்த படத்துல காமெடிக்கும் பஞ்சமிருக்காது.

2009ல வெளியான "பேராண்மை" மலைவாழ் மக்கள பற்றிய படம் அமஞ்சிருக்கும். 2011ல வெளியான "எங்கேயும் காதல்" படத்துல காதல்ல அவ்ளோ அழகா காட்டியிருப்பாங்க..இதுல அழகான காதல் நாயகனா ஜெயம் ரவி நடிச்சிருப்பாரு.

2014ல வெளியான "நிமிர்ந்து நில்" காமெடி ஆக்சன் கலந்து சீரியஸான ஒரு திரைப்படம்... நாட்டுல நடக்கிற தவறான விஷயங்கள எதிர்த்து கேட்கிற ஒரு டாப்பரா ஜெயம் ரவி அசத்தியிருப்பாரு..

2015ல வெளியான "ரோமியோ ஜூலியட்" திரைப்படம், பேருக்கு ஏற்ற மாதிரியே ஒரு காதல் காவியம்னு தான் சொல்லணும். எங்கேயும் காதல் திரைப்படத்துக்கு அப்புறம் ஜெயம் ரவியும் ஹன்சிகாவும் சேர்ந்து நடிச்ச திரைப்படம் தான் இந்த படம்.. இந்த படத்துல காதலுக்கும் காசுக்கும் சம்பந்தமே இல்லன்றத அழகா காட்டியிருப்பாங்க.

2003க்கு அப்புறம் 2015ல தான் மோகன் ராஜா ஜெயம் ரவிக்காக ஒரு படத்த இயக்குனாரு.. இந்த படம் பாக்ஸ் ஆபிஸ் ஹிட்.. "தனி ஒருவன்'' படத்துலதான் ஜெயம் ரவியும் நயன்தாராவும் சேர்ந்து முதல் முறையாக நடிச்சாங்க. இந்த படத்துல ஆண் அழகன் அரவிந்த்சாமி தான் வில்லன். கடமை, கண்ணியம், கட்டுப்பாடு நிறைந்த ஒரு போலீஸ் ஆபீஸரா ஜெயம் ரவி நடிச்சியிருப்பாரு.. ஆனாலும் காதலுக்கு இந்த படத்துல பஞ்சம் இல்லை..

அடுத்தடுத்து "பூலோகம்", "மிருதன்", "போகன்" மாதிரியான படங்களும் நடிச்சாரு. ஜெயம் ரவி காட்டுவாசியா நடிச்ச திரைப்படம்தான் "வனமகன்".. 2017ல வெளியான இந்த திரைப்படத்துல ஜெயம் ரவிக்கு டயலாக்கே இல்லனாலுமே அவருடைய நடிப்பு மூலமா படத்த மேலோங்கி நிறுத்தியிருப்பாரு ஜெயம் ரவி..

2018ல வெளியான "டிக் டிக் டிக்" திரைப்படம் ஒரு சயின்ஸ் ஃபிக்ஷன் திரைப்படம். இதுதான் இந்தியாவுடைய முதல் ஸ்பேஸ் திரைப்படம்... இந்த திரைப்படத்துல ஜெயம் ரவி அவருடைய மகன் கூட சேர்ந்து நடிச்சிருப்பாரு. என்னதான் அறிவியல் சார்ந்த படிமா இருந்தாலும் அப்பா மகன் பாசத்துல அசத்தியிருப்பாங்க ஜெயம் ரவி மற்றும் ஜூனியர் ஜெயம் ரவி..

2019ல இவர் நடிச்ச "கோமாளி" திரைப்படம் இவருக்கு ஒரு லீட் எடுத்து கொடுத்திச்சி... இந்த படத்திலும் காமெடி, காதல், கோபம், கலாட்டா எல்லாமே இருக்கும்.. கூடவே படத்தோட கிளைமாக்ஸ்ல மனிதநேயத்தயும் காட்டியிருப்பாங்க.

அடுத்ததா மணிரத்தினம் இயக்கத்துல வெளியான பொன்னியின் செல்வன் படத்துல நடிச்சிருப்பாரு ஜெயம் ரவி. அருள்மொழி வர்மனா பூங்குழலோட அழகிய காதலனா ஜெயம் ரவி நடிச்சியிருப்பாரு..

ஒரு பக்கம் காமெடியான திரைப்படங்கள்.. இன்னொரு பக்கம் சமூகம் சார்ந்த திரைப்படங்கள்னு கதைய தேர்ந்தெடுத்து நடிக்கிறதில்ல ஜெயம் ரவிய அடிச்சுக்கவே முடியாது.

20 வருஷ திரைப்பட வாழ்க்கையில ஹிமாலய வெற்றி அடஞ்ச நம்ம இளம் புயல் ஜெயம் ரவி இளைஞர்களுக்கு ஒரு எழுச்ச நாயகனா இருப்பாருன்றதுல எந்த ஒரு சந்தேகமும் இல்லை..