Kannur Squad timepass
சினிமா

Kannur Squad, Chaitra, The Crown, Ghost - இந்த வார தியேட்டர், OTT ரிலீஸ்கள்| What to Watch

டைம்பாஸ் அட்மின்

இந்த விடுமுறையை பொழுதுபோக்காக மாற்ற இதோ வந்துவிட்டது ஓடிடி மற்றும் திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படங்கள் மற்றும் சீரிஸ்கள்.

திரையரங்குகளில் வெளியான திரைப்படங்கள்:-

1.சைத்ரா (Chaitra)     

எம்.ஜெனித் குமார் இயக்கத்தில் யாஷிகா ஆனந்த் மற்றும் அவிதேஜ் ரெட்டி நடிப்பில் தமிழில் நவம்பர் 17 ஆம் தேதி  வெளியானது.

2. மங்களவாரம் (Mangalavaaram)     

அஜய் பூபதி இயக்கத்தில் அஜ்மல் அமீர், பாயல் ராஜ்புத் மற்றும் அஜய் கோஷ் நடிப்பில் தெலுங்கில் நவம்பர் 17 ஆம் தேதி வெளியானது.

3. சேஷம் மைக்கேல் பாத்திமா (Sesham Mikeil Fathima)     

மனு சி.குமார் இயக்கத்தில் கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் ஃபெமினா ஜார்ஜ் நடிப்பில் மலையாளத்தில் நவம்பர் 17 ஆம் தேதி வெளியானது.

4. சப்த சாகரடாச்சே எல்லோ - சைட் பி (Sapta Sagaradaache Ello - Side B)     

ஹேமந்த் எம். ராவ் இயக்கத்தில் ரக்ஷித் ஷெட்டி மற்றும் ருக்மணி வசந்த் நடிப்பில் கன்னடத்தில்  நவம்பர் 17 ஆம் தேதி வெளியானது.

5. தி ஹங்கர் கேம்ஸ்: தி பாலாட் ஆஃப் சாங்பேர்ட்ஸ் & ஸ்னேக்ஸ் (The Hunger Games: The Ballad of Songbirds & Snakes)     

பிரான்சிஸ் லாரன்ஸ் இயக்கத்தில் ரேச்சல் ஜெக்லர் மற்றும் டாம் பிளைத் நடிப்பில் ஆங்கிலத்தில் நவம்பர் 17 ஆம் தேதி வெளியானது.

6. ட்ரோல்ஸ் பேண்ட் டுகெதர் (Trolls Band Together)     

வால்டர் டோர்ன் இயக்கத்தில் அன்னா கென்ட்ரிக், கமிலா கபெல்லோ மற்றும் ஜஸ்டின் டிம்பர்லேக் குரலில் ஆங்கிலத்தில் நவம்பர் 17 ஆம் தேதி ஒரு கார்ட்டூன் படமாக வெளியானது.

இந்த வாரம் ஓடிடியில் வெளியான திரைப்படங்கள்:-

1. அபூர்வா (Apurva)     

நிகில் நாகேஷ் பட் இயக்கத்தில் தாரா சுதாரியா மற்றும் ராஜ்பால் நவுரங் யாதவ் நடிப்பில் இந்தியில் ஹாட்ஸ்டாரில் (hotstar) நவம்பர் 15 ஆம் தேதி வெளியானது. 

2. ரஸ்டின்  (Rustin)   

ஜார்ஜ் சி. வுல்ஃப் இயக்கத்தில் கோல்மன் டொமிங்கோ மற்றும் கிறிஸ் ராக் நடிப்பில் ஆங்கிலத்தில் நெட்ஃப்லிக்சில் (netflix) நவம்பர் 17 ஆம் தேதி வெளியானது. 

3. சீ யூ ஆன் வீனஸ் (See You on Venus)   

ஜோக்வின் லாமாஸ் இயக்கத்தில் வர்ஜீனியா கார்ட்னர் மற்றும் அலெக்ஸ் அயோனோ நடிப்பில் ஆங்கிலத்தில் நெட்ஃப்லிக்சில் (netflix) நவம்பர் 17 ஆம் தேதி வெளியானது. 

4. டாஷிங் த்ரூ தி ஸ்னோ (Dashing Through the Snow)   

டிம் ஸ்டோரி  இயக்கத்தில் லில் ரெல் ஹோவரி மற்றும் லுடாக்ரிஸ் நடிப்பில் ஆங்கிலத்தில் ஹாட்ஸ்டாரில் (hotstar) நவம்பர் 17 ஆம் தேதி வெளியானது. 

5. பிலீவர் 2  (Believer 2)   

ஜாங்-யோல் பேக் இயக்கத்தில் சியுங்-வோன் சா, கிம் டோங்-யங் மற்றும் ஆண்ட்ரியாஸ் ஃப்ராங்க் நடிப்பில் கொரியனில் நெட்ஃப்லிக்சில் (netflix) நவம்பர் 17 ஆம் தேதி வெளியானது. 

திரையரங்குகளில் வெளியான பின் இந்த வாரம் ஓடிடியில் வெளியான திரைப்படங்கள்:-

1. ராஜா மார்த்தாண்ட (Raja Marthanda)     

கே. ராம் நாராயண் இயக்கத்தில் சிரஞ்சீவி சர்ஜா மற்றும் தீப்தி சதி நடிப்பில் கன்னடத்தில் சன் நெக்ட்ஸ்ல் (Sun NXT) நவம்பர் 12 ஆம் தேதி வெளியானது.

2. தீப்பொறி பென்னி (Theeppori Benny)     

ராஜேஷ் மோகன், ஜோஜி தாமஸ் இயக்கத்தில் அர்ஜுன் அசோகன் மற்றும் ஃபெமினா ஜார்ஜ் நடிப்பில் மலையாளத்தில் அமேசான் பிரைமில் (Amazon prime) நவம்பர் 17 ஆம் தேதி வெளியானது.

3. கண்ணூர் ஸ்க்வாட் (Kannur Squad)     

ராபி வர்கீஸ் ராஜ் இயக்கத்தில் மம்முட்டி மற்றும் கிஷோர் குமார் நடிப்பில் மலையாளத்தில் ஹாட்ஸ்டாரில் (hotstar) நவம்பர் 17 ஆம் தேதி வெளியானது.

4. கோஸ்ட் (Ghost)   

எம்ஜி ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில் சிவ ராஜ்குமார் மற்றும் ஜெயராம் நடிப்பில் கன்னடத்தில் ஜீ5ல் (Zee5) நவம்பர் 17 ஆம் தேதி வெளியானது.

இந்த வாரம் ஓடிடியில் வெளியான சீரிஸ்கள்:-

1. தி கிரவுன் சீசன் 6: பார்ட் 1 (The Crown Season 6: P1)   

இமெல்டா ஸ்டாண்டன், ஜொனாதன் பிரைஸ், லெஸ்லி மான்வில்லே மற்றும் டொமினிக் வேஸ்ட் என பெரிய நட்சத்திரங்களின் நடிப்பில் ஆங்கிலத்தில் நெட்ஃப்லிக்சில் (Netflix) நவம்பர் 16 ஆம் தேதி வெளியானது.

2. எ மர்டர் அட் தி எண்ட் ஆஃப் தி வேர்ல்ட் (A Murder at the End of the World)     

பிரிட் மார்லிங் படைப்பில் எம்மா கொரின் மற்றும் ஹாரிஸ் டிக்கின்சன் நடிப்பில் ஆங்கிலத்தில் ஹாட்ஸ்டாரில் (hotstar) நவம்பர் 14 ஆம் தேதி வெளியானது.

3. மோனார்க்: லெகசி ஆஃப் மான்ஸ்டர்ஸ் (Monarch: Legacy of Monsters)     

கிறிஸ் பிளாக், மேட் பின்னம் படைப்பில் அண்ணா சவாய் மற்றும் கியர்சி கிளெமன்ஸ் நடிப்பில் ஆங்கிலத்தில் ஆப்பிள் டிவி பிளஸ் (Apple TV+) நவம்பர் 17 ஆம் தேதி வெளியானது.

4. தி ரயில்வே மென் (The Railway Men)   

ஷிவ் ராவைல் படைப்பில் மாதவன் மற்றும் கே கே மேனன் நடிப்பில் இந்தியில் நெட்ஃப்லிக்சில் (Netflix) நவம்பர் 18 ஆம் தேதி வெளியானது.

- மு.குபேரன்.