கொரியன் சினிமா
கொரியன் சினிமா டைம்பாஸ்
சினிமா

பெண்கள் பார்க்க வேண்டிய கொரியன் சினிமாக்கள்! - பார்ட் 2

கொட்டாச்சி

சினிமாவைப் பொறுத்தவரை ஆண்கள் வைத்ததுதான் சட்டம். அது ஹாலிவுட்டாக இருந்தாலும் சரி, கோலிவுட்டாக இருந்தாலும் சரி. பல தடைகளைத் தாண் 3diத்தான் பெண்களை முன்னிறுத்தும் சினிமாக்கள் உலகமெங்கிலும் வெளியாகின்றன.

அப்படிப் பெண்களை மையமாக வைத்து கொரிய மொழியில் வெளியாகி உலகம் முழுக்க சூப்பர் ஹிட்டடித்த படங்களின் லிஸ்ட் இது...

Han Gong-ju :

தென்கொரிய மக்க ள் மறக்க நினைக்கும் மிர்யாங் சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம்.

1 பள்ளி மாணவர்கள் சேர்ந்து ஏறக்குறைய 11 மாத காலம் உடன் படித்த ஏராளமான பள்ளி மாணவிகளைத் தொடர்ந்து பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கிய பகீர் சம்பவம்தான் அந்த மிர்யாங் பயங்கரம். அந்தப் பயங்கரத்தால் பாதிக்கப்பட்ட கோங் ஜூ அதிலிருந்து மீள வேறு ஊருக்குச் செல்கிறாள்.

அங்கும் சிக்கல்கள் சுழன்று அடிக்க, எப்படித் தப்பிக்கிறாள் என்பதுதான் கதை. ஹாலிவுட் படங்களுக்கு இணையாக இதன் வசூல் இருந்தது என ஒப்புக்கொள்கிறார்கள் விமர்சகர்கள்.

Lady Vengeance :

கொரியாவில் கொண்டாடப்படும் இயக்குநரான பார்க் சான் வூக் கின் தெறி ஹிட் படம். Sympathy for Mr. Vengeance, Oldboy ஆகிய பட வரிசையில் வெளியான மூன்றாவது பாகம்.

செய்யாத கொலைக்காக தண்டனை அனுபவித்த லீ க்யூம் ஜா என்ற பெண், உண்மையான குற்றவாளியைக் கண்டுபிடித்துப் பழிவாங்க முடிவு செய்கிறாள்.

அதன் நீட்சிதான் மிச்சக்கதை. ரிலீஸுக்கு முன்பே பல திரைப்பட விழாக்களில் விருதுகளைக் குவித்ததும். மூன்று பாகங்களில் கலெக்‌ஷனை அள்ளி அள்ளிக் கொட்டிய படம் இதுதான்.

The Handmaiden :

இந்த ஆண்டின் பிளாக்பஸ்டர் சினிமா. எரோடிக் த்ரில்லர் என்பதால் வயது வந்தவர்களுக்கு மட்டும். ‘ஃபிங்கர்ஸ்மித்’ என்ற நாவலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம். பல கோடி ரூபாய் சொத்துக்கு ஒரே வாரிசான ஹிடோகோவை ஏமாற்றித் திருமணம் செய்ய முடிவெடுக்கிறான் ஒருவன்.

அதற்காக ஒரு பணிப் பெண்ணை அவளிடம் வேலைக்கு அனுப்புகிறான். அதன் பின் நடக்கும் திடீர் சடீர் திருப்பங்கள்தான் கதை. விமர்சகர்களும் ரசிகர்களும் படத்தைக் கொண்டாடித் தள்ளினார்கள்.

Harmony :

முழுக்க முழுக்க ஸ்க்ரீனில் பெண்கள் மட்டுமே தெரியும் படம் இது. தன்னை வாட்டி வதைக்கும் கணவனைக் கொன்று விடுகிறாள் ஹொங் ஜியோங் ஹை. கர்ப்பமாய் இருக்கும் ஹொங்கை பத்தாண்டுகள் சிறையில் அடைக்கிறார்கள்.

அங்கேயே அவளுக்குக் குழந்தை பிறக்கிறது. விதிகளின்படி அது தத்துக் கொடுக்கப்படுகிறது. சிறையில் பிற கைதிகளுடன் சேர்ந்து ஓர் இசைக்குழு தொடங்க முயல்கிறாள் ஹொங்.

அதில் வென்றால் அவள் குழந்தையைப் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும். முடிவைப் படம் பார்த்துத் தெரிஞ்சுக்கோங்க மக்களே!