Raksha Bandhan Raksha Bandhan
சினிமா

Raksha Bandhan : ஒரே நாளில் ஒரே ஆசிரியருக்கு ராக்கி கட்டிய 7000 பெண்கள்!

அதிக அளவில் மாணவிகள் கலந்துக் கொண்டதால் அனைவராலும் ராக்கி கட்ட முடியவில்லை. ஒவ்வொரு பெண்ணையும் தனிப்பட்ட முறையில் சந்தித்து ராக்கி கட்டிக் கொண்டார். இந்த நிகழ்வு சுமார் இரண்டரை மணி நேரம் நீடித்தது.

டைம்பாஸ் அட்மின்

ரக்சா பந்தன் விழாவையொட்டி பாட்னாவைச் சேர்ந்த பிரபல ஆன்லைன் ஆசிரியர் கான் சர் தனது பயிற்சி மையத்தில் ரக்சா பந்தன் நிகழ்வொன்றை ஏற்பாடு செய்திருந்தார். அதில் மாணவர்கள் அவரின் மணிக்கட்டில் கிட்டத்தட்ட 7,000 ராக்கிகளைக் கட்டி உள்ளனர்.

இதில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 10,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வின் போது சுமார் 7,000 பெண்கள் அவரது மணிக்கட்டில் ராக்கி கட்டி உள்ளனர். இது போன்ற சம்பவம் இதுவரை நடந்ததில்லை என்றும் இது உலக சாதனை என்றும் அவர் கூறினார்.

இந்நிகழ்வில் அதிக அளவில் மாணவிகள் கலந்துக் கொண்டதால் அனைவராலும் ராக்கி கட்ட முடியவில்லை. கான் சார் ஒவ்வொரு பெண்ணையும் தனிப்பட்ட முறையில் சந்தித்து ராக்கி கட்டிக் கொண்டார். இந்த நிகழ்வு சுமார் இரண்டரை மணி நேரம் நீடித்தது. 

இது குறித்து கான் சர் பேசுகையில், "தனக்கு சொந்தமாக ஒரு சகோதரி கூட இல்லை. எனவே அவர் இந்த பெண்கள் அனைவரையும் தனது சகோதரிகளாக கருதிகிறேன். ஒவ்வொரு ஆண்டும் தனது மாணவர்களால் எனக்கு ராக்கி கட்டப்படுகிறது. தன்னைப் போல அதிக ராக்கிகளை உலகில் யாரும் கட்டிக்கொண்டிருக்க மாட்டார்கள்" என்று அவர் தெரிவித்தார்.

இந்த பெண்கள் வெவ்வேறு இடங்களில் இருந்து வருகிறார்கள். தங்கள் குடும்பத்தை விட்டு அவரது பயிற்சி மையத்தில் படிக்கிறார்கள். எனவே அவர்களுக்கு ஒரு குடும்பச் சூழல் ஏற்படுத்திக் கொடுப்பதற்காக நான் அனைவரது சகோதரனாக மாறினேன். எனது 'சகோதரிகள்' வெற்றி பெற உதவுவதும், கல்வி மூலம் நல்ல வேலைகளைப் பெறுவதும் எனது நோக்கம் என்று அவர் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவர்கள் கான் சார் தான் உலகின் சிறந்த ஆசிரியர், குரு, சகோதரர் எனப் பாராட்டினர். அவரை விட சிறந்த சகோதரர் யாரும் இல்லை என்று அவர்கள் சிலாகித்துக் கூறினர். சில மாணவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் கான் சாரின் கைகளில் தொடர்ந்து ராக்கிகளைக் கட்ட விருப்பம் தெரிவித்தனர்.

- சா.முஹம்மது முஸம்மில்.