ஓப்பன்ஹைமர் கிரிஸ்டோபர் நோலன்னுடைய ரசிகர்களால பெரிதும் எதிர்பார்க்கப்படுற ஒரு படமா இருக்கு. இந்த படத்தை பார்க்கிறதுக்கான சில காரணங்கள்ல தான் பாக்க போறோம்..
உலகின் முதல் அணு ஆயுதத்த தயாரிச்ச ஜே.ராபர்ட் ஓப்பன்ஹைமர் ஒரு சிறந்த இயற்பியலாளர், இவரைப் பத்திதான் இந்த படம். இரண்டாம் உலகப் போர் அப்போ அமெரிக்கால மன்ஹாட்டன் திட்டத்துக்கு தலைமை தாங்குனாரு ராபர்ட். அதுலருந்து அணுகுண்ட எப்படி உருவாக்குனாரு, டெஸ்டிங்காக உருவாக்கப்பட்ட இந்த அணுகுண்ட ஹிரோஷமா, நாகசாகில எப்படி பயன்படுத்தினாங்க, அதனால ஏற்பட்ட விளைவுகள், இந்தப் பேரழிவுக்கப்புறம் ஏற்பட்ட விஷயங்கள், விஞ்ஞான நாட்டத்தின் தார்மீக விளைவுகள் இதபத்தி தான் இந்த படம் அமஞ்சிருக்கு.
ஓப்பன்ஹைமர் திரைப்படத்துல ஹிரோஷிமா, நாகசாகில நடந்த நியூக்ளியர் குண்டு வெடிப்ப படமாக்கறதுக்கு, நிஜமாவே ஒரு குண்டுவெடிப்பு பண்ணி, அத காட்சிப்படுத்தியிருக்காரு. அந்த காட்சிக்காகவே கண்டிப்பா இந்த படத்த நாம பாக்கலாம்.
நோலன் ஓப்பன்ஹைமர்-அ வைட்-ஆங்கிள் டீப்-ஃபோகஸ் ஐமாக்ஸ் கேமராக்கள் மூலம படம்பிடிச்சிருக்காரு. அது மட்டும் இல்லாம இந்த படத்துக்கான ஃபிலிம் ஃபிரிண்ட் 11 மைல் நீளமும் 250 கிலோ கிராமுக்கு மேல எடையும் இருக்கும். "நீங்க கண்ணாடி இல்லாமலே 3D உணர்வைப் பெறுவீங்க" அப்டின்னு இந்தப் படத்த பத்தி அவரே ஒரு இன்டர்வியூல சொல்லியிருக்காரு.
இந்த திரைப்படம் முழுக்க முழுக்க பிளாக் அண்ட் ஒயிட் திரைப்படம்மா தான் உருவாக்கப்பட்டிருக்கு.
நோலன் அவர் இயக்குன மற்ற படங்கள்ல பண்ணியிருக்கிறது மாதிரியே, இந்த படத்துலயும் ரொம்பவும் குறைவான கம்ப்யூட்டர் கிராபிக்ஸ்ஸ தான் பயன்படுத்திருக்காரு. கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் குறைவா இருக்குனாலே கண்டிப்பா படம் தத்ரூபமா இருக்கும். தத்ரூபமான படங்களுக்கு ரசிகர்கள் அதிகம் தான்.
ஒரு உண்மையான சம்பவம்.. அதுவும் ஒரு சயின்டிஸ்ட் பத்தி.. கூடவே உலகத்தையே உளுக்குன ஒரு பேரழவ பத்தி.. அதுமட்டுமில்லாம உலகத்திலேயே நியூக்ளியர் பாம் உருவாக்கின மனிதரை பத்தி உருவாகி இருக்க இந்த படத்த இந்த காரணங்களுக்காகவே கண்டிப்பா பாக்கலாம்.