Jason Gillespie டைம்பாஸ்
Lifestyle

Jason Gillespie என்கிற கிண்டலானந்தா - கலாய் கிரிக்கெட்டர்|Epi 4

பட்லர் அஷ்வின் மேன்கேடிங் பிரச்சினையில், பேசாம மேன்கேடிங்ன்ற பேரை, "அதிபோதையால் நடந்த ரன்அவுட்னு மாத்திடுங்க"னு சொல்லியிருந்தாரு. பூவுக்குள் பூகம்பம்ன்ற மாதிரி கில்லிஸ்பிக்கு உள்ள ஒரு கிண்டலானந்தா.

Ayyappan

அபுதாபி டி10 லீக்ல யாரு முதல்ல ஸ்ட்ரைக் எடுக்கறதுன்னு முடிவெடுக்க ராக், பேப்பர், சிசர்ஸ நட்டநடு கிரவுண்ட்ல விளையாடுன கிறிஸ் லின் மற்றும் அலெக்ஸ் ஹேல்ஸ், சலைவா தடை பண்ணா எனக்கென்னனு, பளபளன்னு இருந்த ஜாக் லீச்சோட தலைய பந்த சைன் பண்ண யூஸ் பண்ண ரூட்னு கிரிக்கெட் களம், கடந்த வாரம் கலகலப்புக்கு பஞ்சமில்லாம இருந்துச்சு.

அப்படியொரு நையாண்டி மாயாண்டியான ஜேசன் கில்லிஸ்பியின் குறும்புத்தனங்களோட கோர்வைதான் இது.

ஃபாஸ்ட் பௌலர்களுக்கே உரித்தான அந்த சீரியஸ்னஸ் இருந்தாலும், சமயத்துல அந்த முகமூடி கழற்றப்பட்டு அவருக்குள்ள இருக்க விளையாட்டுப் பிள்ளையும் வெளிப்பட்ருக்காரு.

நியூசிலாந்துக்கு எதிரா, லாஸ்ட் விக்கெட் பார்ட்னர்ஷிப்புக்கு இவரும், மெக்ராத்தும் 114 ரன்கள் கூட்டணில சேர்த்தாங்க. அப்போ, 50 ரன்கள எட்டுனதும், பேட் மேல ஏறி குதிரைச் சவாரி பண்ணியும், ஒருசில அடிகள் அப்படியே நகர்ந்தும், பார்க்கற எல்லோரையும் சிரிக்க வச்சுட்டாரு. இன்னைக்கு வரை, பேட்ஸ்மேன் ஒருத்தரோட ரசிக்கக்கூடிய செலிபிரேஷனா இது கொண்டாடப்படுது.

2006ல சிட்டகாங்ல நடந்த பங்களாதேஷுக்கு எதிரான போட்டியில, நைட் வாட்ச்மேனா இறக்கப்பட்ட கில்லிஸ்பி, டபுள் செஞ்சுரி அடிச்சாரு. அதுக்கப்புறம், எதிர்முனைல நின்ன க்ளார்க்கிட்ட போய், "பையா, பார்த்துக்கோ, இப்படித்தான் டபுள் செஞ்சுரி அடிக்கனும், அண்ணாட்ட கத்துக்கோ"னு வடிவேலு மாடுலேஷன்ல சீரியஸா சொல்லி சிரிக்க வச்சாராம். அதுக்கப்புறம் ஒரு பேட்டில, "மார்க் வாக்கிட்ட, எப்படி இந்த பிரஸர ஹேண்டில் பண்றது, எப்படி டபுள் செஞ்சுரி அடிக்கறது?"ன்னு கேட்டேன், அப்புறமா ஞாபகம் வந்து, "ஓ சாரி! உங்களுக்கே தெரியாதுல்ல, உங்க ஹை ஸ்கோரே 153" தானேனு நக்கலடிச்சதா சொன்னாரு.

அடுத்த கொஞ்ச நாளைக்கு வேணும்னே எல்லாரையும் வெறுப்பேத்தனும்னு, "உள்ளம் கொள்ளை போகுதே"ல பிரபுதேவா, எங்க போனாலும் தலையணைய தூக்கிட்டு சுத்துவாரே அதேமாதிரி, அந்தக் குறிப்பிட்ட பேட்ட வச்சு விதவிதமா போஸ் கொடுத்து எல்லோரையும் வம்பிழுத்திருக்காரு. ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி, லபுசேன் டபுள் செஞ்சுரி அடிச்சப்போகூட, "வெல்கம் டூ டபுள் செஞ்சுரி க்ளப்"னு போட்டு, அந்த சம்பவத்த ஞாபகப்படுத்தி இருந்தாரு.

2005ல நடந்த பிசிஏ மாஸ்டர்ஸ் லெவன் வெர்ஸஸ் ஆஸ்திரேலியன்ஸ் க்ரூப் போட்டோவ இப்போ எடுத்துப் பார்த்தீங்கன்னாலும் சிரிப்பு வரும்னு மெக்ராத் ஒருதடவ சொல்லிருந்தாரு. விஷயம் என்னன்னா, தன்னோட உயரத்த வேணும்னே மெக்ராத்த விட, அபூர்வ சகோதரர்கள் அப்பு மாதிரி ரொம்ப ரொம்பக் குறைச்சுட்டு போஸ் கொடுத்து அவரையும் சிரிக்க வச்சுருப்பாரு.

மெக்ராத்தும் அவரும் இருக்கற இடமே களை கட்டுமாம், கூடவே வார்னேயும் இருந்தா சொல்லவா வேணும்? 2004 இந்தியால நடந்த டெஸ்ட் சீரிஸ்ல ஆஸ்திரேலியா லீட் எடுத்ததுக்காக, இவங்க எல்லோரும் சேர்ந்து அடிச்ச லூட்டிய இப்போ பார்த்தாலும் நம்மயும் அறியாம சிரிப்பு வந்துடும். Mood Changing Stuffனுதான் சொல்லனும்.

பார்க்க கட் அண்ட் ரைட்டான ஆசாமியா தெரிஞ்சாலும் சொல்ற விஷயத்த நாசுக்கா நக்கலோடு சொல்லுவாரு. பட்லர் அஷ்வின் மேன்கேடிங் பிரச்சினை வந்தப்போ, பேசாம மேன்கேடிங்ன்ற பேரை, "அதிபோதையால் நடந்த ரன்அவுட்னு மாத்திடுங்க"னு கிண்டலா சொல்லியிருந்தாரு.

இப்போ கோச் ஆனபிறகு, வயசும் கூடனதால, மெச்சூரிட்டி, பழைய கலகலப்ப எடுத்துட்டுப் போய்டாலும் இப்பவும் பழைய கில்லிஸ்பியோட பௌலிங்லாம் பார்க்கறப்போ இவரா அவ்வளவு கேலி பண்ணிருப்பாருனு கண்டிப்பா தோணும்.

பூவுக்குள் பூகம்பம்ன்ற மாதிரி கில்லிஸ்பிக்கு உள்ள ஒரு கிண்டலானந்தா ஒளிஞ்சிருந்திருக்காரு.....