"மாசக்கணக்கா நீடிக்குற தொடர்கள்ல, டிரெஸ்ஸிங் ரூமையே கலகலப்பா மாத்துற மார்க் உட், ரூட் மாதிரி ஆட்கள்தான் எங்களோட சூப்பர் ஹீரோஸ்"னு ஸ்டோக்ஸ் ஒருதடவ சொல்லியிருந்தாரு. இந்தியன் டீம்லயும் 60-கள்ல அப்படியொரு சூப்பர் ஹீரோ இருந்தாரு.
டைகர் பட்டோடி - நவாப் ஃபேமிலில பொறந்தவரு, 20 வயசுல ஆக்சிடெண்ட்ல ஒருகண்ல பார்வை போய்ட்டாலும் அதுக்கப்புறமும் பேட்ஸ்மேனாகவும் கேப்டனாகவும் தூள் கிளப்புனவரு. கன் ஃபீல்டர்னு அவரப்பத்தி சொல்ல எவ்ளோவோ இருந்தாலும் Prank பண்றதுலயும் ஒன்லைன் காமெடி டயலாக்களுக்கும்தான் அவர் இன்னமும் ஃபேமஸ்.
பத்திரிக்கையாளரும் தன்னோட நண்பருமான கேஎன் பிரபுவை ஏமாத்த டீம்மேட்ஸோட ரூம் போட்டு ப்ளான் பண்ணாரு பட்டோடி. ப்ளான்படி ஒருநாள் நைட் பிரபு கார்ல வர்றப்போ முழுசா வெள்ளைநிற ஆடையால தன்னை சுத்திட்டு பயப்பட வைக்குற மாஸ்க்கும் போட்டுட்டு காருக்கு முன்னாடி போய் நின்னாரு. அரண்ட பிரபு வண்டிய சுத்தி ஓட்டிட்டுப் போயிட்டாரு.
அதோட விடாம ரூமுக்கும் அதே கெட்அப்ல போய் கதவத்தட்ட திறந்த பிரபு அரண்டுபோய் திரைக்குப் பின்னாடி ஒளிஞ்சுக்கிட்டாரு. அதுக்கப்புறம் ஒளிஞ்சிருந்த மத்த நண்பர்களும் வெளியவர கலகலப்பா மாறுச்சு. இன்னுமொரு தடவ ஒரு ரப்பர் முதலை பொம்மைய வாங்கிட்டு வந்து ஒரு ரூம்மேட் பெட்ல போட்டு பெட்சீட்டால மூடிட்டு ஒளிஞ்சிருந்தது பட்டோடி அண்ட் கோ. அந்த கிரிக்கெட்டரும் படுக்கறதுக்காக பெட்சீட்ட எடுத்தவரு முதலையப் பார்த்து கத்திக் கதறிட்டாரு.
இண்டோர் மட்டுமில்ல அவுட்டோர்ல ஆள்லாம் செட் பண்ணி சமயத்துல இப்படிப் பண்ணுவாரு. ஒருதடவ தன்னோட அரண்மனைக்கு குண்டப்பா விஸ்வநாத், எரப்பள்ளி பிரசன்னா, சந்திரசேகர், விஜய் மஞ்ச்ரேக்கர் எல்லாத்தையும் கூப்பிட்ருந்தாரு. காட்டுக்குள்ள போய் சுத்திட்டு வரணும்னு எல்லாரும் ஆசைப்பட அவரும் வண்டி கொடுத்து அனுப்பினாரு. கொஞ்ச தூரம் போனதும் எல்லாருக்கும் டயர்டாக அப்படியே உட்கார்ந்துட்டாங்க. திடீர்னு குண்டு வெடிக்கற சத்தம் தூரத்துல கேட்க எல்லாரும் அரண்டுட்டாங்க.
திடீர்னு ஒரு கும்பல் அவங்கள சூழ்ந்துடுச்சு. பத்தாததுக்கு கொஞ்சம் பின்னாடி நடந்து வந்துட்ருந்த பிரசன்னாவையும் காணோம். பயந்த கிரிக்கெட்டர்கள்ல ஒருத்தர் ஓட முயற்சிக்க அந்த கேங்லீடர் அவரோட காலுக்கு ரொம்ப பக்கத்துல சுட்டாரு.
"கொஞ்ச நேரத்துக்கு முன்னாடிதான் உங்க ஆட்கள்ல ஒருத்தர சுட்டோம் உங்களையும் சுடணுமா?"னு கேட்க, பிரசன்னாவதான் கொன்னுட்டாங்கன்னு எல்லோரும் பயந்துட்டாங்க.
என்ன சொல்லியும் விடல. அழுது தவிச்சும் பயனில்ல. கொஞ்சநேரம் கழிச்சுதான் கேங்லீடர் வேஷத்துல இருந்து வெளியவந்து இந்த டிராமவ முடிச்சாரு பட்டோடி. கூடவந்ததெல்லாம் அவரோட வேலைக்காரங்கன்னும் அப்புறம்தான் தெரிஞ்சது. த்ரில்லிங் அனுபவம்னாலும் எல்லோரையும் சிரிக்க வச்சது இது.
ஒன்லைன் காமெடிக்கும் பட்டோடி பேர் போனவரு. ஒருதடவ பந்து பவுண்டரிக்குப் போக அத அவரால தடுக்க முடியல. அனிச்சையா தன்னோட தொப்பிய அதுமேல வீசிட்டாரு. அப்புறம் சிரிச்சுட்டு அவரே பவுண்டரினு சிக்னல் பண்ணாரு. பிரசன்டேஷனப்போ "என்னோட Hat trick வேலைக்காகல"னு சொல்லி எல்லோரையும் சிரிக்க வச்சுட்டாரு.
என்னதான் ராஜ குடும்பத்த சேர்ந்தவர்னாலும் அந்த வேறுபாட்டை அவரு என்னைக்குமே சகவீரர்கள்ட்ட காட்டுனதில்ல. இன்னமும் சொல்லனும்னா தங்களுக்குள்ள இருந்த இடைவெளியை நிரப்பத்தான் இந்தக் குறும்புத்தனங்கள பட்டோடி பண்ணாரு. அதுதான் இன்னமும் அவர எல்லோருக்கும் பிடிச்சவராகவும் வச்சிருக்கு.