Ronaldo
Ronaldo timepass
Lifestyle

Ronaldo : 'ஆல் ஏரியாவிலும் ஐயா கில்லிடா' - WWE இல் entry கொடுக்கும் ரொனால்டோ !

டைம்பாஸ் அட்மின்

கால்பந்து உலகின் ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோவிற்கு உலக அளவில் அவருக்கென மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. ஐந்து முறை பாலன் டி ஓர், ஐந்து முறை சாம்பியன்ஸ் லீக் கோப்பைகள், எந்த ஒரு பெரிய கோப்பைகளைப் பெறாத போர்ச்ச்சுகள் அணி அவரின் தலைமையில் இரண்டு முக்கிய கோப்பைகளை வென்று இருக்கிறது.

இப்படிப் பல சாதனைகளைச் செய்துள்ள கிறிஸ்டியானோ ரொனால்டோ நவம்பரில் சவுதியில் நடைபெறவுள்ள WWEயின் சிறப்பு நிகழ்ச்சியான கிரௌன் ஜெவெல் நிகழ்வில் பங்குகொள்வாரென எதிர்பார்க்கப் படுகிறது. அதற்கான பேச்சு வார்த்தைகள் நடைபெறுவதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. 

சவூதியில் நடைபெறவிருக்கும் கிரௌன் ஜெவெல் நிகழ்வை மல்யுத்த உலகின் இரண்டு மிகப் பெரிய தூண்களான WWE மற்றும் UFC இரு அமைப்புகளும் சேர்ந்து நடத்தவுள்ளனர். இந்த நிகழ்வதானது நேரலையில் நடைபெறும் என்று அந்த அமைப்புகள் தெரிவித்துள்ளது. உலகமெங்கும் பல ரசிகர்கள் வைத்திருக்கும் கிறிஸ்டியானோ இந்த நிகழ்ச்சியில் பங்குபெறுவதன் மூலம் பல லட்ச மக்களின் கவனத்தை இது ஈர்க்கும் என்று அந்த அமைப்புகள் தெரிவித்துள்ளது.

கால்பந்து வீரர்கள் WWEயில் கலந்துகொள்வது இது ஒன்றும் முதல்முறை அல்ல. கிராண்ட் ஹால்ட், டிம் வியெஸ், அடிபயோ அக்கினிபின்வா மற்றும் ரூனி போன்றோர்கள் பங்குபெற்றிருக்கின்றனர். ரூனி பங்குபெற்ற போது பார்வையாளர்கள் இருக்கையில் முதலிடத்தில் அமர்ந்திருந்த ரூனிக்கும் வெய்ட் பிறீட்க்கும் வாக்குவாதம் முற்றிப்போய் அவரை கன்னத்தில் அறைந்த காட்சி அன்றளவில் அதிகம் பார்வைலர்களின் கவனத்தை ஈர்த்தது. 

ரொனால்டோ வருகை உறுதி ஆவதற்கு முன்பே அவரின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் தங்களுடைய மகிழ்ச்சியைத் தெரிவித்து வருகின்றனர். மேலும், அந்த நிகழ்ச்சியில் ரொனால்டோ வருவதற்குச் சம்மதித்தால் மல்யுத்த வீரரான நடிகர் ஜான் சீனாவுடன் என்ட்ரி கொடுப்பார் என்று தகவல்கள் கசிந்துள்ளது. இரண்டு ஜாம்பவான்களை ஒரே மேடையில் காண ரசிகர்கள் ஆர்வத்துடன் இருக்கின்றனர்.

- பா.முஹம்மது முஃபீத்.