Gavaskar
Gavaskar timepass
Lifestyle

'Gavaskar-ம் Friends சீரியஸும்' - கலாய் கிரிக்கெட்டர்கள் | Epi 1

Ayyappan

கிரிக்கெட் உலகம் - நவரசத்தையும் சாறு பிழிஞ்சு தர்ற உணர்வுகளோட சுரங்கம்.

மத்த உணர்ச்சிகள் வேகமா வெளிப்படற அளவு நகைச்சுவையுணர்வு பெருசா வெளிப்படுத்தப்படறதில்ல. அதை மாத்த, கருப்பு - வெள்ளை கிளாசிக்கல் கிரிக்கெட் காலத்தையே கலராக்குன, `Funny Side Of Cricketers'-ஐ வெளிக்கொண்டு வர்றதுதான் இந்த சீரிஸோட நோக்கம். அடுத்த சில வாரங்கள், தெரிஞ்ச கிரிக்கெட்டர்களோட தெரியாத நகைச்சுவை பக்கங்கள பார்த்து ரசிப்போம்.

Funny சைடை Sunny பாயோட ஆரம்பிக்கலாங்களா???

சுனில் கவாஸ்கர் - 'லிட்டில் மாஸ்டர்'. கிரிக்கெட்டரா, கமெண்டேட்டரா, அனாலிஸ்டா ஆல்டைம் கிரேட். பொறந்தப்பவே குழந்தை மாறிப் போய், இவரு ஒரு மீனவக் குடும்பத்துல சேர்ந்து அப்புறம் காதுக்கு பக்கத்துல இருந்த மச்சத்தால மீட்கப்பட்டது எல்லோருக்கும் தெரிஞ்ச கதைதான்.

1978-ல கவாஸ்கர் கேப்டனாகியிருந்த சமயம். வீரர்களுக்குள்ள நெருக்கம் வரனும்னு சண்டே கிளப்னு ஒண்ணை ஏற்பாடு பண்ணாங்க. Chrisma Friend மாதிரி இங்க வாரத்துக்கு ஒரு டாஸ்க் உண்டு. செய்ய முடியாட்டி, ஃபைன் கட்டனும். அந்தப் பணம் அடுத்தவார சண்டே கிளப்போட ஸ்நாக்ஸ் செலவுக்காகும். சந்தீப் பாட்டில்தான் அதோட சேர்மேன். அவரு ஒருதடவ தந்தது ஃப்ரெண்ட்ஸ் சீரிஸ்ல சாண்ட்லரோட எல்லா டிரஸ்ஸயும் போட்டு ஜோயி வந்து நிக்கற மாதிரி ஃபன் டாஸ்க்.

நடுவகுடு எடுக்கனும், லிப்ஸ்டிக் போடனும், இடதுகைல வெள்ளை சாக்ஸ் வலதுகைல கருப்பு சாக்ஸ், மேல்சட்டை போடாம டை மட்டும் கட்டிட்டு வரணும்ன்றது டாஸ்க். எல்லோருமே செஞ்சாங்க. கவாஸ்கரும் செஞ்சாரு. ஆனா டை மட்டும் கட்டல.

இதான் சாக்குடானு இன்ஜினியரிங் காலேஜஸ்ல ஐடி கார்டு போடாததுக்கு ஃபைன் கட்டச் சொல்ற மாதிரி கட்டச் சொல்ல, கவாஸ்கர் தன்னோட கால்கள காட்டுனாரு. அதுல ஒரு கால்ல டை கட்டப்பட்ருந்துச்சு. '"கட்டத்தான சொன்ன எங்கன்னு சொல்லலீயே"னு சந்தீப்ப மடக்கிட்டாரு. லிட்டில் மாஸ்டரோட சென்ஸ் ஆஃப் ஹியூமர்ல சண்டே கிளப்ல ஃபன்டே கிளப்பாச்சு.

அம்பயர முடிவெட்டிவிட வச்ச முதலும் கடைசியுமான கிரிக்கெட்டர் அவருதான். 1974-ல ஓல்ட் டிரஃபோர்டல ஆடிட்டிருந்தப்போ, முடி முன்னாடி விழுந்துட்டே இருக்குன்னு அம்பயர்ட்ட சொல்லி பிட்ச்லயே முடிய வெட்டிவிட சொன்னாரு. அந்தப்போட்டியில அவரு அடிச்ச 101-ஐ கூட மறந்துட்டாங்க, இதுதான் பலநாள் பேச்சா ஓடுச்சு.

பிட்ச்ல பொதுவா கவாஸ்கர் பேசமாட்டாரு. முகத்துல உணர்ச்சியே காட்டாம கடந்துடுவாறு. அதுக்கெல்லாம் சேர்த்து வச்சு இப்போ பேசிட்டிருக்காரு. ரீசண்டா ஒரு இங்கிலாந்து கமெண்டேட்டர "எங்க கோகினூர் வைரம் எங்கப்பா?"னு கலாய்ச்ச வீடியோ வைரலாச்சு.

இவரு பண்ண காமெடிகள் ஒருபக்கம்னா இவரவச்சு நடந்த காமெடி மறுபக்கம். மேற்கிந்தியத் தீவுகள்னாலே சொல்லி அடிக்கறது கவாஸ்கரோட பழக்கம். 21 வயசுல அறிமுகத் தொடர்லயே, 774 ரன்கள விளாசுனாரு, இவர அவுட் பண்ணவே அவங்களால முடியல. Gavaskar Calypsoனு இவரப்பத்தி வெஸ்ட் இண்டீஸ் பாடகரே பாட்டெழுதுனாரு.

இவரப் பார்க்கனும்னு ஆசைப்பட்டு Gary Sobers ரூமுக்கு வந்திருந்தாரு. அந்தத்தொடர் முழுசா அவரு சரியா ஆடல. இதனால சமீபத்துல கோலிக்கு கை கொடுத்தப்போ கோலியோட பேட் லக் பாபருக்கு டிரான்ஸ்ஃபர் ஆச்சுன்னு காமெடி பண்ணோமே, அதேமாதிரி அஜித் வட்டேகர் கவாஸ்கரோட குட்லக் கேரிக்கு Carry over ஆகிடும்னு பயந்துட்டாரு.

கவாஸ்கர பாத்ரூம்ல போட்டு பூட்டிட்டு அவரு குளிக்கறாருனு சொல்லி கேரிய திரும்பி அனுப்ப ப்ளான் பண்ணாரு. ஆனா அவரு வெய்ட் பண்ணி பார்க்கறேன்னு சொல்ல, கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் கவாஸ்கர் குளிச்சுட்டே இருந்தாரு.

சீரியஸ் கேரக்டர்களா நாம நினைக்கறவங்களுக்கு இப்படியொரு முகமும் இருக்கு. இந்த Funnyயான சம்பவங்கள் பெருசா வெளிய வராட்டியும், அவங்களோட டிரெஸ்ஸிங் ரூம்கள்ல அழுத்தம் படியாம இருக்க இவைதான் உதவுது.