Rose Day
Rose Day timepass
Lifestyle

Happy Rose Day 2023 : உங்கள் காதலிக்கு என்ன கலர் ரோஜா கொடுக்கலாம்!

சு.கலையரசி

மாதமோ பிப்ரவரி: தொடங்கியதே காதலர் வாரம்

காதலர் வாரம் 2023 : காதலர் வாரத்தின் தொடக்க நாளாக அமைவது தான் இந்த பிப்ரவரி 7 ரோஸ் டே.

காதலர் வாரத்தின் முதல் நாளே அழகான ரோஜாக்களுடன் தான் தொடங்குகிறது. ரோஜாக்களுடன் தொடங்குவதனாலேயே பிப்ரவரி முதல் வாரத்திலிருந்தே ரோஜா பூக்களுக்கும் பூக்களின் விலைக்கும் தனி மவுசு இருக்கிறது. 

நாம் நேசிப்பது யாராக இருந்தாலும் ரோஜா தினத்தன்று அவர்களுக்கு ஒரு ரோஜா பூவைக் கொடுத்து நம் நேசிப்பை வெளிப்படுத்தலாம்.

ரோஜா பூக்கள் ரோமானிய புராணங்களில் மர்மம் மற்றும் ஆர்வத்தின் அடையாளமாகவும், அழகு மற்றும் அன்புடன் தொடர்புடைய ரோமானிய தெய்வமான வீனஸ் தொடர்புப்படுத்தப்படுகிறது.

ஆசிய மற்றும் அரேபிய கலாச்சாரங்கள் போன்ற கிழக்கு நாகரிகங்களில் ரோஜாக்கள் காதலுடன் தொடர்புடையதாக உள்ளது. விக்டோரியர்கள் தங்கள் அன்பின் அடையாளமாக ரோஜாக்களை வழங்குவதன் மூலமாக தங்கள் அன்பை வெளிப்படுத்தியதாக கூறப்படுகிறது. 

அன்றிலிருந்து ஆண்டுதோறும் பிப்ரவரி 7-ம் தேதி ரோஜாக்கள் அன்பிற்காகவும் காதலுக்காகவும் கொடுக்கப்படுகிறது. காதலுக்காக சிவப்பு ரோஜாக்கள் இருந்தாலும், நாம் விரும்பும் நபர்களுக்கு வெவ்வேறு நிற ரோஜா பூக்களை கொடுக்கலாம்.

வெள்ளை ரோஜா அப்பாவித்தனத்தையும், மஞ்சள் ரோஜா நட்பு மற்றும் புதிய தொடக்கங்களின் சிலிர்ப்பையும், ஆரஞ்சு ரோஜாக்கள் ஏக்கத்தையும், இளஞ்சிவப்பு ரோஜாக்கள் பாராட்டு மற்றும் நன்றியையும், நீல ரோஜா மர்மம் அல்லது சாத்தியமற்றதையும் குறிக்கிறது.

ரோஜா தினம் எப்படி தொடங்கியது என்ற சரியான தகவல் கிடைக்காவிட்டாலும், வருடா வருடம் பிப்ரவரி 7ஆம் தேதி தனக்கு பிடித்தவர்களுக்கு ரோஜா கொடுப்பதும், இதனால் ரோஜாவின் விலைக்கு மவுசு கூடுவதும் மாறவில்லை.