E-Cigarette E-Cigarette
Lifestyle

E-Cigarette க்கு அடிமையாகும் இந்திய இளைஞர்கள் - அதிர்ச்சி ரிப்போர்ட் !

மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் உள்ள புகையிலை சந்தை மிகப்பெரிய சந்தையாகும். இந்திய மக்கள் தொகையில் சுமார் 27 சதவீதம் பேர் புகையிலையை ஏதோ ஒரு வகையில் பயன்படுத்துகின்றனர்.

சு.கலையரசி

இ- சிகரெட்டை பயன்படுத்துபவர்களில் 61 சதவீதம் பேர் 15-30 வயதுள்ளவர்கள். இ-சிகரெட் என்பது Electronic Nicotine delivery Systems (ENDS) என்பதாகும். இதில் சிகரெட் புகையிலைக்கு மாறாக ஒரு ஆவியாகும் தன்மை கொண்ட கரைசல் வேதிப் பொருள்கள் மற்றும் நிக்கோடின், புரோப்லீன் கிளைகால் உள்ளிட்ட மூலப்பொருட்களும்  இருக்கும். இந்த இ-சிகரெட் பேனா போன்ற பல வடிவங்களில் சந்தைகளில் கிடைக்கின்றன.

இந்தியா முழுவதிலும் 456 பேர் உட்பட சர்வதேச அளவில் 4,007 பேரை கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில், புகையிலை பயன்பாட்டிற்குப் பிறகு, இந்த இ-சிகரெட் இரண்டாவது பெரிய பாதிப்பை கொண்டிருப்பதாக தெரிய வந்துள்ளது. உலக சுகாதார அமைப்பு (WHO) கூறியப்படி, இளைஞர்கள் பயன்படுத்தும் இந்த இ-சிகரெட்டால் எளிதில் பாதிக்கப்படுவது அதிக அளவிலான பொது மக்களே. நிக்கோடின் வளரும் மூளையையும் வெகுவாக பாதிக்கின்றது.

இந்தியாவில் இ-சிகரெட்டைப் பயன்படுத்தாத 51 சதவீதம் பேர் இதை பயன்படுத்த ஆர்வமாக இருப்பதாகவும், 49 சதவீதம் பேர் நண்பர் வழங்கினால் பயன்படுத்துவதாகவும் கணக்கெடுப்பின் மூலம் தெரியவந்துள்ளது. இந்தியாவில் 100 மில்லியன் புகைபிடிப்போர் உள்ளதால், இ-சிகரெட் நிறுவனங்களுக்கு பெரிய சந்தை உருவாகும் வாய்ப்பு நிலவுகிறது.

இந்தியாவில் பதிலளித்தவர்களில் கிட்டத்தட்ட பாதி பேர் (47 சதவீதம்) இ-சிகரெட் விளம்பரத்தைப் பார்த்ததாக கூறியுள்ளனர்.  மேலும் இங்கிலாந்து (63 சதவீதம்), சீனா (51 சதவீதம்) மற்றும் ஆஸ்திரேலியா (30 சதவீதம்) ஆகிய நாடுகளில் இ-சிகரெட் பயன்பாடு கண்டுபிடிப்புகள் குறித்து மருந்து மற்றும் மது சார்பு இதழில் வெளியிடப்பட்டுள்ளன .

இந்தியாவில் உள்ள புகையிலை சந்தை உலகின் மிகப்பெரிய சந்தைகளில் ஒன்றாகும். உலக சுகாதார அமைப்பின் (WHO) கருத்துப்படி, இந்திய மக்கள் தொகையில் சுமார் 27 சதவீதம் பேர் புகையிலையை ஏதோ ஒரு வகையில் பயன்படுத்துகின்றனர்.

இ-சிகரெட்டை ஏற்கெனவே அமெரிக்காவின் மிசிகன் மற்றும் நியூயார்க் நகரங்கள் தடை செய்துள்ளன. 2019 ஆம் ஆண்டில், இந்தியாவில் இ- சிகரெட் பயன்படுத்துபவர்களை இதன் தீங்குகளில் இருந்து பாதுகாக்க இ- சிகரெட் (உற்பத்தி, இறக்குமதி, ஏற்றுமதி, போக்குவரத்து, விற்பனை, விநியோகம், சேமிப்பு மற்றும் விளம்பரம்) தடைச் சட்டத்தை அறிமுகப்படுத்தி பெரும் அபராதங்களை விதித்தது.

இருப்பினும் இந்தியாவில் இதன் பயன்பாடு அதிகரித்து வருகிறது என்பதால் இதனை தடை செய்ய உள்ளதாக மத்திய அரசு தெரிவித்து பல முயற்சிகளை செய்து வந்தாலும் இந்த இ-சிகரெட்டுகளை சில்லறை விற்பனையாளர்களிடமிருந்து அதிக விலைக்கு வாங்கி பயன்படுத்துகின்றனர்.