lovers day timepass
Lifestyle

Lovers day : காதலால் இணைந்த தமிழ் சினிமா நட்சத்திரங்கள் !

கவிஞர் சினேகன் மற்றும் நடிகை கன்னிகா ரவியும் பல வருடங்களாக காதலித்து வந்த நிலையில் 29 ஜூலை 2021 அன்று கமல்ஹாசன் முன்னிலையில் திருமணம் செய்துக் கொண்டனர்.

சு.கலையரசி

நம்ம தமிழ் சினிமாவில் மறக்கமுடியாத பல காதல் ஜோடிகளையும் காதல் காட்சிகளையும்  பார்த்திருப்போம். காதல் என்றாலே சூர்யா- ஜோதிகா, அஜீத்- ஷாலினி என்று தான் பேசுவோம். அப்படி இவர்களின் காதல் ஜோடி வரிசையில் நீண்ட நாள் காதலுக்கு பிறகு  சமீபத்தில் காதல் தம்பதிகளானவர்களை பார்ப்போம்.

1. நயன்தாரா - விக்னேஷ் சிவன்.

7 வருட காதலுக்கு பிறகு தென்னிந்திய நடிகையான நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் ஜூன் 9, 2022 அன்று நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் முன்னிலையில் சென்னை மகாபலிபுரத்தில் திருமணம் செய்து கொண்டனர்.

2. ஆதி - நிக்கி கல்ராணி.

சில வருடங்களாக காதலித்து வந்த தென்னிந்திய நடிகரான ஆதி பினிசெட்டியும், நிக்கி கல்ராணியும் 2022 மே 18 அன்று,  பாரம்பரிய முறைப்படி  திருமணம் செய்து கொண்டனர்.

3. கௌதம் கார்த்திக் - மஞ்சிமா மோகன்.

தேவராட்டம் திரைப்படத்தில் ஒன்றாக நடித்து பிறகு காதல் ஜோடியாக மாறிய கௌதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகன் நவம்பர் 28, 2022 அன்று சென்னையில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர்.

4. ரெபா மோனிகா ஜான் - ஜோமன் ஜோசப்.

பிகில் படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடித்திருந்த ரெபா மோனிகா ஜான் தனது காதலர் ஜோமன் ஜோசப் என்பவரை 2022 ஜனவரி 9ம் தேதி திருமணம் செய்துகொண்டார்.

5. சினேகன் - கன்னிகா ரவி.

கவிஞர் சினேகன் மற்றும் நடிகை கன்னிகா ரவியும் பல வருடங்களாக காதலித்து வந்த நிலையில் 29 ஜூலை 2021 அன்று கமல்ஹாசன் முன்னிலையில் திருமணம் செய்துக் கொண்டனர்.

6. நக்ஷத்திரா நாகேஷ் - ராகவ்.

சின்னத்திரை தொகுப்பாளராக இருந்து நடிகையான நக்ஷத்திரா அவரது காதலர் ராகவ் என்பவரை பெற்றோர் ஒப்புதலுடன் 2021 டிசம்பர் 9ம் தேதி திருமணம் செய்துகொண்டார்.