Chennai டைம்பாஸ்
Lifestyle

Chennai: சொந்த ஊர் vs சென்னை பரிதாபங்கள்

சொந்த ஊர்ல குண்டடி பட்டாலும் சுகமே வெளியூர்ல கல்லடி பட்டாலும் கஷ்டமே அப்படின்ற பழமொழி இங்க நிறைய பேருக்கு பொருந்தும்.

சு.கலையரசி

சொந்த ஊர்ல குண்டடி பட்டாலும் சுகமே வெளியூர்ல கல்லடி பட்டாலும் கஷ்டமே அப்படின்ற பழமொழி இங்க நிறைய பேருக்கு பொருந்தும்.

"சொர்க்கமே என்றாலும் அது நம்மூற போல வருமா?" என்ற இளையராஜா பாட்டைக் கேட்டதுமே நம்ம எல்லாருக்கும் சொந்த ஊர் நியாபகம் வந்திருக்கும். என்னதான் டெவலப்டு சிட்டி , வேலை, ஹைஃபை வாழ்க்கை அப்படினு சொந்த ஊர விட்டுட்டு நகரத்துக்கு ஓகோனு ஆரவாரத்தோட கிளம்பி வந்தாலும், இங்க நமக்கு புஸ்ஸுனு ஒரு வரவேற்பு காத்திருக்கும்.

சொந்த ஊர் அப்படின்னாலே, 'நம்ம ஊர்ல நாமதான் ராஜா' அப்படின்ற நினைப்புல சீமான் அண்ணா சொன்ன மாதிரி ரெண்டு ரெக்கைய விரிச்சிட்டு நடப்போம். ஆனா, வெளியூர்ல இந்த நடையெல்லாம் செல்லாது ராஜா அப்படின்னு தட்டி உட்கார வெச்சிடுவாங்க.

ஏன்னா, நாம செய்யுற வேலை அப்படி இருக்கும். எல்லாமே புதுசு எது பண்ணாலும் யாரோ நம்மல குறுகுறுன்னு பார்ப்பது போல இருக்கும்.

புது ஊரு புது ஆஃபீஸ் அப்படினு பெரிய எதிர்பார்ப்புடன் வருபவர்களுக்கு காத்துக்கிட்டுருக்க ஒரே அதிர்ச்சி சோறுதான். ஊர்ல விதவிதமா இல்லாட்டியும் அம்மா வெச்ச வெறும் பருப்பு குழம்பையும் ருசிச்சி சாப்பிடுவோம். ஆனால், வெளியூர்ல என்னதா விதவிதமான உணவு இருந்தாலும் எல்லாம் இரண்டு நாள்தான் அதுக்கப்புறம் " பிசி சிட்டி வித் பசி சிட்டிசன்" கதை தான்.

சரி, ஆபிஸ் கேன்டீன் சாப்பாடாவது நல்லா இருக்குமானு சாப்டா, பேக்ரவுண்ட்ல நம்ம தளபதி சொன்னாரே "கேன்டீன் வடையிலே நூலைக் கண்டால் ஆல் ஸ் வெல்" அந்த பாட்டு தான் நியாபகம் வரும்.

இதெல்லாத்தையும் விட மிகப்பெரிய சோதனையே சம்பள நாள்தான். மாசம் தொடங்குனதும் சம்பளத்தையும் கொடுத்து வேலையையும் வாங்கி கொடுத்து, அந்த சம்பளத்தை ட்ரீட்ன்ற பேர்ல திருப்பி வாங்கிட்டு போயிடுவாங்க. இதையும் தாண்டி அஞ்சு பத்துன்னு மிச்சம் புடிச்சி சேத்து வச்சா, நம்ம கூடவே இருக்க கமிட்டட் ப்ரெண்டு காதலிக்கு செலவு பண்ண புடுங்கிட்டுப் போயிடுவான்.

இப்படி ஊரு விட்டு இன்னொரு ஊருக்கு வந்து சாப்பாட்டுக்கு கஷ்டப்பட்டு சம்பாதிச்சு வைக்கிற காசு எல்லாத்தையும் வரவன் போறவன் எல்லாம் செலவு பண்ணிட்டு போயிடுவான். இது தெரியாம நம்ம வீட்ல இருக்கவங்க பையன் வெளியூர்ல போய் கை நிறைய சம்பாதிக்கிறானு நெனச்சு ஊர்ல அக்கம் பக்கத்துல இருக்குறவங்க வீட்டுலலாம் என் பையன் அப்படி இப்படின்னு பெருமை பேசிட்டு இருப்பாங்க.

இது எதுவுமே தெரியாம வெளியூர்ல வேலை பார்த்துட்டு சொந்த ஊருக்கு திரும்பி போறப்ப, அடடடடா மனசுக்குள்ள ஓடும் ஒரு சந்தோச ரயிலு அப்டியே "ராஜாவுக்கு ராஜா நாந்தான்" அப்படின்ற பாட்டு பாடிக்கிட்டே வீட்டுக்கு போய் அம்மா சமைச்ச சாப்பாட மூக்கு பிடிக்க சாப்பிட்டு என்னடா மகனே சம்பாதிச்சன்னு அப்பா கேட்குற்ற கேள்வியையும் திட்டையும் சேர்த்து சாப்பிட்டுட்டு ரெண்டு மூணு நாள் சேர்ந்தாப்படி வீட்ல தங்கி நல்லா சாப்பிட்டு, தூங்கி உடம்ப தேத்திட்டு, சேமிப்பு பத்தின அப்பாவோட அட்வைஸ கேட்டும் திரும்ப ஊருக்கு போறதுக்கு அப்பாகிட்டையே காச வாங்கிட்டு மினி பஸ் ஏற்றப்போ "போகாதே போகாதே" அப்படின்னு யுவன் பாட்டு கேட்டுக்குட்டே வெளியூர் வந்து இறங்குன்னா " வா மகனே வா" என்னையா ஏளனமா பாத்து சிரிச்ச, இனி நீ இங்க தாண்டி அப்படின்னு இதுக்கு முன்னாடி நடந்ததே இப்ப வெர்ஷன் 2.0 இன்னும் அதிகமா நடக்கும்.

இது எல்லாத்தையும் சகிச்சுக்கிட்டு சொந்த ஊர்ல இருந்து வெளியூர் வந்து வேலை பார்த்தாலும் அந்த மாஸ் குறையாம இருக்கனுன்னு ஹேப்பி டே வித் பிசி சிட்டி, அவுட்டிங், டேட்டிங், அட் தியேட்டர், மால் அப்படின்னு சொந்த ஊர்ல இருக்குறவன வெறுப்பேத்தவும் பில்டப்புக்காக மட்டுமே க்ரின்ஜா ஸ்டேட்டஸ் போடுறது ஒரு வித சுகமா தா இருக்கு. என்ன பண்றது ஊரையும் உலகத்தையும் நம்ப வைக்கிறதுக்கு இந்த மாதிரி ஏதாவது ஒரு சில விஷயங்கள் பண்ணாதான இங்க இருக்கவங்களா நம்மளை ஏத்துக்குவாங்க. "போனால் போகட்டும் போடான்னு" எல்லாத்தையும் ஏத்துக்கிட்டு போயிட்டே இருக்க வேண்டியதுதான்.