New Year
New Year டைம்பாஸ்
Lifestyle

New Year 2023: சுடுகாட்டில் கேக் வெட்டி கொண்டாட்டம்

சு.கலையரசி

ஒவ்வொரு வருடம் முடிந்து புதுவருடம் தொடங்கும் போது நாம் எல்லாருமே ஒரு புது வருட வாக்குறுதி எடுப்போம். ஆனால் அவற்றை எல்லாமே நாம் கடைபிடிப்போமா என தெரியாது. அதே மாதிரிதான் சமூகத்துலையும் நிறைய மாற்றங்கள் தேவைன்னு எதிர்பார்ப்போம்.

ஆனால், உண்மையிலேயே அந்த மாற்றத்தை விரும்பிய 'முட்டாள் கிளப்' அமைப்பு புதுவிதமா இருக்கணும்னு தகன மேடையில் கேக் வெட்டி புது வருடத்தை வரவேற்றிருக்கிறார்கள்.

இந்த 'முட்டாள் கிளப்' அமைப்பு சமூகத்தில் காணப்படுகிற, போதை பொருள், பயங்கரவாதம், மூட நம்பிக்கை மற்றும் பிற தீங்கு விளைவிக்கும் விசயங்களுக்கு எதிராக போராடி வருகிறது. சமூகம்னாலே ஊழல், பயங்கரவாதம் எல்லாம் நிறைந்ததுதான் இதை எல்லாம் இந்த புது வருட பிறப்பிலாவது ஒழிக்கணும்னு நினைச்சு இந்த மாதிரி புதுவிதமா தகன மேடையில் கேக் வெட்டி கொண்டாடி இருக்காங்க.

பஞ்சாப்பின் அமிர்தசரஸில் உள்ள இந்த 'முட்டாள் கிளப்' அமைப்பை சேர்ந்தவர்கள் பேய் முகமூடி அணிந்தும், கருப்பு உடை அணிந்தும், தகன மேடையில் கேக் வெட்டி 2022ஆம் ஆண்டையும் தகனம் செய்து விட்டார்கள். இந்த 2022-ல் தகன நிகழ்ச்சியில் இந்தி பாடல்களுக்கு நடனம் ஆடியும், சமூக நலன்களுக்கு எதிரான விசயங்களுக்கு எதிராக போராடும் நோக்கில் இந்த புது வருட வரவேற்பு கொண்டாட்டம் நடத்தப்பட்டது.

"ராயியா கிராமத்தில் 25 ஆண்டுகளுக்கு முன்பு, ராஜீந்தர் ரிக்கி என்பவர் இந்த 'முட்டாள் கிளப்பை' உருவாக்கினார். அமைப்பு உருவாகிய வருடத்தில் அமைப்பின் கொள்கைகளை மக்களுக்கு எடுத்துக் கூறும் வகையில் அப்போது வந்த புது வருடத்தையும் இதே போல் தகன மேடையில் வரவேற்றோம் அதனை நினைவுகூரும் வகையில் இந்த வருடமும் தகன மேடையில் புது வருட பிறப்பை கொண்டாடினோம்" என்று அவர்கள் கூறினார்கள்.