china timepassonline
Lifestyle

China : உணவக மேஜையின் QR Code-ஐ Instagram இல் பகிர்ந்த பெண் - பின்னர் காத்திருந்த அதிர்ச்சி!

டைம்பாஸ் அட்மின்

சீனாவை சேர்ந்த ஒரு பெண், தனது நண்பர்களுடன் உணவகத்திற்கு சென்றபோது நடந்த கவனக்குறைவால் ஆர்டர் செய்யாத உணவிற்கும் சேர்ந்து சுமார் $60,000 டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் ₹50 லட்சம்) பில் பெற்ற சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.   

வாங் என்ற பெண், கடந்த மாதம் தனது நண்பருடன் சீனாவில் உள்ள ஹாட்பாட் உணவகத்திற்குச் சென்றிருந்திருக்கிறார். வாங் சமூக ஊடகங்களில் வழக்கமாக புகைப்படங்களை பதிவிடும் நபர் என்பதால் வழக்கம் போல், தனது சமூக ஊடகங்களில் தாங்கள் ஆர்டர் செய்த உணவுகளின் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். அப்போது தற்செயலாக  ஒரு புகைப்படத்தில், அவரும் அவளுடைய நண்பரும் உணவருந்திய மேஜையின் QR குறியீடும் பதிவாகியுள்ளது.   

இந்த நிலையில், சீனாவை பொருத்தவரை கோவிட்-19 முதல், பல உணவகங்கள் டேபிள்களில் QR குறியீடுகள் முறையை பயன்படுத்தி வருகிறது. இது வாடிக்கையாளர்கள் தங்கள் ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்தி உணவை ஆர்டர் செய்யும் முறையாகும்.

அதாவது, அந்த QR கோடை பயன்படுத்தி அதில் ஆர்டர் செய்தால், அந்த டேபிளில் உள்ள நபரின் பெயரில் ஆர்டர்கள் வரும். அதற்கான பில்லும் வரும். வாங் சென்ற உணவகத்திலும் இந்த தொழில்நுட்பம் இருந்ததால், வாங் வெளியிட்ட ​​QR குறியீட்டைப் பார்த்த பல நெட்டிசன்கள் ஆன்லைன் மூலம் உணவை ஆர்டர் செய்ய தொடங்கினர்.

இதை கண்டு அதிர்ச்சியடைந்த வாங் நிலைமையை சரிசெய்ய முயற்சித்த போதிலும், உணவகத்தால் ஆர்டர்களை ரத்து செய்ய முடியவில்லை. எனவே வாங் தனது பதிவை உடனடியாக நீக்கிவிட்டார். இருப்பினும் மக்கள் மேஜையில் QR குறியீட்டைப் பயன்படுத்தி புதிய ஆர்டர்களை செய்து கொண்டே இருந்தார்கள். இதனால் யாரோ ஒருவர் தனது புகைப்படத்தை பதிவிறக்கம் செய்து, குறியீட்டைப் பயன்படுத்தி தொடர்ந்து ஆர்டர் செய்வதாக யாங் கருதினார்.

இதனால் வாங்கிற்கு அதிகப்படியான பில் வந்துள்ளது. இதனால் உணவகம் வாங்கை பில் செலுத்த வறுப்புறுத்தவில்லை. மேலும் QR குறியீட்டின் மூலம் செய்யப்பட்ட அனைத்து புதிய ஆர்டர்களையும் புறக்கணித்து வாங்கை ஒரு புதிய மேசைக்கு மாற்றியது. இருப்பினும் உணவை ஆர்டர் செய்தவர்களைக் கண்டறியவோ அல்லது அதைத் தொடர்ந்து செய்வதைத் தடுக்கவோ முடியாது என்று நிர்வாகம் கூறியது.  

எனவே இறுதியாக வாங் பகிர்ந்த ஆர்டரின் ஸ்கிரீன்ஷாட்டின் படி, மொத்தம் 1,850 பிரெஷ் வாத்து இரத்தம், 2,580 ஸ்க்விட் மற்றும் 9,990 இறால் பேஸ்ட் ஆகியவற்றை ஆர்டர் செய்துள்ளனர். ஒவ்வொன்றின் விலையும் சில அமெரிக்க டாலர்கள் ஆகும்.

- மு.குபேரன்.